Thirumozhi 7-3

பெரிய திருமொழி

ஏழாம் பத்து

மூன்றாம் திருமொழி

சினவில் செங்கணரக்கர் உயிர்மாளச்

செற்ற வில்லியென்று, கற்றவர் தந்தம்

மனமுள் கொண்டு * என்றும் எப்போதும் நின்றேத்தும்

மாமுனியை, மரமேழெய்த மைந்தனை *

நனவில் சென்றார்க்கும் நண்ணற்கரியானை

நான் அடியேன் நறையூர் நின்ற நம்பியை

கனவில் கண்டேன் * இன்று கண்டமையால், என்

கண்ணிணைகள் களிப்பக் களித்தேனே.  7.3.1      திருநறையூர்

தாய் நினைந்த கன்றே யொக்க, என்னையும்

தன்னையே நினைக்கச்செய்து * தான் எனக்

காய் நினைந்தருள் செய்யும் அப்பனை

அன்று இவ்வையக முண்டுமிழ்ந்திட்ட

வாயனை * மகரக்குழைக் காதனை

மைந்தனை மதிட்கோவ லிடைகழி

ஆயனை * அமரர்க் கரியேற்றை, என்

அன்பனை யன்றி ஆதரியேனே.     7.3.2      திருநறையூர்,

திருக்கோவலூர்

வந்த நாள் வந்து என்நெஞ்சிடம் கொண்டான்

மற்றோர் நெஞ்சறியான் * அடியேனுடைச்

சிந்தையாய் வந்து தென்புலர்க்கு என்னைச்

சேர்கொடான், இது சிக்கெனப் பெற்றேன் *

கொந்துலாம் பொழில்சூழ் குடந்தைத் தலைக்

கோவினைக், குடமாடிய கூத்தனை *

எந்தையை எந்தை தந்தை தம்மானை

எம்பிரானை எத்தால் மறக்கேனே ?        7.3.3      திருக்குடந்தை (கும்பகோணம்),

திருநறையூர்

உரங்களால் இயன்ற மன்னர் மாளப்

பாரதத்து ஒரு தேரைவர்க்காய்ச் சென்று *

இரங்கி யூர்ந்து அவர்க்கு இன்னருள் செய்யும்

எம்பிரானை * வம்பார் புனல் காவிரி

அரங்கமாளி என்னாளி விண்ணாளி

ஆழிசூழிலங்கை மலங்கச் சென்று

சரங்களாண்ட * தண்தாமரைக் கண்ணனுக்கன்றி

என்மனம் தாழ்ந்து நில்லாதே.         7.3.4      திருவரங்கம்,

திருநறையூர்,

பரமபதம்

ஆங்கு வெந்நரகத்து அழுந்தும் போது

அஞ்சேலென்று அடியேனை அங்கே வந்து

தாங்கு * தாமரையன்ன பொன்னாரடி

எம்பிரானை, உம்பர்க்கணியாய் நின்ற

வேங்கடத்தரியைப் * பரிகீறியை

வெண்ணெயுண்டு உரலினிடை யாப்புண்ட

தீங்கரும்பினைத் * தேனை நன்பாலினை யன்றி

என் மனம் சிந்தை செய்யாதே.       7.3.5      திருநறையூர்,

திருவேங்கடம் திருப்பதி

எட்டனைப் பொழுதாகிலும், என்றும்

என்மனத்தகலாதிருக்கும் புகழ் *

தட்டலர்த்த பொன்னே யலர் கோங்கின்

தாழ் பொழில் திருமாலிருஞ்சோலையங்

கட்டியைக் * கரும்பீன்ற இன்சாற்றைக்

காதலால் மறை நான்கும் முன்னோதிய

பட்டனை * பரவைத் துயிலேற்றை, என்

பண்பனை யன்றிப் பாடல் செய்யேனே.  7.3.6      திருநறையூர்,

திருமாலிருஞ்சோலை,

திருப்பாற்கடல்

பண்ணினின் மொழி யாழ் நரம்பில் பெற்ற

பாலையாகி, இங்கே புகுந்து * என்

கண்ணும் நெஞ்சும் வாயும் இடங்கொண்டான்

கொண்ட பின் மறையோர் மனந்தன்னுள் *

விண்ணுளார் பெருமானை எம்மானை

வீங்குநீர் மகரம் திளைக்கும் கடல்

வண்ணன் * மாமணி வண்ணன் எம் அண்ணல்

வண்ணமேயன்றி வாயுரையாதே.  7.3.7      திருநறையூர்

இனி எப்பாவம் வந்தெய்தும் ? சொல்லீர்

எமக்கு இம்மையே அருள் பெற்றமையால் * அடும்

துணியைத் தீர்த்து இன்பமே தருகின்றது, ஓர்

தோற்றத் தொன்னெறியை * வையம் தொழப்படும்

முனியை, வானவரால் வணங்கப் படும்

முத்தினைப், பத்தர்தாம் நுகர்கின்றதோர்

கனியை * காதல் செய்து என்னுள்ளம் கொண்ட

கள்வனை, இன்று கண்டு கொண்டேனே.             7.3.8      திருநறையூர்

என் செய்கேன் அடியேன் ? உரையீர் இதற்கு, என்றும்

என் மனத்தே இருக்கும் புகழ் *

தஞ்சை யாளியைப் பொன் பெயரோன்

நெஞ்சம் அன்று இடந்தவனைத் தழலே புரை *

மின்செய் வாளரக்கன் நகர் பாழ்படச்

சூழ்கடல் சிறை வைத்து * இமையோர் தொழும்

பொன் செய் மால் வரையை, மணிக் குன்றினையன்றி

என் மனம் போற்றி யென்னாதே.   7.3.9      தஞ்சை மாமணிக் கோயில்,

திருநறையூர்

தோடு விண்டலர் பூம்பொழில் மங்கையர்

தோன்றல், வாள் கலியன் திருவாலி

நாடன் * நன்னறையூர் நின்ற நம்பி தன்

நல்ல மாமலர்ச் சேவடி, சென்னியில்

சூடியும் தொழுதும் எழுந்தாடியும் *

தொண்டர்கட்கு, அவன் சொன்ன சொல் மாலை *

பாடல் பத்திவை பாடுமின் தொண்டீர் !

பாட நும்மிடைப் பாவம் நில்லாவே.      7.3.10    திருநறையூர்

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.