Thirumozhi 7-9

பெரிய திருமொழி

ஏழாம் பத்து

ஒன்பதாம் திருமொழி

கள்ளம் மனம் விள்ளும் வகை, கருதிக் கழல் தொழுவீர் *

வெள்ளம் முதுபரவைத், திரை விரியக் * கரையெங்கும்

தெள்ளும் மணிதிகழும், சிறுபுலியூர்ச் சலசயனத்து

உள்ளும் * எனதுள்ளத்துள்ளும், உறைவாரை யுள்ளீரே !      7.9.1      சிறுபுலியூர்

தெருவில் திரி சிறுநோன்பியர், செஞ்சோற்றொடு கஞ்சி

மருவிப் * பிரிந்தவர் வாய்மொழி மதியாது, வந்தடைவீர் ! *

திருவிற் பொலி மறையோர், சிறுபுலியூர்ச் சலசயனத்து *

உருவக் குறளடிகள், அடி யுணர்மின் உணர்வீரே.       7.9.2      சிறுபுலியூர்

பறையும் வினை தொழுதுய்ம்மினீர் பணியும் சிறுதொண்டீர் ! *

அறையும் புனல் ஒருபால், வயல் ஒருபால் பொழில் ஒருபால் *

சிறை வண்டின மறையும், சிறுபுலியூர்ச் சலசயனத்து

உறையும் * இறையடி யல்லது, ஒன்று இறையும் அறியேனே.     7.9.3      சிறுபுலியூர்

வானார் மதிபொதியும் சடை, மழுவாளியொடு ஒருபால் *

தானாகிய தலைவனவன், அமரர்க் கதிபதியாம் *

தேனார் பொழில் தழுவும், சிறுபுலியூர்ச் சலசயனத்து

ஆனாயனது * அடியல்லது, ஒன்று அறியேன் அடியேனே.  7.9.4      சிறுபுலியூர்

நந்தா நெடு நரகத்திடை நணுகா வகை * நாளும்

எந்தாய் ! என, இமையோர் தொழுதேத்தும் இடம் * எறிநீர்ச்

செந்தாமரை மலரும், சிறுபுலியூர்ச் சலசயனத்து *

அந்தாமரை யடியாய் ! உனதடியேற்கு அருள் புரியே.       7.9.5      சிறுபுலியூர்

முழுநீலமும் மலராம்பலும், அரவிந்தமும் விரவிக் *

கழுநீரொடு மடவாரவர், கண்வாய் முகமலரும் *

செழுநீர் வயல் தழுவும், சிறுபுலியூர்ச் சலசயனம் *

தொழு நீர்மை யதுடையார், அடி தொழுவார் துயரிலரே.      7.9.6      சிறுபுலியூர்

சேயோங்கு தண் திருமாலிருஞ்சோலை மலை, உறையும்

மாயா ! * எனக்குரையாய் இது, மறை நான்கினுளாயோ ? *

தீயோம்பு கைமறையோர், சிறுபுலியூர்ச் சலசயனத்

தாயோ ? * உனதடியார் மனத்தாயோ ? அறியேனே.    7.9.7      சிறுபுலியூர்,

திருமாலிருஞ்சோலை

மையார் வரிநீலம், மலர்க்கண்ணார் மனம் விட்டிட்டு *

உய்வான், உனகழலே தொழுது எழுவேன் கிளி மடவார் *

செவ்வாய் மொழி பயிலும், சிறுபுலியூர்ச் சலசயனத்து *

ஐவா யரவணைமேல், உறை அமலா ! அருளாயே.    7.9.8      சிறுபுலியூர்

கருமா முகிலுருவா ! கனலுருவா ! புனலுருவா ! *

பெருமால் வரையுருவா ! பிறவுருவா, நினதுருவா ! *

திருமாமகள் மருவும், சிறுபுலியூர்ச் சலசயனத்து *

அருமா கடலமுதே ! உனது அடியே சரணாமே.      7.9.9      சிறுபுலியூர்

சீரார் நெடுமறுகில், சிறுபுலியூர்ச் சலசயனத்து *

ஏரார் முகில் வண்ணன் தனை, இமையோர் பெருமானைக் *

காரார் வயல் மங்கைக் கிறை, கலியனொலி மாலை *

பாரார் இவை பரவித் தொழப், பாவம் பயிலாவே.    7.9.10    சிறுபுலியூர்

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.