Thirumozhi 5-10
பெரிய திருமொழி ஐந்தாம் பத்து பத்தாம் திருமொழி தீதறு நிலத்தொடு எரிகாலினொடு நீர்கெழு விசும்பு மவையாய் * மாசறு மனத்தினொடு உறக்கமொடிறக்கை யவையாய பெருமான் * தாய் செற உளைந்து தயிருண்டு குடமாடு தடமார்வர் தகைசேர் * நாதன் உறைகின்ற நகர் நந்திபுர விண்ணகரம் நண்ணு மனமே ! 5.10.1 நந்திபுரவிண்ணகரம் உய்யும் வகையுண்டு சொனசெய்யில் உலகேழும் ஒழியாமை முனநாள் * மெய்யினளவே அமுது செய்யவல, ஐயனவன் மேவு நகர்தான் * மைய வரிவண்டு மதுவுண்டு கிளையோடு […]
Thirumozhi 5-9
பெரிய திருமொழி ஐந்தாம் பத்து ஒன்பதாம் திருமொழி கையிலங்காழி சங்கன், கருமுகில் திருநிறத்தன் * பொய்யிலன் மெய்யன், தன்தாளடைவரேல் அடிமை யாக்கும் * செய்யலர் கமலமோங்கு, செறிபொழில் தென் திருப்பேர் * பையரவணையான், நாமம் பரவி நானுய்ந்தவாறே ! 5.9.1 திருப்பேர்நகர் வங்கமார் கடல்களேழும், மலையும் வானகமும் மற்றும் * அங்கண்மா ஞாலமெல்லாம், அமுது செய்துமிழ்ந்த எந்தை * திங்கள் மாமுகிலணவு, செறிபொழில் தென் திருப்பேர் * எங்கள் மால் இறைவன், நாமம் ஏத்தி நானுய்ந்தவாறே ! […]
Thirumozhi 5-8
பெரிய திருமொழி ஐந்தாம் பத்து எட்டாம் திருமொழி ஏழை ஏதலன் கீழ்மகனென்னாது இரங்கி, மற்று அவற்கு இன்னருள் சுரந்து * மாழை மான்மடநோக்கி, உன் தோழி உம்பி எம்பி என்றொழிந்திலை * உகந்த தோழன் நீ எனக்கு, இங்கு ஒழியென்ற சொற்கள் வந்து அடியேன் மனத்திருந்திட * ஆழிவண்ண ! நின்னடியிணை யடைந்தேன் அணிபொழில் திருவரங்கத்தம்மானே! 5.8.1 திருவரங்கம் வாதமாமகன் மர்க்கடம் விலங்கு மற்றோர் சாதி யென்றொழிந்திலை * உகந்து காதலாதரம் கடலினும் பெருகச், […]
Thirumozhi 5-7
பெரிய திருமொழி ஐந்தாம் பத்து ஏழாம் திருமொழி பண்டை நான்மறையும் வேள்வியும், கேள்விப் பதங்களும் பதங்களின் பொருளும் * பிண்டமாய் விரிந்த பிறங்கொளி அனலும் பெருகிய புனலொடு நிலனும் * கொண்டல் மாருதமும் குரைகடலேழும் ஏழுமாமலைகளும் விசும்பும் * அண்டமும் தானாய் நின்ற எம்பெருமான் அரங்கமாநகரமர்ந்தானே. 5.7.1 திருவரங்கம் இந்திரன் பிரமன் ஈசனென்றிவர்கள் எண்ணில் பல்குணங்களே இயற்றத் * தந்தையும் தாயும் மக்களும் மிக்க சுற்றமும் சுற்றி நின்றகலாப் பந்தமும் * பந்தமறுப்பதோர் […]
Thirumozhi 5-6
