[highlight_content]

Thirumozhi 3-1

பெரிய திருமொழி

மூன்றாம் பத்து

முதல் திருமொழி

இருந்தண்மா நிலம் ஏனமதாய்

வளைமருப்பினில் அகத்தொடுக்கிக் *

கருந்தண்மா கடல் கண் துயின்றவனிடம்

கமல நன் மலர்த்தேறல்

அருந்தி * இன்னிசை முரன்றெழும் அளிகுலம் பொதுளி அம்பொழிலூடே *

செருந்தி நாண்மலர் சென்றணைந்து உழிதரு

திருவயிந்திரபுரமே.        3.1.1      திருவயிந்திரபுரம்

மின்னும் ஆழியங்கையவன்

செய்யவளுறைதரு திருமார்பன் *

பன்னு நால்மறைப் பல் பொருளாகிய

பரனிடம் * வரைச்சாரல்

பின்னும் மாதவிப் பந்தலில்

பெடைவரப் பிணியவிழ் கமலத்துத் *

தென்னவென்று வண்டு இன்னிசை முரல்தரு

திருவயிந்திரபுரமே.        3.1.2      திருவயிந்திரபுரம்

வையமேழுமுண்டு, ஆலிலை

வைகிய மாயவன் * அடியவர்க்கு

மெய்யனாகிய, தெய்வநாயகனிடம் *

மெய்தகு வரைச்சாரல் *

மொய்கொள் மாதவி செண்பகம் முயங்கிய

முல்லையங் கொடியாடச் *

செய்ய தாமரைச் செழும்பணை திகழ்தரு

திருவயிந்திரபுரமே.        3.1.3      திருவயிந்திரபுரம்

மாறு கொண்டு உடன்றெதிர்ந்த வல்லவுணன்தன்

மார்பகம் இருபிளவாக்

கூறு கொண்டு * அவன் குலமகற்கு

இன்னருள் கொடுத்தவனிடம் * மிடைந்து

சாறு கொண்ட மென்கரும் பிளங்கழை

தகை விசும்புற மணிநீழல் *

சேறு கொண்ட தண்பழனம தெழில் திகழ்

திருவயிந்திரபுரமே.       3.1.4      திருவயிந்திரபுரம்

ஆங்கு மாவலி வேள்வியில் இரந்து சென்று

அகலிடமளந்து * ஆயர்

பூங்கொடிக்கு, இனவிடை பொருதவனிடம் *

பொன்மலர் திகழ் வேங்கை

கோங்கு செண்பகக் கொம்பினில்,

குதிகொடு குரக்கினம் இரைத்தோடித் *

தேன் கலந்த தண்பலங்கனி நுகர்தரு

திருவயிந்திரபுரமே.       3.1.5      திருவயிந்திரபுரம்

கூனுலாவிய மடந்தைதன் கொடுஞ்சொலின் திறத்து

இளங்கொடியோடும்

கானுலாவிய * கருமுகில்

திருநிறத்தவனிடம் * கவினாரும்

வானுலாவிய மதிதவழ் மால்வரை

மாமதிள் புடை சூழத் *

தேனுலாவிய செழும் பொழில் தழுவிய

திருவயிந்திரபுரமே.    3.1.6      திருவயிந்திரபுரம்

மின்னின் நுண்ணிடை மடக்கொடி காரணம்

விலங்கலின் மிசை இலங்கை

மன்னன் * நீள்முடி பொடி செய்த மைந்தனதிடம்

மணிவரை நீழல் *

அன்ன மாமல ரரவிந்தத் தமளியில்

பெடையொடும் இனிதமரச் *

செந்நெலார் கவரிக் குலைவீசு

தண் திருவயிந்திரபுரமே.         3.1.7      திருவயிந்திரபுரம்

விரை கமழ்ந்த மென் கருங்குழல் காரணம்

வில்லிறுத்து * அடல் மழைக்கு

நிரை கலங்கிட, வரை குடையெடுத்தவன்

நிலவிய இடம் * தடமார்

வரை வளம் திகழ் மதகரி மருப்பொடு

மலை வளரகிலுந்தித் *

திரை கொணர்ந்தணை செழுநதி வயல் புகு

திருவயிந்திரபுரமே.      3.1.8      திருவயிந்திரபுரம்

வேல்கொள் கைத்தலத்து அரசர் வெம்போரினில்

விசயனுக்காய் * மணித்தேர்

கோல்கொள் கைத்தலத்து எந்தை பெம்மானிடம்

குலவு தண் வரைச்சாரல் *

கால்கொள் கண்கொடிக் கையெழக்

கமுகிளம் பாளைகள் கமழ் சாரல் *

சேல்கள் பாய்தரு செழுநதி வயல்புகு

திருவயிந்திரபுரமே.      3.1.9      திருவயிந்திரபுரம்

மூவராகிய ஒருவனை மூவுலகுண்டு உமிழ்ந்து அளந்தானைத்*

தேவர் தானவர் சென்று சென்றிறைஞ்சத் தண் திருவயிந்திரபுரத்து

மேவு சோதியை * வேல் வலவன் கலிகன்றி, விரித்துரைத்த *

பாவு தண்தமிழ் பத்திவை பாடிடப் பாவங்கள் பயிலாவே.           3.1.10                திருவயிந்திரபுரம்

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.