Thirumozhi 3-5

பெரிய திருமொழி

மூன்றாம் பத்து

ஐந்தாம் திருமொழி

வந்து உனதடியேன் மனம் புகுந்தாய்

புகுந்ததற்பின் வணங்கும் * என்

சிந்தனைக்கு இனியாய் ! திருவே ! என்னாருயிரே ! *

அந்தளிர் அணியார் அசோகின்

இளந்தளிர்கள் கலந்து * அவை எங்கும்

செந்தழல் புரையும் திருவாலியம்மானே.      3.5.1      திருவாலி

நீலத்தடவரை மாமணி நிகழக் கிடந்தது போல் * அரவணை

வேலைத் தலைக் கிடந்தாய் ! அடியேன் மனத்திருந்தாய் *

சோலைத் தலைக் கணமாமயில் நடமாட

மழை முகில் போன்றெழுந்து * எங்கும்

ஆலைப்புகை கமழும் அணியாலியம்மானே.    3.5.2      திருவாலி,

திருப்பாற்கடல்

நென்னல் போய் வருமென்றென்று

எண்ணி யிராமை, என் மனத்தே புகுந்தது *

இம்மைக் கென்றிருந்தேன் எறிநீர் வளஞ்செறுவில் *

செந்நெற் கூழை வரம்பொரீஇ

அரிவார் முகத்தெழு வாளை போய் * கரும்பு

அந்நற் காடு அணையும் அணியாலியம்மானே.           3.5.3      திருவாலி

மின்னின் மன்னு நுடங்கிடை

மடவார்தம் சிந்தை மறந்து வந்து * நின்

மன்னு சேவடிக்கே, மறவாமை வைத்தாயால் *

புன்னை மன்னு செருந்தி, வண்பொழில்

வாய் அகன் பணைகள் கலந்து * எங்கும்

அன்னம் மன்னும் வயல் அணியாலி அம்மானே.        3.5.4      திருவாலி

நீடு பல்மலர் மாலையிட்டு நின்னிணையடி தொழுதேத்தும் *

என் மனம் வாட நீ நினையேல் மரமெய்த மாமுனிவா ! *

பாடலின் ஒலி சங்கினோசை பரந்து பல்பணையால் மலிந்து * எங்கும்

ஆடலோசை யறா அணியாலியம்மானே.        3.5.5      திருவாலி

கந்தமாமலரெட்டும் இட்டு, நின் காமர்சேவடி கைதொழுதெழும் *

புந்தியேன் மனத்தே புகுந்தாயைப் போகலொட்டேன் *

சந்தி வேள்வி சடங்கு நான்மறை ஓதி ஓதுவித்து ஆதியாய் வரும் *

அந்தணாளர் அறா ! அணியாலியம்மானே !      3.5.6      திருவாலி

உலவு திரைக்கடல் பள்ளிகொண்டு

உவந்து உன்னடியேன் மனம் புகுந்த * அப்

புலவ ! புண்ணியனே ! புகுந்தாயைப் போகலொட்டேன் *

நிலவு மலர்ப் புன்னை நாழல் நீழல்

தண்தாமரை மலரின் மிசை * மலி

அலவன் கண் படுக்கும் அணியாலியம்மானே !           3.5.7      திருவாலி,

திருப்பாற்கடல்

சங்கு தங்கு தடங்கடல்

கடல்மல்லையுள் கிடந்தாய் ! * அருள் புரிந்து

இங்கு என்னுள் புகுந்தாய் ! இனிப் போயினால் அறையோ ! *

கொங்கு செண்பக மல்லிகை மலர் புல்கி

இன்னிள வண்டுபோய் * இளந்

தெங்கின் தாதளையும் திருவாலியம்மானே !   3.5.8      திருவாலி,

திருக்கடல்மல்லை

ஓதி ஆயிரநாமமும் பணிந்தேத்தி

நின் அடைந்தேற்கு * ஒரு பொருள்

வேதியா ! வரையா ! உரையாய் ஒரு மாற்றம் எந்தாய் ! *

நீதியாகிய வேதமாமுனியாளர்

தோற்றம் உரைத்து * மற்றவர்க்கு

ஆதியாயிருந்தாய் ! அணியாலியம்மானே !      3.5.9      திருவாலி,

திருவேங்கடம் திருப்பதி

புல்லி வண்டறையும் பொழில் புடைசூழ்

தென்னாலியிருந்த மாயனைக் *

கல்லின் மன்னு திண்தோள் கலியன் ஒலிசெய்த *

நல்ல இன்னிசை மாலை

நாலு மோரைந்து மொன்றும் நவின்று * தாம் உடன்

வல்லரா யுரைப்பார்க்கு இடமாகும் வானுலகே.       3.5.10    திருவாலி

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.