[highlight_content]

Thiruvoymozhi 6-4

திருவாய்மொழி

ஆறாம் பத்து

நான்காம் திருவாய்மொழி

குரவையாய்ச்சியரோடு கோத்ததும், குன்றமொன்றேந்தியதும் *

உரவு நீர்ப் பொய்கை நாகம் காய்ந்தது முட்பட மற்றும் பல *

அரவிற் பள்ளிப் பிரான் தன், மாய வினைகளையே அலற்றி *

இரவும் நன்பகலும் தவிர்கிலன், என்ன குறை எனக்கே?     6.4.1

கேயத் தீங்குழலூதிற்றும், நிரை மேய்த்ததும் கெண்டை யொண்கண் *

வாசப் பூங்குழல் பின்னை தோள்கள் மணந்ததும் மற்றும் பல *

மாயக் கோலப்பிரான் தன் செய்கை நினைந்து மனம் குழைந்து *

நேயத்தோடு கழிந்த போது, எனக்கு எவ்வுலகம் நிகரே ?    6.4.2

நிகரில் மல்லரைச் செற்றதும், நிரைமேய்த்ததும் * நீள்நெடுங்கைச்

சிகரமா களிறட்டதும், இவை போல்வனவும் பிறவும் *

புகர்கொள் சோதிப்பிரான் தன், செய்கை நினைந்து புலம்பி என்றும் *

நுகர* வைகல் வைகப் பெற்றேன், எனக்கு என்னினி நோவதுவே ?       6.4.3

நோவ ஆய்ச்சி உரலோடார்க்க, இரங்கிற்றும் * வஞ்சப் பெண்ணைச்

சாவப் பாலுண்டதும், ஊர் சகடமிறச் சாடியதும் *

தேவக் கோலப் பிரான் தன் செய்கை, நினைந்து மனங் குழைந்து *

மேவக் காலங்கள் கூடினேன், எனக்கு என்னினி வேண்டுவதே ?         6.4.4

வேண்டித் தேவரிரக்க வந்து பிறந்ததும், வீங்கிருள் வாய்

பூண்டு * அன்று அன்னை புலம்பப், போய்

அங்கு ஓராய்க் குலம் புக்கதும் *

காண்டலின்றி வளர்ந்து கஞ்சனைத் துஞ்ச வஞ்சம் செய்ததும் *

ஈண்டு நான் அலற்றப் பெற்றேன் எனக்கு என்ன இகலுளதே ?    6.4.5

இகல் கொள் புள்ளைப் பிளந்ததும், இமிலேறுகள் செற்றதுவும் *

உயர் கொள் சோலைக் குருந்தொசித்ததும், உட்பட மற்றும் பல *

அகல் கொள் வையமளந்த மாயன், என்னப்பன் தன் மாயங்களே *

பகலிராப் பரவப் பெற்றேன், எனக்கு என்ன மனப்பரிப்பே ?    6.4.6

மனப் பரிப்போடு அழுக்கு மானிட சாதியில் தான் பிறந்து *

தனக்கு வேண்டுருக் கொண்டு தான் தன சீற்றத்தினை முடிக்கும் *

புனத்துழாய் முடி மாலை மார்பன் என்னப்பன் தன் மாயங்களே *

நினைக்கும் நெஞ்சுடையேன் எனக்கு இனி யார் நிகர் நீணிலத்தே?      6.4.7

நீணிலத்தொடு வான்வியப்ப நிறைபெரும்போர்கள் செய்து *

வாணனாயிரந்தோள் துணித்ததும் உட்பட மற்றும் பல *

மாணியாய் நிலம் கொண்ட மாயன் என்னப்பன் தன் மாயங்களே *

காணும் நெஞ்சுடையேன் எனக்கு இனியென்ன கலக்கமுண்டே?          6.4.8

கலக்க ஏழ்கடல் ஏழ்மலை உலகேழும் கழியக் கடாய் *

உலக்கத் தேர் கொடு சென்ற மாயமும் உட்பட மற்றும் பல *

வலக்கை யாழி இடக்கைச் சங்கம் இவையுடை மால் வண்ணனை *

மலக்கு நாவுடையேற்கு மாறுளதோ இம்மண்ணின் மிசையே ?   6.4.9

மண்மிசைப் பெரும் பாரம் நீங்க ஓர் பாரதமா பெரும் போர்

பண்ணி * மாயங்கள் செய்து சேனையைப் பாழ்பட நூற்றிட்டுப்போய்*

விண்மிசைத் தனதாமமே புக மேவிய சோதி தன்தாள் *

நண்ணி நான் வணங்கப் பெற்றேன் எனக்கு ஆர் பிறர் நாயகரே?         6.4.10

நாயகன் முழுவேழுலகுக்குமாய் முழுவேழுலகும் * தன்

வாயகம் புக வைத்துமிழ்ந்து அவையாய் அவையல்லனுமாம் *

கேசவனடியிணை மிசைக் குருகூர்ச் சடகோபன் சொன்ன *

தூயவாயிரத்து இப்பத்தால் பத்தராவர் துவளின்றியே.      6.4.11

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.