Thirumozhi 10-3

பெரிய திருமொழி

பத்தாம் பத்து

மூன்றாம் திருமொழி

ஏத்துகின்றோம் நாத்தழும்ப, இராமன் திருநாமம் *

சோத்த நம்பி சுக்கிரீவா ! உம்மைத் தொழுகின்றோம் *

வார்த்தை பேசீர், எம்மை உங்கள் வானரம் கொல்லாமே *

கூத்தர் போல ஆடுகின்றோம், குழமணி தூரமே.        10.3.1

எம்பிரானே ! என்னை யாள்வாய் ! என்றென்று அலற்றாதே *

அம்பின் வாய்ப் பட்டாற்ற கில்லாது, இந்திரசித் தழிந்தான் *

நம்பி அனுமா ! சுக்கிரீவா ! அங்கதனே ! நளனே ! *

கும்பகர்ணன் பட்டுப் போனான், குழமணி தூரமே.        10.3.2

ஞாலமாளும் உங்கள் கோமான், எங்க ளிராவணற்குக் *

காலனாகி வந்தவா ! கண்டஞ்சிக் * கருமுகில் போல்

நீலன் வாழ்க சுடேணன் வாழ்க, அங்கதன் வாழ்க வென்று *

கோலமாக ஆடுகின்றோம், குழமணி தூரமே.    10.3.3

மணங்கள் நாறும் வார்குழலார், மாதர்க ளாதரத்தைப் *

புணர்ந்த சிந்தைப் புன்மையாளன் பொன்ற, வரிசிலையால் *

கணங்களுண்ண வாளியாண்ட, காவலனுக் கிளையோன் *

குணங்கள் பாடி ஆடுகின்றோம், குழமணி தூரமே.       10.3.4

வென்றி தந்தோம் மானம் வேண்டோம், தானம் எமக்காக *

இன்று தம்மின் எங்கள் வாணாள், எம்பெருமான் தமர்காள் ! *

நின்று காணீர் கண்களார, நீர் எம்மைக் கொல்லாதே *

குன்று போல ஆடுகின்றோம், குழமணி தூரமே.        10.3.5

கல்லின் முந்நீர் மாற்றி வந்து, காவல் கடந்து * இலங்கை

அல்லல் செய்தா னுங்கள் கோமான், எம்மை அமர்க்களத்து *

வெல்ல கில்லா தஞ்சினோம் காண், வெங்கதிரோன் சிறுவா ! *

கொல்ல வேண்டா ஆடுகின்றோம், குழமணி தூரமே.              10.3.6

மாற்றமாவது இத்தனையே வம்மின், அரக்கருள்ளீர் !

சீற்றம் நும்மேல் தீர வேண்டில், சேவகம் பேசாதே *

ஆற்றல் சான்ற தொல் பிறப்பில், அனுமனை வாழ்க வென்று *

கூற்ற மன்னார் காண ஆடீர், குழமணி தூரமே.              10.3.7

கவள யானை பாய் புரவி, தேரோடு அரக்கரெல்லாம்

துவள வென்ற * வென்றியாளன் தன் தமர் கொல்லாமே *

தவள மாட நீடயோத்திக், காவலன் தன் சிறுவன் *

குவளை வண்ணன் காண ஆடீர், குழமணி தூரமே.   10.3.8    திருவயோத்தி

ஏடொத்தேந்தும் நீளிலைவேல், எங்களி ராவணனார்

ஓடிப் போனார் * நாங்கள் எய்த்தோம், உய்வதோர் காரணத்தால் *

சூடிப் போந்தோம் உங்கள் கோமானாணை, தொடரேன்மின் *

கூடிக் கூடி ஆடுகின்றோம், குழமணி தூரமே.   10.3.9

வென்ற தொல்சீர்த், தென்னிலங்கை வெஞ்சமத்து *அன்றரக்கர்

குன்ற மன்னார் ஆடியுய்ந்த, குழமணி தூரத்தை *

கன்றி நெய்ந்நீர் நின்ற வேற்கைக், கலியனொலி மாலை *

ஒன்று மொன்று மைந்தும் மூன்றும், பாடி நின்றாடுமினே.         10.3.10

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.