Thirumozhi 9-10

பெரிய திருமொழி

ஒன்பதாம் பத்து

பத்தாம் திருமொழி

எங்கள் எம்மிறை எம்பிரான்

இமையோர்க்கு நாயகன் * ஏத்தடியவர்

தங்கள் தம் மனத்துப் பிரியாது, அருள் புரிவான் *

பொங்கு தண்ணருவி புதம் செய்யப்

பொன்களே சிதறும் * இலங்கொளி

செங்கமலம் மலரும் திருக்கோட்டியூரானே.      9.10.1    திருக்கோட்டியூர்

எவ்வ நோய் தவிர்ப்பான் எமக்கிறை இன்நகைத் துவர்வாய் *

நிலமகள் செவ்வி தோய வல்லான் திருமாமகட் கினியான் *

மெளவல்மாலை வண்டாடும் மல்லிகை மாலையோடு மணந்து*மாருதம்

தெய்வநாற வரும் திருக்கோட்டியூரானே.         9.10.2    திருக்கோட்டியூர்

வெள்ளியான் கரியான்

மணிநிற வண்ணன் விண்ணவர் தமக்கிறை * எமக்கு

ஒள்ளியான் உயர்ந்தான் உலகேழும் உண்டு உமிழ்ந்தான் *

துள்ளுநீர் மொண்டு கொண்டு சாமரைக்கற்றை சந்தனமுந்தி வந்தசை *

தெள்ளுநீர்ப் புறவில் திருக்கோட்டியூரானே.       9.10.3    திருக்கோட்டியூர்

ஏறுமேறி இலங்குமொண் மழுப்பற்றும்

ஈசற்கு இசைந்து * உடம்பில் ஓர்

கூறு தான் கொடுத்தான் குலமா மகட்கினியான் *

நாறு செண்பக மல்லிகை மலர் புல்கி இன்னிள வண்டு * நல்நறும்

தேறல் வாய் மடுக்கும் திருக்கோட்டியூரானே.             9.10.4    திருக்கோட்டியூர்

வங்கமா கடல் வண்ணன்

மாமணி வண்ணன் விண்ணவர் கோன் * மதுமலர்த்

தொங்கல் நீள்முடியான் நெடியான் படி கடந்தான் *

மங்குல் தோய் மணிமாட வெண்கொடி மாக மீதுயர்ந்தேறி * வானுயர்

திங்கள் தானணவும் திருக்கோட்டியூரானே.    9.10.5    திருக்கோட்டியூர்

காவல னிலங்கைக் கிறை கலங்கச் சரம் செலவுய்த்து * மற்றவன்

ஏவலம் தவிர்த்தான் என்னை யாளுடை எம்பிரான் *

நாவலம் புவி மன்னர் வந்து வணங்க, மாலுறைகின்றது இங்கெனத் *

தேவர் வந்திறைஞ்சும் திருக்கோட்டியூரானே.  9.10.6    திருக்கோட்டியூர்

கன்று கொண்டு விளங்கனி யெறிந்து

ஆநிரைக்கு அழிவென்று * மாமழை

நின்று காத்துகந்தான் நிலமாமகட்கினியான் *

குன்றின் முல்லையின் வாசமும்

குளிர் மல்லிகை மணமும் அளைந்து * இளந்

தென்றல் வந்துலவும் திருக்கோட்டியூரானே.  9.10.7    திருக்கோட்டியூர்

பூங்குருந்தொசித்து ஆனை காய்ந்து

அரிமாச் செகுத்து அடியேனை யாளுகந்து *

ஈங்கு என்னுள் புகுந்தான் இமையோர்கள் தம்பெருமான் *

தூங்கு தண் பலவின் கனி தொகு வாழையின் கனியொடு * மாங்கனி

தேங்கு தண் புனல் சூழ் திருக்கோட்டியூரானே.             9.10.8    திருக்கோட்டியூர்

கோவையின் தமிழ் பாடுவார் குடமாடுவார் * தடமாமலர் மிசை

மேவு நான்முகனில் விளங்கு புரிநூலர் *

மேவுநான்மறைவாணர் ஐவகை வேள்வி ஆறங்கம் வல்லவர் தொழும்*

தேவ தேவ பிரான் திருக்கோட்டியூரானே.    9.10.9    திருக்கோட்டியூர்

ஆலுமாவலவன் கலிகன்றி மங்கையர்தலைவன் *அணிபொழில்

சேல்கள் பாய் கழனித் திருக்கோட்டியூரானை *

நீலமாமுகில் வண்ணனை நெடுமாலை இன்தமிழால் நினைந்த * இந்

நாலும் ஆறும் வல்லார்க்கு இடமாகும் வானுலகே.            9.10.10  திருக்கோட்டியூர்

*********

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.