Thirumozhi 5-6

பெரிய திருமொழி

ஐந்தாம் பத்து

ஆறாம் திருமொழி

கைம்மான மழகளிற்றைக், கடல்கிடந்த கருமணியை *

மைம்மான மரதகத்தை, மறையுரைத்த திருமாலை *

எம்மானை எனக்கு என்றும் இனியானைப், பனிகாத்த

அம்மானை * யான் கண்டது, அணிநீர்த் தென்னரங்கத்தே.  5.6.1      திருப்பாற்கடல்

பேரானைக், குறுங்குடி யெம்பெருமானை * திருத்தண்கா

லூரானைக், கரம்பனூ ருத்தமனை * முத்திலங்கு

காரார் திண்கடலேழும், மலையேழ் இவ்வுலகேழுண்டும் *

ஆராதென்றிருந்தானைக் கண்டது, தென்னரங்கத்தே.        5.6.2      திருப்பேர்நகர்,

திருத்தண்கால்,

திருக்குறுங்குடி

ஏனாகி உலகிடந்து, அன்று இருநிலனும் பெருவிசும்பும் *

தானாய பெருமானைத், தன்னடியார் மனத்து * என்றும்

தேனாகி அமுதாகித் திகழ்ந்தானை * மகிழ்ந்து ஒருகால்

ஆனாயனானானைக் கண்டது, தென்னரங்கத்தே.       5.6.3

வளர்ந்தவனைத் தடங்கடலுள், வலியுருவில் திரிசகடம்

தளர்ந்துதிர உதைத்தவனைத் * தரியாது அன்று இரணியனைப்

பிளந்தவனைப் * பெருநிலம் ஈரடி நீட்டிப், பண்டு ஒரு நாள்

அளந்தவனை * யான் கண்டது, அணிநீர்த் தென்னரங்கத்தே.          5.6.4

நீரழலாய், நெடுநிலனாய் நின்றானை * அன்று அரக்க

னூர் அழலாலுண்டானைக், கண்டார் பின் காணாமே *

பேரழலாய்ப் பெருவிசும்பாய்ப், பின்மறையோர் மந்திரத்தின்

ஆரழலால் உண்டானைக் * கண்டது, தென்னரங்கத்தே.       5.6.5

தஞ்சினத்தைத் தவிர்த்து, அடைந்தார் தவநெறியைத் * தரியாது

கஞ்சனைக் கொன்று அன்றுலகமுண்டுமிழ்ந்த கற்பகத்தை *

வெஞ்சினத்த கொடுந்தொழிலோன் விசையுருவை யசைவித்த

அஞ்சிறைப் புட்பாகனை * யான் கண்டது, தென்னரங்கத்தே.       5.6.6

சிந்தனையைத் தவநெறியைத், திருமாலை * பிரியாது

வந்து எனது மனத்து இருந்த, வடமலையை * வரிவண்டார்

கொந்தணைந்த பொழிற்கோவல் உலகளப்பானடி நிமிர்த்த

அந்தணனை * யான் கண்டது, அணிநீர்த் தென்னரங்கத்தே.       5.6.7      திருக்கோவலூர்,

திருவேங்கடம் திருப்பதி

துவரித்த உடையவர்க்கும், தூய்மையில்லாச் சமணர்க்கும் *

அவர்கட்கு அங்கு அருளில்லா, அருளானை * தன்னடைந்த

எமர்கட்கும் அடியேற்கும், எம்மாற்கும் எம்மனைக்கும் *

அமரர்க்கும் பிரானாரைக் கண்டது, தென்னரங்கத்தே.          5.6.8

பொய் வண்ணம் மனத்தகற்றிப் புலனைந்தும் செல வைத்து *

மெய் வண்ணம் நினைந்தவர்க்கு மெய்ந்நின்ற வித்தகனை *

மை வண்ணம் கருமுகில் போல், திகழ்வண்ண மரதகத்தின் *

அவ்வண்ண வண்ணனை யான் கண்டது தென்னரங்கத்தே.      5.6.9

ஆமருவி நிரைமேய்த்த அணியரங்கத்தம்மானைக் *

காமருசீர்க் கலிகன்றி, ஒலிசெய்த மலிபுகழ்சேர் *

நாமருவு தமிழ்மாலை, நாலிரண்டோ டிரண்டினையும் *

தாமருவி வல்லார்மேல், சாரா தீவினை தாமே.        5.6.10

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.