Thiruvoymozhi 8-8

திருவாய்மொழி

எட்டாம் பத்து

எட்டாம் திருவாய்மொழி

கண்கள் சிவந்து பெரியவாய் வாயும் சிவந்து கனிந்து* உள்ளே

வெண்பலிலகு சுடர் இலகு விலகு மகர குண்டலத்தன் *

கொண்டல் வண்ணன் சுடர் முடியன் நான்கு தோளன் குனிசார்ங்கன் *

ஒண் சங்கதை வாளாழியான் ஒருவன், அடியேனுள்ளானே.       8.8.1

அடியேனுள்ளான் உடலுள்ளான் அண்டத்தகத்தான் புறத்துள்ளான் *

படியே யிது வென்றுரைக்கலாம் படியனல்லன், பரம்பரன் *

கடிசேர் நாற்றத்துள் ஆலை இன்பத் துன்பக் கழிநேர்மை *

ஒடியா வின்பப் பெருமையோன் உணர்வி லும்ப ரொருவனே.    8.8.2

உணர்வி லும்ப ரொருவனை அவனதருளால் உறற் பொருட்டு * என்

உணர்வினுள்ளே இருத்தினேன் அதுவும் அவனது இன்னருளே *

உணர்வும் உயிரும் உடம்பும் மற்று உலப்பிலனவும் பழுதேயாம் *

உணர்வைப் பெற, ஊர்ந்து இறவேறி யானும் தானா யொழிந்தானே.      8.8.3

யானும் தானா யொழிந்தானை யாதும் யவர்க்கும் முன்னோனைத் *

தானும் சிவனும் பிரமனுமாகிப் பணைத்த தனிமுதலைத் *

தேனும் பாலும் கன்னலும் அமுதுமாகித் தித்தித்து * என்

ஊனில் உயிரில் உணர்வினில் நின்ற ஒன்றை உணர்ந்தேனே.   8.8.4

நின்ற ஒன்றை உணர்ந்தேனுக்கு அதனுள் நேர்மை அதுவிது வென்று *

ஒன்றும் ஒருவர்க் குணரலாகாது உணர்ந்து மேலும் காண்பரிது *

சென்று சென்று பரம்பரமாய் யாதுமின்றித் தேய்ந்தற்று *

நன்று தீதென்ற றிவரிதாய் நன்றாய் ஞானம் கடந்ததே.     8.8.5

நன்றாய் ஞானம் கடந்து போய் நல்லிந்திரிய மெல்லா மீர்த்து *

ஒன்றாய்க் கிடந்தவரும்பெரும்பாழ் உலப்பிலதனை உணர்ந்துணர்ந்து *

சென்றாங் கின்பத் துன்பங்கள் செற்றுக் களைந்து பசை யற்றால் *

அன்றே அப்போதே வீடு அதுவே வீடு வீடாமே.     8.8.6

அதுவே வீடு வீடு பேற்று இன்பந் தானும் அதுதேறி *

எதுவே தானும் பற்றின்றி யாதுமிலிக ளாகிற்கில் *

அதுவே வீடு வீடு பேற்று இன்பந்தானும் அது தேறாது *

எதுவே வீடு? ஏது இன்பம்? என்று எய்த்தார் எய்த்தார் எய்த்தாரே.              8.8.7

எய்த்தார் எய்த்தார் எய்த்தாரென்று இல்லத்தாரும் புறத்தாரும்

மொய்த்து* ஆங்கலறிமுயங்கத் தாம்போகும்போது * உன்மத்தர் போல்

பித்தேயேறி அநுராகம் பொழியும் போது எம் பெம்மானோடு

ஒத்தே சென்று * அங்குள்ளம் கூடக் கூடிற்றாகில், நல்லுறைப்பே.          8.8.8

கூடிற்றாகில் நல்லுறைப்புக் கூடாமையைக் கூடினால் *

ஆடற் பறவை உயர் கொடி எம்மாயனாவது அதுவதுவே *

வீடைப் பண்ணி ஒரு பரிசே எதிர்வும் நிகழ்வும் கழிவுமாய் *

ஓடித் திரியும் யோகிகளும் உளரு மில்லை யல்லரே.      8.8.9

உளரு மில்லை யல்லராய் உளராய் இல்லை யாகியே *

உளரெம்மொருவர் அவர் வந்து என்னுள்ளத்துள்ளே உறைகின்றார் *

வளரும் பிறையும் தேய் பிறையும் போல, அசைவும் ஆக்கமும் *

வளரும்சுடரும் இருளும்போல் தெருளும் மருளும் மாய்த்தோமே.       8.8.10

தெருளும் மருளும் மாய்த்துத்

தன் திருந்து செம்பொற் கழலடிக் கீழ் *

அருளியிருத்தும் அம்மானாம் அயனாம் சிவனாம் *

திருமாலால் அருளப் பட்ட சடகோபன் ஓராயிரத்துள் இப்பத்தால் *

அருளி அடிக் கீழிருத்தும் நம்மண்ணல் கருமாணிக்கமே.           8.8.11

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.