[highlight_content]

Thirumozhi 9-2

பெரிய திருமொழி

ஒன்பதாம் பத்து

இரண்டாம் திருமொழி

பொன்னிவர் மேனி மரதகத்தின்

பொங்கிளஞ் சோதி யகலத்து ஆரம்

மின் * இவர் வாயில் நல்வேத மோதும்

வேதியர், வானவராவர் தோழி ! *

என்னையும் நோக்கி என்னல்குலும் நோக்கி

ஏந்திளங் கொங்கையும் நோக்குகின்றார் *

அன்னை யென்னோக்கு மென்றஞ்சுகின்றேன்

அச்சோ ஒருவரழகியவா !     9.2.1      திருநாகை

தோடவிழ் நீலம் மணங் கொடுக்கும்

சூழ்புனல் சூழ் குடந்தைக் கிடந்த *

சேடர் கொலென்று தெரிக்க மாட்டேன்

செஞ்சுட ராழியும் சங்கும் ஏந்திப் *

பாடக மெல்லடியார் வணங்கப்

பன்மணி முத்தொடு இலங்கு சோதி *

ஆடகம் பூண்டு ஒரு நான்கு தோளும்

அச்சோ ஒருவரழகியவா !   9.2.2      திருக்குடந்தை (கும்பகோணம்),

திருநாகை

வேயிருஞ் சோலை விலங்கல் சூழ்ந்த

மெய்ய மணாளர், இவ்வைய மெல்லாம் *

தாயின நாயகராவர் தோழீ !

தாமரைக் கண்களிருந்தவாறு *

சேயிருங் குன்றம் திகழ்ந்த தொப்பச்

செவ்வியவாகி மலர்ந்த சோதி *

ஆயிரம் தோளொடு இலங்கு பூணும்

அச்சோ ஒருவரழகியவா !     9.2.3      திருநாகை,

திருமாலிருஞ்சோலை

வம்பவிழும் துழாய் மாலை தோள்மேல்

கையன ஆழியும் சங்கும் ஏந்தி *

நம்பர் நம் இல்லம் புகுந்து நின்றார்

நாகரிகர் பெரிதும் இளையர் *

செம்பவளம் இவர் வாயின் வண்ணம்

தேவரிவரது உருவம் சொல்லில் *

அம்பவளத் திரளேயும் ஒப்பர்

அச்சோ ஒருவரழகியவா !    9.2.4      திருநாகை

கோழியும் கூடலும் கோயில் கொண்ட

கோவலரே ஒப்பர், குன்றமன்ன *

பாழியந் தோளும் ஓர் நான்குடையர்

பண்டு இவர் தம்மையும் கண்டறியோம் *

வாழியரோ இவர் வண்ணம் எண்ணில்

மாகடல் போன்றுளர் * கையில் வெய்ய

ஆழியொன் றேந்தி ஓர் சங்கு பற்றி

அச்சோ ஒருவரழகியவா !   9.2.5      திருக்கோழி – உறையூர் (நிசுளா,

திருநாகை,

திருக்கூடல் (தென்மதுரை)

வெஞ்சின வேழம் மருப்பொசித்த

வேந்தர் கொல்? * ஏந்திழையார் மனத்தைத்

தஞ்சுடையாளர் கொல்? யான் அறியேன்

தாமரைக் கண்கள் இருந்தவாறு *

கஞ்சனை யஞ்ச முன் கால் விசைத்த

காளையராவர், கண்டார் வணங்கும் *

அஞ்சன மாமலையேயும் ஒப்பர்

அச்சோ ஒருவரழகியவா !     9.2.6      திருநாகை

பிணியவிழ் தாமரை மொட்டலர்த்தும்

பேரருளாளர் கொல் ? யான் அறியேன் *

பணியும் என் நெஞ்சமிதென் கொல் ? தோழீ !

பண்டு இவர் தம்மையும் கண்டறியோம் *

அணிகெழு தாமரையன்ன கண்ணும்

அங்கையும் பங்கயம் * மேனி வானத்து

அணிகெழு மாமுகிலேயும் ஒப்பர்

அச்சோ ஒருவரழகியவா !     9.2.7      திருநாகை

மஞ்சுயர் மாமதி தீண்ட நீண்ட

மாலிருஞ்சோலை மணாளர் வந்து * என்

நெஞ்சுள்ளும் கண்ணுள்ளும் நின்று நீங்கார்

நீர்மலையார் கொல் ? நினைக்க மாட்டேன் *

மஞ்சுயர் பொன்மலை மேல் எழுந்த

மாமுகில் போன்றுளர் வந்து காணீர் *

அஞ்சிறைப் புள்ளுமொன்று ஏறி வந்தார்

அச்சோ ஒருவரழகியவா !     9.2.8      திருநாகை,

திருமாலிருஞ்சோலை,

திருநீர்மலை

எண்திசையும் எறி நீர்க்கடலும்

ஏழுலகும் உடனே விழுங்கி *

மண்டி ஓராலிலைப் பள்ளி கொள்ளும்

ஆயர் கொல் ? மாயம் அறிய மாட்டேன் *

கொண்டல் நன்மால் வரையேயும் ஒப்பர்

கொங்கலர் தாமரைக் கண்ணும் வாயும் *

அண்டத்தமரர் பணிய நின்றார்

அச்சோ ஒருவரழகியவா !   9.2.9      திருநாகை

அன்னமும் கேழலும் மீனுமாய

ஆதியை, நாகை அழகியாரைக் *

கன்னிநன் மாமதிள் மங்கை வேந்தன்

காமரு சீர்க் கலிகன்றி * குன்றா

இன்னிசையால் சொன்ன செஞ்சொல் மாலை

ஏழுமிரண்டும் ஓரொன்றும் வல்லார் *

மன்னவராய் உலகாண்டு, மீண்டும்

வானவராய் மகிழ்வெய்துவரே.     9.2.10    திருநாகை

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.