பெரிய திருமொழி ஐந்தாம் பத்து ஆறாம் திருமொழி கைம்மான மழகளிற்றைக், கடல்கிடந்த கருமணியை * மைம்மான மரதகத்தை, மறையுரைத்த திருமாலை * எம்மானை எனக்கு என்றும் இனியானைப், பனிகாத்த அம்மானை * யான் கண்டது, அணிநீர்த் தென்னரங்கத்தே. 5.6.1 திருப்பாற்கடல் பேரானைக், குறுங்குடி யெம்பெருமானை * திருத்தண்கா லூரானைக், கரம்பனூ ருத்தமனை * முத்திலங்கு காரார் திண்கடலேழும், மலையேழ் இவ்வுலகேழுண்டும் * ஆராதென்றிருந்தானைக் கண்டது, தென்னரங்கத்தே. 5.6.2 திருப்பேர்நகர், திருத்தண்கால், திருக்குறுங்குடி ஏனாகி […]
Thirumozhi 5-5
பெரிய திருமொழி ஐந்தாம் பத்து ஐந்தாம் திருமொழி வெருவாதாள் வாய் வெருவி வேங்கடமே ! வேங்கடமே ! என்கின்றாளால் * மருவாளால் என்குடங்கால் வாள்நெடுங்கண் துயில் மறந்தாள் * வண்டார் கொண்டல் உருவாளன் வானவர் தமுயிராளன் ஒலிதிரைநீர்ப் பெளவம் கொண்ட திருவாளன் * என் மகளைச் செய்தனகள் எங்ஙனம் நான் சிந்திக்கேனே ? 5.5.1 திருவரங்கம், திருவேங்கடம் திருப்பதி கலையாளா அகலல்குல் கனவளையும் கையாளா என்செய்கேன் நான் ? * விலையாளா அடியேனை […]
Thirumozhi 5-4
பெரிய திருமொழி ஐந்தாம் பத்து நான்காம் திருமொழி உந்தி மேல் நான்முகனைப் படைத்தான், உலகுண்டவன் எந்தை பெம்மான் * இமையோர்கள் தாதைக்கு, இடம் என்பரால் * சந்தினோடு மணியும் கொழிக்கும் புனல், காவிரி * அந்தி போலும் நிறத்தார் வயல் சூழ், தென்னரங்கமே. 5.4.1 திருவரங்கம் வையமுண்டு, ஆலிலை மேவும் மாயன் * மணிநீள்முடிப் பைகொள் நாகத்தணையான் பயிலும், இடமென்பரால் * தையல் நல்லார் குழல் மாலையும், மற்றவர் தடமுலைச் செய்ய சாந்தும் […]
Thirumozhi 5-2
பெரிய திருமொழி ஐந்தாம் பத்து இரண்டாம் திருமொழி தாம் தம், பெருமையறியார் * தூது வேந்தர்க்காய, வேந்தரூர் போல் * காந்தள் விரல், மென்கலை நன்மடவார் * கூந்தல் கமழும், கூடலூரே. 5.2.1 கூடலூர் செறும், திண்திமி லேறுடைய * பின்னை பெறும் தண் கோலம், பெற்றாரூர் போல் * நறும் தண் தீந்தேன், உண்ட வண்டு * குறிஞ்சி பாடும், கூடலூரே. 5.2.2 கூடலூர் பிள்ளை யுருவாய்த், தயிருண்டு * அடியே னுள்ளம் புகுந்த, ஒருவரூர் […]
Thirumozhi 5-1
பெரிய திருமொழி ஐந்தாம் பத்து முதல் திருமொழி அறிவதரியான் அனைத்துலகுமுடையான் என்னை யாளுடையான் * குறிய மாணுருவாகிய கூத்தன் மன்னி யமருமிடம் * நறிய மலர் மேல் சுரும்பார்க்க எழிலார் மஞ்ஞை நடமாடப் * பொறிகொள் சிறைவண்டு இசை பாடும் புள்ளம்பூதங்குடி தானே. 5.1.1 புள்ளம்பூதங்குடி கள்ளக் குறளாய் மாவலியை வஞ்சித்து உலகம் கைப்படுத்துப் * பொள்ளைக் கரத்த போதகத்தின் துன்பம் தவிர்த்த புனிதனிடம் * பள்ளச் செருவில் கயலுகளப் பழனக் கழனி யதனுள் […]