Thirumozhi 10-6

பெரிய திருமொழி

பத்தாம் பத்து

ஆறாம் திருமொழி

எங்கானும் ஈதொப்பதோர் மாயமுண்டே ?

நரநாரணனாய் * உலகத்து அறநூல்

சிங்காமை விரித்தவன் எம்பெருமான்

அதுவன்றியும் செஞ்சுடரும் நிலனும் *

பொங்கார் கடலும் பொருப்பும் நெருப்பும் நெருக்கிப்

புகப், பொன்மிடறு அத்தனை போது

அங்காந்தவன் காண்மின் * இன்று ஆய்ச்சியரால்

அளை வெண்ணெயுண்டு ஆப்புண்டிருந்தவனே.            10.6.1

குன்றொன்று மத்தா அரவமளவிக்

குரைமா கடலைக் கடைந்திட்டு * ஒருகால்

நின்று உண்டை கொண்டோட்டி வன்கூன் நிமிர

நினைந்த பெருமான், அதுவன்றியும் முன் *

நன்றுண்ட தொல்சீர் மகரக் கடலேழ்

மலையேழ் உலகேழ் ஒழியாமை நம்பி

அன்றுண்டவன் காண்மின் * இன்று ஆய்ச்சியரால்

அளை வெண்ணெயுண்டு ஆப்புண்டிருந்தவனே.            10.6.2

உளைந்திட் டெழுந்த மது கைடவர்கள்

உலப்பில் வலியாரவர் பால் * வயிரம்

விளைந்திட்ட தென்றெண்ணி விண்ணோர் பரவ

அவர் நாளொழித்த பெருமான் * முனநாள்

வளைந்திட்ட வில்லாளி வல்வாளெயிற்று

மலை போல் அவுணனுடல் வள்ளுகிரால்

அளைந்திட்டவன் காண்மின் * இன்று ஆய்ச்சியரால்

அளை வெண்ணெயுண்டு ஆப்புண்டிருந்தவனே.            10.6.3

தளர்ந்திட்டு இமையோர் சரண் தாவெனத்

தான் சரணாய், முரணாயவனை * உகிரால்

பிளந்திட்டு அமரர்க் கருள் செய்துகந்த

பெருமான் திருமால் * விரிநீருலகை

வளர்ந்திட்ட தொல் சீர் விறல் மாவலியை

மண் கொள்ள வஞ்சித்து, ஒரு மாண் குறளாய்

அளந்திட்டவன் காண்மின் * இன்று ஆய்ச்சியரால்

அளை வெண்ணெயுண்டு ஆப்புண்டிருந்தவனே.            10.6.4

நீண்டான் குறளாய் நெடு வானளவும்

அடியார் படும் ஆழ் துயராய வெல்லாம்

தீண்டாமை நினைந்து * இமையோரளவும்

செல வைத்த பிரான் * அதுவன்றியும் முன்

வேண்டாமை நமன் தமர் என் தமரை

வினவப் பெறுவார் அலரென்று உலகேழ்

ஆண்டானவன் காண்மின் * இன்று ஆய்ச்சியரால்

அளை வெண்ணெயுண்டு ஆப்புண்டிருந்தவனே.            10.6.5

பழித்திட்ட இன்பப் பயன் பற்றறுத்துப்

பணிந்தேத்த வல்லார் துயராய வெல்லாம்

ஒழித்திட்டு * அவரைத் தனக்காக்க வல்ல

பெருமான் திருமால் * அதுவன்றியும் முன்

தெழித்திட்டெழுந்தே எதிர் நின்ற மன்னன்

சினத்தோளவை யாயிரமும் மழுவால்

அழித்திட்டவன் காண்மின் * இன்று ஆய்ச்சியரால்

அளை வெண்ணெயுண்டு ஆப்புண்டிருந்தவனே.            10.6.6

படைத்திட்டு அது இவ்வையம் உய்ய முனநாள்

பணிந்தேத்த வல்லார் துயராய வெல்லாம்

துடைத்திட்டு * அவரைத் தனக்காக்க வென்னத்

தெளியா அரக்கர் திறல் போயவிய *

மிடைத்திட்டெழுந்த குரங்கைப் படையா

விலங்கல் புகப் பாய்ச்சி விம்மக் கடலை

அடைத்திட்டவன் காண்மின் * இன்று ஆய்ச்சியரால்

அளை வெண்ணெயுண்டு ஆப்புண்டிருந்தவனே.            10.6.7

நெறித்திட்ட மென் கூழை நல்நேரிழையோடு

உடனாய வில்லென்ன வல்லே யதனை

இறுத்திட்டு * அவளின்பம் அன்போடணைந்திட்டு

இளங் கொற்றவனாய்த் * துளங்காத முந்நீர்

செறித்திட்டு இலங்கை மலங்க, அரக்கன்

செழுநீள் முடிதோளொடு தாள் துணிய

அறுத்திட்டவன் காண்மின் * இன்று ஆய்ச்சியரால்

அளை வெண்ணெயுண்டு ஆப்புண்டிருந்தவனே.            10.6.8

சுரிந்திட்ட செங்கேழுளைப் பொங்கு அரிமாத்

தொலையப் பிரியாது சென்றெய்தி * எய்தாது

இரிந்திட்டிடங் கொண்ட டங்காததன் வாய்

இரு கூறு செய்த பெருமான் * முனநாள்

வரிந்திட்ட வில்லால் மரமேழு மெய்து

மலை போலுருவத்து ஒரிராக்கதி மூக்கு

அரிந்திட்டவன் காண்மின் * இன்று ஆய்ச்சியரால்

அளை வெண்ணெயுண்டு ஆப்புண்டிருந்தவனே.            10.6.9

நின்றார் முகப்புச் சிறிதும் நினையான்

வயிற்றை நிறைப்பான் உறிப்பால் தயிர் நெய் *

அன்று ஆய்ச்சியர் வெண்ணெய் விழுங்கி,

உரலோடு ஆப்புண்டிருந்த பெருமானடிமேல் *

நன்றாய தொல்சீர் வயல் மங்கையர் கோன்

கலியனொலி செய் தமிழ் மாலை வல்லார் *

என்றானும் எய்தார் இடர், இன்பமெய்தி

இமையோர்க்கு மப்பால் செலவெய்துவாரே.    10.6.10

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.