Thirumozhi 7-10

பெரிய திருமொழி

ஏழாம் பத்து

பத்தாம் திருமொழி

பெரும்புறக் கடலை அடலேற்றினைப்

பெண்ணை ஆணை * எண்ணில் முனிவர்க்கருள்

தரும் தவத்தை, முத்தின் திரள் கோவையைப்

பத்தராவியை நித்திலத் தொத்தினை *

அரும்பினை அலரை அடியேன் மனத்தாசையை

அமுதம் பொதியின் சுவைக்

கரும்பினைக் * கனியைச் சென்று நாடிக்

கண்ணமங்கையுள் கண்டு கொண்டேனே.            7.10.1    திருக்கண்ணமங்கை

மெய்ந்நலத் தவத்தைத் திவத்தைத் தரும்

மெய்யைப் பொய்யினை கையில் ஓர் சங்குடை *

மைந்நிறக் கடலைக் கடல் வண்ணனை மாலை

ஆலிலைப் பள்ளி கொள் மாயனை *

நென்னலைப் பகலை இற்றை நாளினை

நாளையாய் வரும் திங்களை ஆண்டினைக் *

கன்னலைக் கரும்பினிடைத் தேறலைக்

கண்ணமங்கையுள் கண்டு கொண்டேனே.            7.10.2    திருக்கண்ணமங்கை

எங்களுக்கு அருள் செய்கின்ற ஈசனை

வாசவார் குழலாள் மலைமங்கை தன்

பங்கனைப் * பங்கில் வைத்துகந்தான் தன்னைப்

பான்மையைப் பனிமா மதியம் தவழ்

மங்குலைச் * சுடரை வடமாமலை

யுச்சியை, நச்சி நாம் வணங்கப் படும்

கங்குலை * பகலைச் சென்று நாடிக்

கண்ணமங்கையுள் கண்டு கொண்டேனே.            7.10.3    திருக்கண்ணமங்கை,

திருவேங்கடம் திருப்பதி

பேய்முலைத்தலை நஞ்சுண்ட பிள்ளையைத்

தெள்ளியார் வணங்கப் படும் தேவனை *

மாயனை மதிட் கோவலிடைகழி மைந்தனை

அன்றி அந்தணர் சிந்தையுள்

ஈசனை * இலங்கும் சுடர்ச் சோதியை

எந்தையை எனக்கு எய்ப்பினில் வைப்பினைக் *

காசினை மணியைச் சென்று நாடிக்

கண்ணமங்கையுள் கண்டு கொண்டேனே.            7.10.4    திருக்கண்ணமங்கை,

திருக்கோவலூர்

ஏற்றினை இமயத்துளெம் மீசனை

இம்மையை மறுமைக்கு மருந்தினை *

ஆற்றலை அண்டத்தப் புறத்துய்த்திடும்

ஐயனைக், கையிலாழி யொன்றேந்திய

கூற்றினைக் * குருமாமணிக் குன்றினை

நின்றவூர் நின்ற நித்திலத் தொத்தினை *

காற்றினைப் புனலைச் சென்று நாடிக்

கண்ணமங்கையுள் கண்டு கொண்டேனே.            7.10.5    திருக்கண்ணமங்கை,

திருநின்றவூர்,

திருப்பிரிதி

துப்பனைத் துரங்கம் படச் சீறிய தோன்றலைச்

சுடர்வான் கலன் பெய்தது ஓர்

செப்பினைத் * திருமங்கை மணாளனைத்

தேவனைத், திகழும் பவளத்தொளி

யொப்பனை * உலகேழினை ஊழியை

ஆழியேந்திய கையனை, அந்தணர்

கற்பினைக் * கழுநீர் மலரும் வயல்,

கண்ணமங்கையுள் கண்டு கொண்டேனே.            7.10.6    திருக்கண்ணமங்கை

திருத்தனைத் திசை நான்முகன் தந்தையைத்

தேவதேவனை மூவரில் முன்னிய

விருத்தனை * விளங்கும் சுடர்ச் சோதியை

விண்ணை மண்ணினைக் கண்ணுதல் கூடிய

அருத்தனை * அரியைப் பரிகீறிய அப்பனை

அப்பிலா ரழலாய் நின்ற

கருத்தனைக் * களிவண்டறையும் பொழில்

கண்ணமங்கையுள் கண்டு கொண்டேனே.            7.10.7    திருக்கண்ணமங்கை

வெஞ்சினக் களிற்றை விளங்காய் வீழக்

கன்று வீசிய ஈசனைப் * பேய்மகள், துஞ்ச

நஞ்சு சுவைத்துண்ட தோன்றலைத்

தோன்றல் வாளரக்கன் கெடத் தோன்றிய

நஞ்சினை * அமுதத்தினை நாதனை

நச்சுவாருச்சி மேல் நிற்கும் நம்பியைக் *

கஞ்சனைத் துஞ்ச வஞ்சித்த வஞ்சனைக்

கண்ணமங்கையுள் கண்டு கொண்டேனே.            7.10.8    திருக்கண்ணமங்கை

பண்ணினைப் பண்ணில் நின்றதோர் பான்மையைப்

பாலுள் நெய்யினை மாலுருவாய் நின்ற

விண்ணினை * விளங்கும் சுடர்ச்சோதியை

வேள்வியை விளக்கி னொளி தன்னை *

மண்ணினை மலையை அலை நீரினை

மாலை மாமதியை மறையோர் தங்கள்

கண்ணினைக் * கண்களாரளவும் நின்று

கண்ணமங்கையுள் கண்டு கொண்டேனே.            7.10.9    திருக்கண்ணமங்கை

கண்ணமங்கையுள் கண்டு கொண்டேனென்று

காதலால் கலிகன்றி உரை செய்த *

வண்ண வொண் தமிழொன்பதோடொன்றிவை

வல்லராய் உரைப்பார் * மதியம் தவழ்

விண்ணில் விண்ணவராய் மகிழ்வெய்துவர்

மெய்ம்மை சொல்லில், வெண்சங்க மொன்றேந்திய

கண்ண ! * நின் தனக்கும் குறிப்பாகில்

கற்கலாம் கவியின் பொருள் தானே.      7.10.10  திருக்கண்ணமங்கை

********

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.