Thiruvoymozhi 6-2

திருவாய்மொழி

ஆறாம் பத்து

இரண்டாம் திருவாய்மொழி

மின்னிடை மடவார்கள் நின்னருள் சூடுவார் முன்பு, நானதஞ்சுவன் *

மன்னுடை யிலங்கை அரண் காய்ந்த மாயவனே ! *

உன்னுடைய சுண்டாயம் நானறிவன் இனிஅதுகொண்டு செய்வதென் ?*

என்னுடைய பந்தும் கழலும் தந்து போகு நம்பீ!          6.2.1

போகுநம்பீ! உன்தாமரைபுரை கண்ணிணையும் செவ்வாய் முறுவலும் *

ஆகுலங்கள் செய்ய அழிதற்கே நோற்றோமே யாம்? *

தோகைமாமயிலார்கள் நின்னருள் சூடுவார் செவியோசை வைத்தெழ *

ஆகள் போகவிட்டுக் குழலூது போயிருந்தே.    6.2.2

போயிருந்து நின்புள்ளுவம் அறியாதவர்க்கு உரைநம்பீ! * நின் செய்ய

வாயிருங் கனியும் கண்களும் விபரீதம் இந்நாள் *

வேயிருந் தடந்தோளினார் இத்திருவருள் பெறுவார்  யவர் கொல்? *

மாயிருங் கடலைக் கடைந்த பெருமானாலே.  6.2.3

ஆலின் நீளிலை ஏழுலகமுண்டு அன்று நீ கிடந்தாய் * உன்மாயங்கள்

மேலை வானவரும் அறியார் இனி எம் பரமே ? *

வேலினேர் தடங்கண்ணினார் விளையாடு சூழலைச் சூழவே நின்று *

காலி மேய்க்க வல்லாய் ! எம்மை நீ கழறேலே.       6.2.4

கழறேல் நம்பீ ! உன் கைதவம்

மண்ணும் விண்ணும் நன்கறியும் * திண் சக்கர

நிழறு தொல் படையாய் ! உனக்கொன்று உணர்த்துவன் நான் *

மழறு தேன்மொழியார்கள் நின்னருள் சூடுவார் மனம் வாடிநிற்க * எம்

குழறு பூவையொடும் கிளியோடும் குழகேலே.        6.2.5

குழகி எங்கள் குழமணன் கொண்டு

கோயின்மை செய்து கன்ம மொன்றில்லை *

பழகி யாமிருப்போம் பரமே இத் திருவருள்கள் ? *

அழகியார் இவ்வுலக மூன்றுக்கும் தேவிமை தகுவார் பலருளர் *

கழகமேறேல் நம்பி ! உனக்கும் இளைதே கன்மமே.          6.2.6

கன்மமன்று எங்கள் கையில் பாவை பறிப்பது, கடல்ஞால முண்டிட்ட *

நின்மலா ! * நெடியாய்! உனக்கேலும் பிழை பிழையே *

வன்மமே சொல்லி எம்மை நீ விளையாடுதி

அது கேட்கில் என்னைமார் *

தன்ம பாவமென்னார் ஒரு நான்று தடி பிணக்கே.     6.2.7

பிணக்கி யாவையும் யாவரும்

பிழையாமல் பேதித்தும் பேதியாதது ஓர் *

கணக்கில் கீர்த்தி வெள்ளக் கதிர் ஞான மூர்த்தியினாய் ! *

இணக்கி எம்மை எம் தோழிமார்

விளையாடப் போதுமினென்னப் போந்தோமை *

உணக்கி நீ வளைத்தால் என் சொல்லார் உகவாதவரே?     6.2.8

உகவையால் நெஞ்சமுள்ளுருகி உன்தாமரைத்தடங்கண் விழிகளின் *

அகவலைப் படுப்பான் அழித்தாய் உன் திருவடியால் *

தகவு செய்திலை எங்கள் சிற்றிலும் யாமடு சிறுசோறும் கண்டு * நின்

முகவொளி திகழ முறுவல் செய்து நின்றிலையே.  6.2.9

நின்றிலங்கு முடியினாய்! இருபத்தோர் கால் அரசு களைகட்ட *

வென்றி நீள் மழுவா ! வியன் ஞாலம் முன் படைத்தாய் ! *

இன்று இவ்வாயர் குலத்தை வீடுய்யத் தோன்றிய கருமாணிக்கச்சுடர் !*

நின் தன்னால் நலிவே படுவோம் என்றும் ஆய்ச்சியோமே.         6.2.10

ஆய்ச்சியாகிய அன்னையால் அன்று

வெண்ணெய் வார்த்தையுள் * சீற்றமுண்டழு

கூத்த அப்பன் தன்னைக் குருகூர்ச் சடகோபன் *

ஏத்திய தமிழ்மாலை ஆயிரத்துள் இவையுமோர் பத்து * இசையொடும்

நாத்தன்னால் நவில உரைப்பார்க்கு, இல்லை நல்குரவே.   6.2.11

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.