Thiruvoymozhi 8-3

திருவாய்மொழி

எட்டாம் பத்து

மூன்றாம் திருவாய்மொழி

அங்கு மிங்கும், வானவர் தானவர் யாவரும் *

எங்கும் இனையை யென்று, உன்னை யறிய கிலாது அலற்றி *

அங்கம் சேரும், பூமகள் மண்மகள் ஆய்மகள் *

சங்கு சக்கரக் கையவன் என்பர் சரணமே.        8.3.1

சரணமாகிய, நான்மறை நூல்களும் சாராதே *

மரணம் தோற்றம், வான்பிணி மூப்பென்றிவை மாய்த்தோம் *

கரணப் பல்படை, பற்றற வோடும் கனலாழி *

அரணத் திண்படை யேந்திய, ஈசற்கு ஆளாயே.             8.3.2

ஆளுமாளார், ஆழியும் சங்கும் சுமப்பார் தாம் *

வாளும் வில்லும் கொண்டு, பின் செல்வார் மற்றில்லை *

தாளும் தோளும், கைகளை யாரத் தொழக் காணேன் *

நாளும் நாளும் நாடுவன், அடியேன் ஞாலத்தே.         8.3.3

ஞாலம் போனகம் பற்றி, ஓர் முற்றா வுருவாகி *

ஆலம் பேரிலை, அன்ன வசஞ் செய்யும் அம்மானே ! *

காலம் போவது ஓர் காரிருள் ஊழி யொத்துளதால் * உன்

கோலங் காரெழில், காணலுற்று ஆழும் கொடியேற்கே.        8.3.4

கொடியார் மாடக் கோளூரகத்தும், புளிங்குடியும் *

மடியாதின்னே, நீ துயில் மேவி மகிழ்ந்தது தான் *

அடியாரல்லல் தவிர்த்த அசைவோ ? அன்றேல் இப்

படி, தான் * நீண்டு தாவிய அசைவோ? பணியாயே.    8.3.5      திருப்புளிங்குடி,

திருக்கோளூர்

பணியா அமரர், பணிவும் பண்பும் தாமேயாம் *

அணியா ராழியும் சங்கமும், ஏந்துமவர் காண்மின் *

தணியா வெந்நோய், உலகில் தவிர்ப்பான் * திருநீல

மணியார் மேனியோடு, என் மனம் சூழ வருவாரே.    8.3.6

வருவார் செல்வார், வண்பரிசாரத்து இருந்த * என்

திருவாழ் மார்வற்கு, என் திறம் சொல்லார் செய்வது என் ? *

உருவார் சக்கரம் சங்கு, சுமந்து இங்கு உம்மோடு *

ஒருபாடுழல்வான், ஓரடியானும் உளனென்றே.         8.3.7      திருவண்பரிசாரம்

என்றே என்னை, உன் ஏரார் கோலத் திருந்தடிக் கீழ் *

நின்றே யாட் செய்ய, நீ கொண்டருள நினைப்பது தான் ? *

குன்றேழ் பாரேழ், சூழ்கடல் ஞாலம் முழுவேழும் *

நின்றே தாவிய, நீள் கழலாழித் திருமாலே !    8.3.8

திருமால், நான்முகன் செஞ்சடையா னென்றிவர்கள் * எம்

பெருமான் தன்மையை யாரறிகிற்பார் ? பேசியென் ? *

ஒருமாமுதல்வா ! ஊழிப்பிரான் ! என்னை யாளுடைக் *

கருமா மேனியன் என்பன், என் காதல் கலக்கவே.    8.3.9

கலக்க மில்லா நல்தவ முனிவர், கரை கண்டோர் *

துளக்க மில்லா வானவர் எல்லாம், தொழுவார்கள் *

மலக்க மெய்த, மாகடல் தன்னைக் கடைந்தானை *

உலக்க நாம் புகழ்கிற்பது, என் செய்வது ? உரையீரே.         8.3.10

உரையா வெந்நோய் தவிர, அருள்நீள் முடியானை *

வரையார் மாட மன்னு, குருகூர்ச் சடகோபன் *

உரையேய் சொல் தொடை ஓராயிரத்துள் இப்பத்தும் *

நிரையே வல்லார், நீடுலகத்துப் பிறவாரே.        8.3.11

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.