Thirumozhi 7-1

பெரிய திருமொழி

ஏழாம் பத்து

முதல் திருமொழி

 

கறவா மடநாகு, தன் கன்று உள்ளினாற் போல் *

மறவாது அடியேன், உன்னையே அழைக்கின்றேன் *

நறவார் பொழில் சூழ், நறையூர் நின்ற நம்பி ! *

பிறவாமை எனைப் பணி, எந்தை பிரானே !      7.1.1      திருநறையூர்

வற்றா முது நீரொடு, மால் வரை யேழும் *

துற்றாக முன் துற்றிய, தொல் புகழோனே ! *

அற்றேன் அடியேன், உன்னையே அழைக்கின்றேன் *

பெற்றேன் அருள் தந்திடு, என் எந்தை பிரானே !          7.1.2      திருநறையூர்

தாரேன் பிறர்க்கு, உன்னருள் என்னிடை வைத்தாய் *

ஆரேன், அதுவே பருகிக் களிக்கின்றேன் *

காரேய் கடலே மலையே திருக்கோட்டி

யூரே * உகந்தாயை, உகந்து அடியேனே.  7.1.3      திருநறையூர்,

திருக்கோட்டியூர்,

திருவேங்கடம் திருப்பதி,

திருப்பாற்கடல்

புள் வாய் பிளந்த புனிதா ! என்று அழைக்க *

உள்ளே நின்று, என்னுள்ளம் குளிரும் ஒருவா ! *

கள்வா ! கடல்மல்லைக் கிடந்த கரும்பே ! *

வள்ளால் ! உன்னை எங்ஙனம், நான் மறக்கேனே?     7.1.4      திருநறையூர்,

திருக்கடல்மல்லை

வில்லேர் நுதல், வேல் நெடுங்கண்ணியும் நீயும் *

கல்லார் கடுங்கானம் திரிந்த, களிறே ! *

நல்லாய் ! நரநாரணனே! எங்கள் நம்பி ! *

சொல்லாய் உன்னை யான், வணங்கித் தொழுமாறே.          7.1.5      திருநறையூர்

பனியேய் பரங்குன்றின், பவளத்திரளே ! *

முனியே ! திருமூழிக்களத்து விளக்கே ! *

இனியாய தொண்டரோம் பருகு, இன்னமுதாய

கனியே ! * உன்னைக் கண்டு கொண்டு உய்ந்தொழிந்தேனே.        7.1.6      திருநறையூர்,

திருமூழிக்களம்,

திருப்பிரிதி

கதியேலில்லை, நின்னருளல்லது எனக்கு *

நிதியே ! திருநீர்மலை நித்திலத்தொத்தே ! *

பதியே ! பரவித் தொழும் தொண்டர் தமக்குக்

கதியே ! * உன்னைக் கண்டு கொண்டு உய்ந்தொழிந்தேனே.          7.1.7      திருநறையூர்,

திருநீர்மலை

அத்தா ! அரியே ! என்று உன்னை அழைக்கப் *

பித்தா வென்று பேசுகின்றார், பிறர் என்னை *

முத்தே ! மணிமாணிக்கமே ! முளைக்கின்ற

வித்தே ! * உன்னை எங்ஙனம், நான் விடுகேனே?        7.1.8      திருநறையூர்

தூயாய் ! சுடர் மாமதி போல் உயிர்க்கெல்லாம் *

தாயாயளிக்கின்ற, தண் தாமரைக் கண்ணா ! *

ஆயா ! அலை நீருலகேழும், முன்னுண்ட

வாயா ! உன்னை எங்ஙனம் நான் மறக்கேனே ?           7.1.9      திருநறையூர்

வண்டார் பொழில் சூழ், நறையூர் நம்பிக்கு * என்றும்

தொண்டாய கலியன், ஒலி செய் தமிழ் மாலை *

தொண்டீர்! இவை பாடுமின், பாடி நின்றாட *

உண்டே விசும்பு, உந்தமக்கு இல்லை துயரே.           7.1.10    திருநறையூர்

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.