Thiruvoymozhi 6-8

திருவாய்மொழி

ஆறாம் பத்து

எட்டாம் திருவாய்மொழி

பொன்னுலகாளீரோ ? புவனி முழுதாளீரோ ? *

நன்னலப் புள்ளினங்காள் ! வினையாட்டியேன் நான் இரந்தேன் *

முன்னுலகங்க ளெல்லாம் படைத்த, முகில் வண்ணன் கண்ணன் *

என்னலம் கொண்ட பிரான் தனக்கு, என் நிலைமை யுரைத்தே.   6.8.1

மையமர் வாள்நெடுங்கண், மங்கைமார் முன்பு என்கையிருந்து *

நெய்யமர் இன்னடிசில், நிச்சல் பாலொடு மேவீரோ? *

கையமர் சக்கரத்து, என் கனிவாய்ப் பெருமானைக் கண்டு *

மெய்யமர் காதல் சொல்லிக், கிளிகாள் ! விரைந்தோடி வந்தே.    6.8.2

ஓடி வந்து என் குழல் மேல், ஒளி மாமலர் ஊதீரோ? *

கூடிய வண்டினங்காள் ! குரு நாடுடை ஐவர்கட்காய் *

ஆடிய மாநெடுந் தேர்ப் படை, நீறெழச் செற்ற பிரான் *

சூடிய தண் துளவமுண்ட, தூமது வாய்கள் கொண்டே.         6.8.3

தூமது வாய்கள் கொண்டு வந்து என் முல்லைகள் மேல் தும்பிகாள் !*

பூமதுவுண்ணச் செல்லில் வினையேனைப் பொய் செய்தகன்ற *

மாமதுவார் தண்துழாய் முடி வானவர் கோனைக் கண்டு *

யாம் இதுவோ தக்கவாறு ? என்ன வேண்டுங் கண்டீர் நுங்கட்கே.           6.8.4

நுங்கட்கு யானுரைக்கேன் வம்மின் யான் வளர்த்த கிளிகாள் ! *

வெங்கண் புள்ளூர்ந்து வந்து வினையேனை நெஞ்சங் கவர்ந்த *

செங்கண் கருமுகிலைச் செய்ய வாய்ச் செழுங் கற்பகத்தை *

எங்குச் சென்றாகிலும் கண்டு இதுவோ தக்கவாறு ? என்மினே.   6.8.5

என்மின்னு நூல்மார்வன் என்கரும் பெருமான் என் கண்ணன் *

தன்மன்னு நீள்கழல் மேல் தண்துழாய் நமக்கன்றி நல்கான் *

கன்மின்களென்று உம்மை யான் கற்பியா வைத்த மாற்றம் சொல்லி *

சென்மின்கள் தீவினையேன் வளர்த்த சிறு பூவைகளே !    6.8.6

பூவைகள் போல் நிறத்தன், புண்டரீகங்கள் போலும் கண்ணன் *

யாவையும் யாவருமாய், நின்ற மாயன் என்னாழிப் பிரான் *

மாவை வல்வாய் பிளந்த, மதுசூதற்கு என் மாற்றம் சொல்லி *

பாவைகள் ! தீர்க்கிற்றிரே, வினையாட்டியேன் பாசறவே.    6.8.7

பாசற வெய்தி இன்னே, வினையேன் எனையூழி நைவேன் ? *

ஆசறு தூவி வெள்ளைக் குருகே அருள் செய்து ஒரு நாள் *

மாசறு நீலச் சுடர் முடி, வானவர் கோனைக் கண்டு *

ஏசறும் நும்மை யல்லால், மறுநோக்கிலள் பேர்த்து மற்றே.            6.8.8

பேர்த்து மற்றோர் களைகண் வினையாட்டியேன் நான் ஒன்றிலேன் *

நீர்த்திரை மேலுலவி, இரை தேரும் புதாவினங்காள் ! *

கார்த்திரள் மாமுகில் போல் கண்ணன் விண்ணவர் கோனைக் கண்டு *

வார்த்தைகள் கொண்டருளி உரையீர், வைகல் வந்திருந்தே.            6.8.9

வந்திருந்து உம்முடைய, மணிச்சேவலும் நீருமெல்லாம் *

அந்தர மொன்றுமின்றி, அலர் மேலசையும் அன்னங்காள் ! *

என் திருமார்வற்கு என்னை, இன்னவாறு இவள் காண்மினென்று *

மந்திரத் தொன்று உணர்த்தி யுரையீர், மறுமாற்றங்களே.   6.8.10

மாற்றங்க ளாய்ந்து கொண்டு, மதுசூத பிரானடி மேல் *

நாற்றங் கொள் பூம்பொழில் சூழ், குருகூர்ச் சடகோபன் சொன்ன *

தோற்றங்க ளாயிரத்துள், இவையு மொரு பத்தும் வல்லார் *

ஊற்றின் கண் நுண் மணல் போல், உருகா நிற்பர் நீராயே.      6.8.11

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.