Thirumozhi 5-5

பெரிய திருமொழி

ஐந்தாம் பத்து

ஐந்தாம் திருமொழி

வெருவாதாள் வாய் வெருவி

வேங்கடமே ! வேங்கடமே ! என்கின்றாளால் *

மருவாளால் என்குடங்கால் வாள்நெடுங்கண்

துயில் மறந்தாள் * வண்டார் கொண்டல்

உருவாளன் வானவர் தமுயிராளன்

ஒலிதிரைநீர்ப் பெளவம் கொண்ட

திருவாளன் * என் மகளைச் செய்தனகள்

எங்ஙனம் நான் சிந்திக்கேனே ?         5.5.1      திருவரங்கம்,

திருவேங்கடம் திருப்பதி

கலையாளா அகலல்குல் கனவளையும்

கையாளா என்செய்கேன் நான் ? *

விலையாளா அடியேனை வேண்டுதியோ ?

வேண்டாயோ ? என்னும் * மெய்ய

மலையாளன் வானவர் தம் தலையாளன்

மராமரமேழெய்த வென்றிச்

சிலையாளன் * என் மகளைச் செய்தனகள்

எங்ஙனம் நான் சிந்திக்கேனே ?         5.5.2      திருவரங்கம்,

திருமெய்யம்

மானாய மென்னோக்கி வாள்நெடுங்கண்

நீர்மல்கும், வளையும் சோரும் *

தேனாய நறுந்துழாய் அலங்கலின்

திறம் பேசி, உறங்காள் காண்மின் *

கானாயன் கடிமனையில் தயிருண்டு

நெய்பருக, நந்தன் பெற்ற

ஆனாயன் * என் மகளைச் செய்தனகள்

அம்மனைமீர் அறிகிலேனே ?               5.5.3      திருவரங்கம்

தாய்வாயிற் சொற் கேளாள்

தன்னாயத்தோடு அணியாள் * தடமென் கொங்கை

யே ஆரச்சாந்தணியாள்

எம்பெருமான் ! திருவரங்கம் எங்கே ? என்னும் *

பேய்மாய முலையுண்டு இவ்வுலகுண்ட

பெருவயிற்றன் * பேசில் நங்காய் !

மாமாயன் என்மகளைச் செய்தனகள்

மங்கைமீர் ! மதிக்கிலேனே ?           5.5.4      திருவரங்கம்

பூண்முலைமேல் சாந்தணியாள்

பொருகயல்கண் மையெழுதாள் பூவை பேணாள் *

ஏணறியாள் எத்தனையும்

எம்பெருமான் திருவரங்கம் எங்கே ? என்னும் *

நாண் மலராள் நாயகனாய்

நாமறிய ஆய்ப்பாடி வளர்ந்த நம்பி *

ஆண்மகனாய் என் மகளைச் செய்தனகள்

அம்மனைமீர் ! அறிகிலேனே ?      5.5.5      திருவரங்கம்,

திருவாய்ப்பாடி (கோகுலம்)

தாதாடு வனமாலை தாரானோ ?

என்றென்றே, தளர்ந்தாள் காண்மின் *

யாதானுமொன்று உரைக்கில்

எம்பெருமான் திருவரங்கமென்னும் * பூமேல்

மாதாளன் குடமாடி மதுசூதன்

மன்னர்க்காய் முன்னம் சென்ற

தூதாளன் * என்மகளைச் செய்தனகள்

எங்ஙனம் நான் சொல்லுகேனே?      5.5.6      திருவரங்கம்

வாராளும் இளங்கொங்கை வண்ணம்,

வேறாயினவாறு எண்ணாள் * எண்ணில்

பேராளன் பேரல்லால் பேசாள்

இப்பெண் பெற்றேன் என்செய்கேன் நான் ? *

தாராளன் தண்குடந்தை நகராளன்

ஐவர்க்காய் அமரிலுய்த்த

தேராளன் * என்மகளைச் செய்தனகள்

எங்ஙனம் நான் செப்புகேனே ?           5.5.7      திருவரங்கம்,

திருக்குடந்தை (கும்பகோணம்)

உறவாதும் இலள் என்றென்று

ஒழியாது பலரேசும் அலராயிற்றால் *

மறவாதே எப்பொழுதும்

மாயவனே ! மாதவனே ! என்கின்றாளால் *

பிறவாத பேராளன் பெண்ணாளன் மண்ணாளன்

விண்ணோர் தங்கள்

அறவாளன் * என்மகளைச் செய்தனகள்

அம்மனைமீர் ! அறிகிலேனே ?          5.5.8      திருவரங்கம்

பந்தோடு கழல் மருவாள் பைங்கிளியும்

பாலூட்டாள், பாவை பேணாள் *

வந்தானோ, திருவரங்கன், வாரானோ ?

என்றென்றே வளையும் சோரும் *

சந்தோகன் பெளழியன் ஐந்தழலோம்பு

தைத்திரியன் சாமவேதி *

அந்தோ ! வந்து என் மகளைச் செய்தனகள்

அம்மனைமீர் ! அறிகிலேனே ?       5.5.9      திருவரங்கம்

சேலுகளும் வயல் புடைசூழ்

திருவரங்கத்தம்மானைச் சிந்தை செய்த *

நீலமலர்க்கண் மடவாள் நிறையழிவைத்

தாய் மொழிந்த அதனை * நேரார்

காலவேல் பரகாலன், கலிகன்றி

ஒலிமாலை கற்று வல்லார் *

மாலைசேர் வெண்குடைக்கீழ், மன்னவராய்ப்

பொன்னுலகில் வாழ்வர் தாமே.    5.5.10    திருவரங்கம்

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.