Thirumozhi 7-7

பெரிய திருமொழி

ஏழாம் பத்து

ஏழாம் திருமொழி

திருவுக்கும் திருவாகிய செல்வா !

தெய்வத்துக்கரசே ! செய்ய கண்ணா ! *

உருவச் செஞ்சுடராழி வல்லானே !

உலகுண்ட ஒருவா ! திருமார்பா ! *

ஒருவற்காற்றி உய்யும் வகையென்றால்

உடன் நின்று ஐவர் என்னுள் புகுந்து * ஒழியாது

அருவித் தின்றிட அஞ்சி நின்னடைந்தேன்

அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே !         7.7.1      திருவழுந்தூர்

பந்தார் மெல்விரல் நல்வளைத் தோளி

பாவை பூமகள் தன்னொடும் உடனே

வந்தாய் * என் மனத்தே மன்னி நின்றாய்

மால்வண்ணா ! மழை போலொளி வண்ணா ! *

சந்தோகா ! பெளழியா ! தைத்திரியா !

சாமவேதியனே ! நெடுமாலே ! *

அந்தோ ! நின்னடி யன்றி மற்றறியேன்

அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே !         7.7.2      திருவழுந்தூர்

நெய்யா ராழியும் சங்கமும் ஏந்தும்

நீண்ட தோளுடையாய் ! * அடியேனைச்

செய்யாத வுலகத்திடைச் செய்தாய்

சிறுமைக்கும் பெருமைக்கும் உள் புகுந்து *

பொய்யால் ஐவர் என் மெய் குடியேறிப்

போற்றி வாழ்வதற்கு அஞ்சி நின்னடைந்தேன் *

ஐயா ! நின்னடி யன்றி மற்றறியேன்

அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே!            7.7.3      திருவழுந்தூர்

பரனே ! பஞ்சவன் பெளழியன் சோழன்

பார் மன்னர் மன்னர் தாம் பணிந்தேத்தும்

வரனே ! * மாதவனே! மதுசூதா !

மற்றோர் நல்துணை நின்னலால் இலேன் காண் *

நரனே ! நாரணனே ! திருநறையூர் நம்பீ !

எம்பெருமான் ! உம்பராளும்

அரனே ! * ஆதிவராகம் முனானாய் !

அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே !         7.7.4      திருவழுந்தூர்,

திருநறையூர்

விண்டான் விண்புக வெஞ்சமத்து, அரியாய்ப்

பரியோன் மார்வகம் பற்றிப் பிளந்து *

பண்டு ஆனுய்ய ஓர் மால் வரை யேந்தும்

பண்பாளா ! பரனே ! பவித்திரனே ! *

கண்டேன் நான் கலியுகத்ததன் தன்மை

கருமமாவதும் என் தனக்கு அறிந்தேன் *

அண்டா ! நின்னடி யன்றி மற்றறியேன்

அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே !         7.7.5      திருவழுந்தூர்

தோயா இன் தயிர் நெய்யமுதுண்ணச்

சொன்னார் சொல்லி நகும் பரிசே * பெற்ற

தாயால் ஆப்புண்டிருந்து அழுதேங்கும்

தாடாளா ! தரையோர்க்கும் விண்ணோர்க்கும்

சேயாய் ! * கிரேத திரேத துவாபர கலியுகம்,

இவை நான்கும் முனானாய் ! *

ஆயா ! நின்னடியன்றி மற்றறியேன்

அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே !        7.7.6      திருவழுந்தூர்

கறுத்துக் கஞ்சனை அஞ்ச முனிந்தாய் !

கார்வண்ணா ! கடல் போலொளி வண்ணா ! *

இறுத்திட்டு ஆன் விடையேழும் முன்வென்றாய் !

எந்தாய் ! அந்தரமேழும் முனானாய் ! *

பொறுத்துக் கொண்டிருந்தால் பொறுக்கொணாப்

போகமே நுகர்வான் புகுந்து * ஐவர்

அறுத்துத் தின்றிட அஞ்சி நின்னடைந்தேன்

அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே !      7.7.7      திருவழுந்தூர்

நெடியானே ! கடியார் கலிநம்பீ !

நின்னையே நினைந்து இங்கு இருப்பேனை *

கடியார் காளைய ரைவர் புகுந்து

காவல் செய்த அக்காவலைப் பிழைத்துக் *

குடி போந்து உன் அடிக்கீழ் வந்து புகுந்தேன்

கூறை சோறு இவை தந்தெனக் கருளி *

அடியேனைப் பணியாண்டு கொள் எந்தாய் !

அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே!            7.7.8      திருவழுந்தூர்

கோவாய் ஐவர் என் மெய் குடியேறிக்

கூரை சோறிவை தாவென்று குமைத்துப்

போகார் * நான் அவரைப் பொறுக்ககில்லேன்

புனிதா ! புட்கொடியாய் ! நெடுமாலே ! *

தீவாய் நாகணையில் துயில்வானே !

திருமாலே ! இனிச் செய்வதொன்று அறியேன் *

ஆ ! ஆ ! என்றடியேற்கு இறை இறங்காய்

அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே.            7.7.9      திருவழுந்தூர்

அன்ன மன்னு பைம்பூம் பொழில் சூழ்ந்த

அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானை *

கன்னி மன்னு திண்தோள் கலிகன்றி

ஆலிநாடன், மங்கைக் குலவேந்தன் *

சொன்ன வின்தமிழ் நன்மணிக் கோவை

தூய மாலை இவை பத்தும் வல்லார் *

மன்னி மன்னவராய் உலகாண்டு

மான வெண்குடைக் கீழ் மகிழ்வாரே.    7.7.10    திருவழுந்தூர்

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.