Thirumozhi 3-9

பெரிய திருமொழி

மூன்றாம் பத்து

ஒன்பதாம் திருமொழி

சலங்கொண்ட இரணியனது அகல்மார்பம் கீண்டு

தடங்கடலைக் கடைந்து அமுதம் கொண்டுகந்த காளை *

நலங்கொண்ட கருமுகில் போல் திருமேனி அம்மான்

நாள்தோறும் மகிழ்ந்து இனிது மருவியுறை கோயில் *

சலங்கொண்டு மலர்சொரியும் மல்லிகை ஒண்செருந்தி

செண்பகங்கள் மணநாறும் வண்பொழிலினூடே *

வலங்கொண்டு கயலோடி விளையாடு நாங்கூர்

வைகுந்த விண்ணகரம் வணங்கு மடநெஞ்சே !     3.9.1      வைகுந்தவிண்ணகரம்

திண்ணியதோ ரரியுருவாய்த் திசையனைத்தும் நடுங்கத்

தேவரொடு தானவர்கள் திசைப்ப * இரணியனை

நண்ணி அவன் மார்வகலத்து உகிர் மடுத்த நாதன்

நாள்தோறும் மகிழ்ந்து இனிது மருவியுறை கோயில் *

எண்ணில்மிகு பெருஞ் செல்வத்து எழில்விளங்கு மறையும்

ஏழிசையும் கேள்விகளும் இயன்ற பெரும் குணத்தோர் *

மண்ணில் மிகு மறையவர்கள் மலிவெய்து நாங்கூர்

வைகுந்தவிண்ணகரம் வணங்கு மடநெஞ்சே !               3.9.2      வைகுந்தவிண்ணகரம்

அண்டமும் இவ்வலை கடலும் அவனிகளுமெல்லாம்

அமுது செய்த திருவயிற்றன் * அரன் கொண்டு திரியும்

முண்டமது நிறைத்து அவன்கண் சாபமது நீக்கும்

முதல்வனவன் மகிழ்ந்து இனிது மருவியுறை கோயில் *

எண்திசையும் பெருஞ்செந்நெல் இளந்தெங்கு கதலி

இலைக் கொடி ஒண்குலைக் கமுகோடு இசலி வளம் சொரிய *

வண்டு பல இசைபாட மயிலாலு நாங்கூர்

வைகுந்தவிண்ணகரம் வணங்கு மடநெஞ்சே !               3.9.3      வைகுந்தவிண்ணகரம்

கலையிலங்கும் அகலல்குல் அரக்கர் குலக்கொடியைக்

காதொடு மூக்குடன் அரியக் * கதறி அவளோடித்

தலையில் அங்கை வைத்து மலையிலங்கை புகச்செய்த

தடந்தோளன் மகிழ்ந்து இனிது மருவியுறை கோயில் *

சிலையிலங்கு மணிமாடத்துச்சி மிசைச்சூலம்

செழுங்கொண்டலகடு இரியச் சொரிந்த செழுமுத்தம் *

மலையிலங்கு மாளிகைமேல் மலிவெய்து நாங்கூர்

வைகுந்தவிண்ணகரம் வணங்கு மடநெஞ்சே !              3.9.4      வைகுந்தவிண்ணகரம்

மின்னனைய நுண்மருங்குல் மெல்லியற்கா, இலங்கை

வேந்தன் முடியொருபதும் தோளிருபதும் போயுதிரத் *

தன்னிகரில் சிலைவளைத்து அன்று இலங்கை பொடி செய்த

தடந்தோளன் மகிழ்ந்து இனிது மருவியுறை கோயில் *

செந்நெலொடு செங்கமலம் சேல் கயல்கள் வாளை

செங்கழுநீரொடு மிடைந்து கழனி திகழ்ந்து எங்கும் *

மன்னு புகழ் வேதியர்கள் மலிவெய்து நாங்கூர்

வைகுந்த விண்ணகரம் வணங்கு மடநெஞ்சே !            3.9.5      வைகுந்தவிண்ணகரம்

