Thirumozhi 9-3

பெரிய திருமொழி

ஒன்பதாம் பத்து

மூன்றாம் திருமொழி

தன்னை நைவிக்கிலேன் வல்வினையேன், தொழுதும் எழு *

பொன்னை நைவிக்கும், அப்பூஞ் செருந்தி மணநீழல் வாய் *

என்னை நைவித்து எழில் கொண்டு, அகன்ற பெருமானிடம்

புன்னை முத்தம் பொழில் சூழ்ந்து, அழகாய புல்லாணியே.               9.3.1      திருப்புல்லாணி

உருகி நெஞ்சே ! நினைந்திங் கிருந்தென்? தொழுதும் எழு *

முருகு வண்டுண் மலர்க் கைதையின் நீழலின் முன்னொரு நாள் *

பெருகு காதன்மை என்னுள்ளம் எய்தப் பிரிந்தானிடம் *

பொருது முந்நீர்க் கரைக்கே, மணியுந்து புல்லாணியே.           9.3.2      திருப்புல்லாணி

ஏது செய்தால் மறக்கேன் ? மனமே ! தொழுதும் எழு *

தாது மல்கு தடம் சூழ்பொழில், தாழ்வர் தொடர்ந்து * பின்

பேதை நின்னைப் பிரியேன் இனி என்று, அகன்றானிடம் *

போது நாளும் கமழும் பொழில் சூழ்ந்த புல்லாணியே.         9.3.3      திருப்புல்லாணி

கொங்குண் வண்டே கரியாக வந்தான், கொடியேற்கு * முன்

நங்களீசன், நமக்கே பணித்த மொழி செய்திலன் *

மங்கை நல்லாய் தொழுதும் எழு, போய் அவன் மன்னுமூர் *

பொங்கு முந்நீர்க் கரைக்கே, மணியுந்து புல்லாணியே.           9.3.4      திருப்புல்லாணி

உணரில் உள்ளம் சுடுமால் வினையேன், தொழுதும் எழு *

துணரி ஞாழல் நறும்போது, நம் சூழ் குழல் பெய்து * பின்

தணரில் ஆவி தளருமென, அன்பு தந்தானிடம் *

புணரி யோதம் பணிலம், மணியுந்து புல்லாணியே.   9.3.5      திருப்புல்லாணி

எள்கி நெஞ்சே ! நினைந்திங்கிருந்தென் ? தொழுதும் எழு *

வள்ளல் மாயன் மணிவண்ணன், எம்மான் மருவுமிடம் *

கள்ளவிழும் மலர்க் காவியும், தூமடல் கைதையும் *

புள்ளும் அள்ளற் பழனங்களும், சூழ்ந்த புல்லாணியே.            9.3.6      திருப்புல்லாணி

பரவி நெஞ்சே ! தொழுதும் எழு, போய் அவன் பாலமாய் *

இரவும் நாளும், இனிக்கண் துயிலாதிருந்து என் பயன் ? *

விரவி முத்தம் நெடுவெண் மணல்மேற் கொண்டு * வெண் திரை

புரவியென்னப் புதம் செய்து, வந்துந்து புல்லாணியே.              9.3.7      திருப்புல்லாணி

அலமும் ஆழிப்படையும் உடையார், நமக்கு அன்பராய் *

சலமதாகித் தகவொன்றிலர், நாம் தொழுதும் எழு *

உலவுகால் நற்கழி யோங்கு, தண்பைம் பொழிலூடு * இசை

புலவு கானல், களிவண்டினம் பாடு புல்லாணியே.    9.3.8      திருப்புல்லாணி

ஓதி நாமங் குளித்து, உச்சி தன்னால் * ஒளிமாமலர்

பாதம் நாளும் பணிவோம், நமக்கே நலமாதலின் *

ஆது தாரா னெனிலும் தரும், அன்றியும் அன்பராய்

போதும் * மாதே தொழுதும், அவன் மன்னு புல்லாணியே.         9.3.9      திருப்புல்லாணி

இலங்கு முத்தும் பவளக் கொழுந்தும், எழில் தாமரை *

புலங்கள் முற்றும் பொழில் சூழ்ந்து, அழகாய புல்லாணி மேல் *

கலங்க லில்லாப் புகழான், கலியனொலி மாலை *

வலங்கொள் தொண்டர்க்கு இடமாவது, பாடில் வைகுந்தமே.      9.3.10    திருப்புல்லாணி

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.