Thirumozhi 10-5

பெரிய திருமொழி

பத்தாம் பத்து

ஐந்தாம் திருமொழி

பூங்கோதை யாய்ச்சி, கடை வெண்ணெய் புக்குண்ண *

ஆங்கவள் ஆர்த்துப் புடைக்கப், புடையுண்டு *

ஏங்கியிருந்து, சிணுங்கி விளையாடும் *

ஓங்கோத வண்ணனே ! சப்பாணி

ஒளிமணி வண்ணனே ! சப்பாணி.        10.5.1

தாயர் மனங்கள் தடிப்பத் தயிர் நெய்யுண்டு *

ஏய் எம்பிராக்கள் * இரு நிலத்து எங்கள் தம்

ஆயரழக ! * அடிகள் அரவிந்த

வாயவனே ! கொட்டாய் சப்பாணி

மால் வண்ணனே ! கொட்டாய் சப்பாணி.             10.5.2

தாமோருருட்டித், தயிர் நெய் விழுங்கிட்டுத் *

தாமோ தவழ்வரென்று, ஆய்ச்சியர் தாம்பினால்

தாம் * மோதரக் கையால் ஆர்க்கத் தழும்பிருந்த *

தாமோதரா ! கொட்டாய் சப்பாணி

தாமரைக் கண்ணனே ! சப்பாணி.   10.5.3

பெற்றார் தளை கழலப், பேர்ந்தங் கயலிடத்து *

உற்றா ரொருவரும் இன்றி, உலகினில் *

மற்றாரும் அஞ்சப் போய், வஞ்சப் பெண் நஞ்சுண்ட *

கற்றாயனே ! கொட்டாய் சப்பாணி

கார் வண்ணனே ! கொட்டாய் சப்பாணி.               10.5.4

சோத்தென நின்னைத், தொழுவன் வரம் தரப் *

பேய்ச்சி முலையுண்ட பிள்ளாய் ! * பெரியன

ஆய்ச்சியர் அப்பம் தருவர் * அவர்க்காகச்

சாற்றி யோராயிரம் சப்பாணி

தடங்கைகளால் கொட்டாய் சப்பாணி.       10.5.5

கேவலமன்று, உன்வயிறு * வயிற்றுக்கு

நான் அவல் அப்பம் தருவன் * கருவிளைப்

பூவலர் நீள்முடி, நந்தன் தன் போரேறே !

கோவலனே ! கொட்டாய் சப்பாணி

குடமாடீ ! கொட்டாய் சப்பாணி.    10.5.6

புள்ளினை வாய் பிளந்து பூங்குருந்தம் சாய்த்துத் *

துள்ளி விளையாடித் தூங்குறி வெண்ணெயை *

அள்ளிய கையால் அடியேன் முலை நெருடும் *

பிள்ளைப் பிரான் ! கொட்டாய் சப்பாணி

பேய்முலை யுண்டானே ! சப்பாணி.        10.5.7

யாயும் பிறரும் அறியாத யாமத்து *

மாய வலவைப் பெண் வந்து, முலை தரப் *

பேயென்று, அவளைப் பிடித்து உயிரை யுண்ட *

வாயவனே ! கொட்டாய் சப்பாணி

மால் வண்ணனே ! கொட்டாய் சப்பாணி.             10.5.8

கள்ளக் குழவியாய்க், காலால் சகடத்தைத் *

தள்ளி யுதைத்திட்டுத், தாயாய் வருவாளை *

மெள்ளத் தொடர்ந்து, பிடித்து ஆருயிருண்ட *

வள்ளலே ! கொட்டாய் சப்பாணி

மால் வண்ணனே ! கொட்டாய் சப்பாணி.             10.5.9

காரார் புயற்கைக், கலிகன்றி மங்கையர் கோன் *

பேராளன் நெஞ்சில், பிரியாது இடங் கொண்ட

சீராளா ! * செந்தாமரைக் கண்ணா ! தண்துழாய்த்

தாராளா ! * கொட்டாய் சப்பாணி

தடமார்வா ! கொட்டாய் சப்பாணி.         10.5.10

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.