Thiruvoymozhi 6-9

திருவாய்மொழி

ஆறாம் பத்து

ஒன்பதாம் திருவாய்மொழி

நீராய் நிலனாய்த் தீயாய், காலாய் நெடுவானாய் *

சீரார் சுடர்கள் இரண்டாய்ச், சிவனாய் அயனானாய் ! *

கூராராழி வெண் சங்கேந்திக், கொடியேன் பால்

வாராய் * ஒரு நாள், மண்ணும் விண்ணும் மகிழவே.              6.9.1

மண்ணும் விண்ணும் மகிழக், குறளாய் வலங் காட்டி *

மண்ணும் விண்ணும் கொண்ட, மாய அம்மானே ! *

நண்ணி உனை நான், கண்டுகந்து கூத்தாட *

நண்ணி ஒரு நாள், ஞாலத்தூடே நடவாயே.       6.9.2

ஞாலத்தூடே நடந்தும், நின்றும் கிடந்திருந்தும் *

சாலப் பல நாள், உகந்தோறு உயிர்கள் காப்பானே !*

கோலத் திருமாமகளோடு, உன்னைக் கூடாதே *

சாலப் பல நாள், அடியேன் இன்னும் தளர்வேனோ ?                 6.9.3

தளர்ந்தும் முறிந்தும், சகடவசுரர் உடல் வேறாப் *

பிளந்து வீயத், திருக்காலாண்ட பெருமானே ! *

கிளர்ந்து பிரமன் சிவன், இந்திரன் விண்ணவர் சூழ *

விளங்க ஒரு நாள், காண வாராய் விண் மீதே.              6.9.4

விண் மீதிருப்பாய் ! மலைமேல் நிற்பாய் ! கடற் சேர்ப்பாய் ! *

மண் மீதுழல்வாய் ! இவற்றுளெங்கும் மறைந்துறைவாய் ! *

எண் மீதியன்ற புறவண்டத்தாய் !, எனதாவி *

உள் மீதாடி, உருக் காட்டாதே ஒளிப்பாயோ ?     6.9.5      திருவேங்கடம் திருப்பதி,

திருப்பாற்கடல், பரமபதம்

பாயோரடி வைத்து, அதன் கீழ்ப் பரவை நிலமெல்லாம்

தாய் * ஓரடியால், எல்லா உலகும் தடவந்த

மாயோன் !* உன்னைக் காண்பான், வருந்தி எனை நாளும் *

தீயோடு உடன் சேர் மெழுகாய், உலகில் திரிவேனோ ?         6.9.6

உலகில் திரியும் கரும கதியாய், உலகுமாய் *

உலகுக்கே ஓருயிருமானாய், புறவண்டத்து *

அலகில் பொலிந்த, திசை பத்தாய அருவேயோ ! *

அலகில் பொலிந்த, அறிவிலேனுக்கு அருளாயே.         6.9.7

அறிவிலேனுக்கு அருளாய், அறிவாருயிரானாய் ! *

வெறி கொள் சோதி மூர்த்தி !, அடியேன் நெடுமாலே ! *

கிறி செய்து என்னைப் புறத்திட்டு, இன்னம் கெடுப்பாயோ ? *

பிறிதொன்றறியா அடியேன், ஆவி திகைக்கவே.            6.9.8

ஆவி திகைக்க, ஐவர் குமைக்கும் சிற்றின்பம் *

பாவியேனைப், பல நீ காட்டிப் படுப்பாயோ? *

தாவி வையம் கொண்ட, தடந் தாமரைகட்கே *

கூவிக் கொள்ளும் காலம், இன்னம் குறுகாதோ ?          6.9.9

குறுகா நீளா, இறுதி கூடா எனையூழி *

சிறுகா பெருகா, அளவி லின்பம் சேர்ந்தாலும் *

மறு காலின்றி மாயோன் ! உனக்கே யாளாகும் *

சிறு காலத்தை யுறுமோ ? அந்தோ தெரியிலே.       6.9.10

தெரிதல் நினைதல், எண்ணலாகாத் திருமாலுக்கு *

உரிய தொண்டர் தொண்டர் தொண்டன், சடகோபன் *

தெரியச் சொன்ன ஓராயிரத்துள் இப்பத்தும் *

உரிய தொண்டராக்கும், உலகமுண்டாற்கே.    6.9.11

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.