பெண்மைமிகு வடிவுகொடு வந்தவளைப், பெரிய

பேயினது உருவுகொடு மாள உயிருண்டு *

திண்மைமிகு மருதொடு நற்சகடம் இறுத்தருளும்

தேவனவன் மகிழ்ந்து இனிது மருவியுறை கோயில் *

உண்மைமிகு மறையொடு நற்கலைகள் நிறை பொறைகள்

உதவு கொடையென்று இவற்றினொழிவில்லாப் * பெரிய

வண்மைமிகு மறையவர்கள் மலிவெய்து நாங்கூர்

வைகுந்த விண்ணகரம் வணங்கு மடநெஞ்சே !            3.9.6      வைகுந்தவிண்ணகரம்

விளங்கனியை இளங்கன்று கொண்டு உதிர எறிந்து

வேல் நெடுங்கணாய்ச்சியர்கள் வைத்த தயிர் வெண்ணெய்

உளம் குளிர அமுது செய்து * இவ்வுலகுண்ட காளை

உகந்தினிது நாள்தோறும் மருவியுறை கோயில் *

இளம்படி நற்கமுகு குலைத்தெங்கு கொடிச் செந்நெல்

ஈன்கரும்பு கண்வளரக் கால் தடவும் புனலால் *

வளங்கொண்ட பெருஞ்செல்வம் வளரு மணி நாங்கூர்

வைகுந்தவிண்ணகரம் வணங்கு மடநெஞ்சே !              3.9.7      வைகுந்தவிண்ணகரம்

ஆறாத சினத்தின் மிகு நரகனுரம் அழித்த

அடலாழித் தடக்கையன் * அலர்மகட்கும் அரற்கும்

கூறாகக் கொடுத்தருளும் திருவுடம்பன், இமையோர்

குலமுதல்வன் மகிழ்ந்து இனிது மருவியுறை கோயில் *

மாறாத மலர்க் கமலம் செங்கழுநீர் ததும்பி

மதுவெள்ளம் ஒழுக வயலுழவர் மடையடைப்ப *

மாறாத பெருஞ்செல்வம் வளரு மணிநாங்கூர்

வைகுந்தவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே !           3.9.8      வைகுந்தவிண்ணகரம்

வங்கமலி தடங்கடலுள் வானவர்களோடு

மாமுனிவர் பலர் கூடி மாமலர்கள் தூவி *

எங்கள் தனிநாயகனே ! எமக்கு அருளாயென்னும்

ஈசனவன் மகிழ்ந்து இனிது மருவியுறை கோயில் *

செங்கயலும் வாளைகளும் செந்நெலிடைக் குதிப்பச்

சேலுகளும் செழும்பணைசூழ் வீதிதொறும் மிடைந்து *

மங்குல் மதியகடு உரிஞ்சு மணிமாட நாங்கூர்

வைகுந்த விண்ணகரம் வணங்கு மடநெஞ்சே !        3.9.9      வைகுந்தவிண்ணகரம்

சங்குமலி தண்டு முதல் சக்கரம் முன் ஏந்தும்

தாமரைக்கண் நெடிய பிரான் தானமரும் கோயில் *

வங்கமலி கடலுலகில் மலிவெய்து நாங்கூர்

வைகுந்த விண்ணகர் மேல் * வண்டறையும் பொழில் சூழ்

மங்கையர் தம் தலைவன், மருவலர்தம் உடல்துணிய

வாள்வீசும் பரகாலன் கலிகன்றி சொன்ன *

சங்கமலி தமிழ்மாலை பத்து இவை வல்லார்கள்

தரணியொடு விசும்பாளும் தன்மை பெறுவாரே.       3.9.10    வைகுந்தவிண்ணகரம்

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.