Thirumozhi 7-5

பெரிய திருமொழி

ஏழாம் பத்து

ஐந்தாம் திருமொழி

தந்தை காலில் பெரு விலங்கு தாளவிழ * நள்ளிருட்கண்

வந்த எந்தை பெருமானார் மருவி நின்ற ஊர் போலும் *

முந்தி வானம் மழை பொழியும் மூவாவுருவின் மறையாளர் *

அந்தி மூன்றும் அனலோம்பும் அணியார் வீதி அழுந்தூரே.         7.5.1      திருவழுந்தூர்

பாரித்தெழுந்த படை மன்னர் தம்மை மாளப் * பாரதத்துத்

தேரில் பாகனா யூர்ந்த தேவ தேவனூர் போலும் *

நீரில் பணைத்த நெடுவாளைக்கு அஞ்சிப் போன குருகினங்கள் *

ஆரல்கவுளோடு அருகணையும் அணியார் வயல் சூழ் அழுந்தூரே.         7.5.2                திருவழுந்தூர்

செம்பொன் மதிள்சூழ் தென்னிலங்கைக் கிறைவன்

சிரங்கள் ஐயிரண்டும் *

உம்பர் வாளிக்கு இலக்காக உதிர்த்த வுரவோனூர் போலும் *

கொம்பிலார்ந்த மாதவி மேல் கோதி மேய்ந்த வண்டினங்கள் *

அம்பராவும் கண் மடவார் ஐம்பாலணையும் அழுந்தூரே.   7.5.3      திருவழுந்தூர்

வெள்ளத்துள் ஓராலிலைமேல் மேவிஅடியேன் மனம்புகுந்து*என்

உள்ளத்துள்ளும் கண்ணுள்ளும் நின்றார், நின்ற ஊர் போலும் *

புள்ளுப் பிள்ளைக் கிரை தேடிப் போன, காதல் பெடையோடும் *

அள்ளல் செறுவில் கயல் நாடும் அணியார் வயல்சூழ் அழுந்தூரே.        7.5.4                திருவழுந்தூர்

பகலும் இரவும் தானேயாய்ப் பாரும் விண்ணும் தானேயாய் *

நிகரில் சுடராய் இருளாகி நின்றார் நின்ற ஊர் போலும் *

துகிலின் கொடியும் தேர்த் துகளும் துன்னி மாதர் கூந்தல் வாய் *

அகிலின் புகையால் முகிலேய்க்கும் அணியார் வீதி அழுந்தூரே.              7.5.5                திருவழுந்தூர்

ஏடிலங்கு தாமரை போல் செவ்வாய் முறுவல் செய்தருளி *

மாடு வந்து என் மனம் புகுந்து நின்றார் நின்ற ஊர் போலும் *

நீடுமாடத் தனிச்சூலம் போழ்கக் கொண்டல் துளி தூவ *

ஆடலரவத் தார்ப்பு ஓவா அணியார் வீதி அழுந்தூரே.         7.5.6      திருவழுந்தூர்

மாலைப் புகுந்து மலரணை மேல் வைகி

அடியேன் மனம் புகுந்து * என்

நீலக் கண்கள் பனி மல்க நின்றார் நின்ற ஊர் போலும் *

வேலைக் கடல் போல் நெடுவீதி

விண்தோய் சுதை வெண் மணி மாடத்து *

ஆலைப் புகையால் அழற் கதிரை மறைக்கும் வீதி அழுந்தூரே.                7.5.7                திருவழுந்தூர்

வஞ்சி மருங்குலிடை நோவ மணந்து நின்ற கனவகத்து * என்

நெஞ்சு நிறையக் கை கூப்பி நின்றார் நின்ற ஊர் போலும் *

பஞ்சியன்ன மெல்லடி நற்பாவைமார்கள் * ஆடகத்தின்

அஞ்சிலம்பி னார்ப்பு ஓவா அணியார் வீதி அழுந்தூரே.      7.5.8      திருவழுந்தூர்

என்னைம் புலனும் எழிலும் கொண்டு

இங்கே நெருநல் எழுந்தருளி *

பொன்னங் கலைகள் மெலிவெய்தப் போன, புனிதர் ஊர் போலும் *

மன்னு முதுநீரரவிந்த மலர் மேல் வரிவண்டு இசை பாட *

அன்னம் பெடையோடு உடனாடும் அணியார்வயல்சூழ் அழுந்தூரே.      7.5.9                திருவழுந்தூர்

நெல்லில் குவளை கண்காட்ட நீரில் குமுதம் வாய் காட்ட *

அல்லிக் கமலம் முகங்காட்டும் கழனி அழுந்தூர் நின்றானை *

வல்லிப் பொதும்பில் குயில் கூவும் மங்கை வேந்தன் பரகாலன் *

சொல்லில் பொலிந்த தமிழ் மாலை சொல்லப், பாவம் நில்லாவே.    7.5.10                திருவழுந்தூர்

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.