Thiruvoymozhi 8-4

திருவாய்மொழி

எட்டாம் பத்து

நான்காம் திருவாய்மொழி

வார்கடா வருவி யானை மாமலையின்

மருப்பிணைக் குவடிறுத் துருட்டி *

ஊர்கொள் திண்பாகனுயிர் செகுத்து

அரங்கின் மல்லரைக் கொன்று * சூழ் பரண் மேல்

போர்கடா வரசர் புறக்கிட

மாடமீமிசைக் கஞ்சனைத் தகர்த்த *

சீர்கொள் சிற்றாயன் திருச்செங்குன்றூரில்

திருச்சிற்றாறு எங்கள் செல்சார்வே.            8.4.1      திருச்செங்குன்றூர்

எங்கள் செல்சார்வு யாமுடை யமுதம்

இமையவரப்பன் என்னப்பன் *

பொங்கு மூவுலகும் படைத்தளித்தழிக்கும்

பொருந்து மூவுருவன் எம்மருவன் *

செங்கயலுகளும் தேம்பணை புடைசூழ்

திருச்செங்குன்றூர்த் திருச்சிற்றாறு

அங்கு அமர்கின்ற * ஆதியானல்லால்

யாவர் மற்று என் அமர் துணையே ?        8.4.2      திருச்செங்குன்றூர்

என்னமர் பெருமான் இமையவர் பெருமான்

இருநில மிடந்த எம்பெருமான் *

முன்னை வல்வினைகள் முழுதுடன் மாள

என்னை யாள்கின்ற எம்பெருமான் *

தென் திசைக்கு அணிகொள் திருச்செங்குன்றூரில்

திருச்சிற்றாற்றங்கரை மீபால்

நின்ற எம்பெருமான் * அடியல்லால் சரண்

நினைப்பிலும், பிறிதில்லை எனக்கே.         8.4.3      திருச்செங்குன்றூர்

பிறிதில்லை எனக்குப் பெரிய மூவுலகும்

நிறையப், பேருருவமாய் நிமிர்ந்த *

குறிய மாணெம்மான் குரைகடல் கடைந்த

கோல மாணிக்கம் என்னம்மான் *

செறிகுலை வாழை கமுகு தெங்கணிசூழ்

திருச்செங்குன்றூர்த் திருச்சிற்றாறு

அறிய * மெய்ம்மையே நின்ற எம்பெருமான்

அடியிணை யல்லதோ ரரணே.        8.4.4      திருச்செங்குன்றூர்

அல்லதோ ரரணும் அவனில் வேறில்லை

அது பொருளாகிலும் * அவனை

யல்லது என்னாவி யமர்ந்தணை கில்லாது

ஆதலால் அவனுறைகின்ற *

நல்ல நான்மறையோர் வேள்வியுள் மடுத்த

நறும்புகை விசும்பொளி மறைக்கும் *

நல்ல நீள்மாடத் திருச்செங்குன்றூரில்

திருச்சிற்றாறு எனக்கு நல்லரணே.            8.4.5      திருச்செங்குன்றூர்

எனக்கு நல்லரணை எனதாருயிரை

இமையவர் தந்தை தாய் தன்னைத் *

தனக்கும் தன் தன்மை யறிவரியானைத்

தடங்கடற் பள்ளி யம்மானை *

மனக்கொள் சீர் மூவாயிரவர்

வண்சிவனும் அயனும் தானும் ஒப்பார் வாழ் *

கனக்கொள் திண்மாடத் திருச்செங்குன்றூரில்

திருச்சிற்றாறதனுள் கண்டேனே.    8.4.6      திருச்செங்குன்றூர்

திருச்செங்குன்றூரில் திருச்சிற்றாறதனுள்

கண்ட, அத்திருவடி என்றும் *

திருச்செய்ய கமலக் கண்ணும் செவ்வாயும்

செவ்வடியும் செய்ய கையும் *

திருச்செய்ய கமலவுந்தியும்

செய்ய கமல மார்பும் செய்ய வுடையும் *

திருச்செய்ய முடியும் ஆரமும் படையும்

திகழ என் சிந்தையுளானே.  8.4.7      திருச்செங்குன்றூர்

திகழ என் சிந்தையு ளிருந்தானைச்

செழுநிலத் தேவர் நான்மறையோர் *

திசை கை கூப்பி யேத்தும் திருச்செங்குன்றூரில்

திருச்சிற்றாற்றங்கரை யானைப் *

புகர்கொள் வானவர்கள் புகலிடந் தன்னை

அசுரர் வன்கையர் வெங்கூற்றைப் *

புகழுமாறு அறியேன் பொருந்து மூவுலகும்

படைப்பொடு கெடுப்புக் காப்பவனே.           8.4.8      திருச்செங்குன்றூர்

படைப்பொடு கெடுப்புக் காப்பவன்

பிரம பரம்பரன் சிவப்பிரா னவனே *

இடைப்புக் கோருருவும் ஒழிவில்லை அவனே

புகழ்வில்லை யாவையும் தானே *

கொடைப் பெரும் புகழாரினையர் தன்னானார்

கூறிய விச்சையோடு ஒழுக்கம் *

நடைப்பலி யியற்கைத் திருச்செங்குன்றூரில்

திருச்சிற்றா றமர்ந்த நாதனே.           8.4.9      திருச்செங்குன்றூர்

அமர்ந்த நாதனை அவரவராகி

அவர்க்கரு ளருளும் அம்மானை *

அமர்ந்த தண்பழனத் திருச்செங்குன்றூரில்

திருச்சிற்றாற்றங்கரை யானை *

அமர்ந்த சீர் மூவாயிரவர்

வேதியர்கள் தம்பதி அவனி தேவர் வாழ்வு *

அமர்ந்த மாயோனை முக்கணம்மானை

நான்முகனை அமர்ந்தேனே.        8.4.10    திருச்செங்குன்றூர்

தேனை நன்பாலைக் கன்னலை யமுதைத்

திருந்துலகுண்ட அம்மானை *

வானை நான்முகனை மலர்ந்த தண்கொப்பூழ்

மலர்மிசைப் படைத்த மாயோனைக் *

கோனை வண்குருகூர் வண்சடகோபன்

சொன்ன ஆயிரத்துள் இப்பத்தும் *

வானின் மீதேற்றி அருள் செய்து முடிக்கும்

பிறவி மாமாயக் கூத்தினையே.    8.4.11    திருச்செங்குன்றூர்

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.