Thiruvoymozhi 8-5

திருவாய்மொழி

எட்டாம் பத்து

ஐந்தாம் திருவாய்மொழி

மாயக்கூத்தா ! வாமனா ! வினையேன் கண்ணா ! கண் கை கால் *

தூய செய்ய மலர்களாச், சோதிச் செவ்வாய் முகிழதா *

சாயல் சாமத்திருமேனி, தண்பாசடையா * தாமரை நீள்

வாசத்தடம் போல் வருவானே !, ஒரு நாள் காண வாராயே.   8.5.1

காணவாராயென்றென்று கண்ணும் வாயும் துவர்ந்து அடியேன் *

நாணி நன்னாட்டு அலமந்தால் இரங்கி ஒருநாள் நீ அந்தோ! *

காண வாராய் கருநாயி றுதிக்கும் கருமா மாணிக்க

நாள்நல் மலைபோல் * சுடர்ச்சோதி முடிசேர் சென்னியம்மானே !        8.5.2

முடிசேர் சென்னியம்மா ! நின்மொய் பூந்தாமத் தண்துழாய் *

கடி சேர் கண்ணிப் பெருமானே ! என்றென்றேங்கி அழுதக்கால் *

படி சேர் மகரக் குழைகளும் பவள வாயும் நால் தோளும் *

துடிசேரிடையு மமைந்தது ஓர் தூநீர் முகில் போல் தோன்றாயே.          8.5.3

தூநீர் முகில் போல் தோன்றும் நின் சுடர் கொள் வடிவும் கனிவாயும் *

தேநீர்க் கமலக் கண்களும் வந்து என்சிந்தை நிறைந்தவா ! *

மாநீர் வெள்ளி மலை தன்மேல் வண்கார் நீலமுகில் போலத் *

தூநீர்க் கடலுள் துயில்வானே ! எந்தாய் ! சொல்ல மாட்டேனே.         8.5.4                திருப்பாற்கடல்

சொல்ல மாட்டேன் அடியேன் உன்துளங்குசோதித் திருப்பாதம் *

எல்லையில் சீரிள ஞாயிறு இரண்டு போலென்னுள்ளவா ! *

அல்லலென்னும் இருள் சேர்தற்கு உபாயமென்னே ? * ஆழிசூழ்

மல்லை ஞாலமுழுதுண்ட மாநீர்க் கொண்டல் வண்ணனே !         8.5.5

கொண்டல்வண்ணா!குடக்கூத்தா! வினையேன்கண்ணா! கண்ணா!*என்

அண்டவாணா !* என்று, என்னை ஆளக் கூப்பிட்டழைத்தக்கால் *

விண்தன்மேல் தான் மண்மேல்தான் ! விரிநீர்க்கடல்தான் மற்றுத்தான் *

தொண்டனேன் உன் கழல் காண ஒருநாள் வந்து தோன்றாயே.             8.5.6

வந்து தோன்றாயன்றேல், உன் வையம் தாய மலரடிக்கீழ் *

முந்தி வந்து யான் நிற்ப, முகப்பே கூவிப் பணி கொள்ளாய் *

செந்தண் கமலக் கண்கைகால், சிவந்த வாயோர் கருநாயிறு *

அந்தமில்லாக் கதிர் பரப்பி, அலர்ந்ததொக்கும் அம்மானே.    8.5.7

ஒக்குமம்மா னுருவமென்று உள்ளங் குழைந்து நாணாளும் *

தொக்க மேகப் பல்குழாங்கள் காணுந் தோறும் தொலைவன் நான் *

தக்க ஐவர் தமக்காய் அன்று ஈரைம்பதின்மர் தாள் சாய *

புக்க நல் தேர்த் தனிப்பாகா ! வாராய், இதுவோ பொருத்தமே ?    8.5.8

இதுவோ பொருத்தம்? மின்னாழிப் படையாய் ! ஏறுமிருஞ் சிறைப்புள்

அதுவே * கொடியா வுயர்த்தானே ! என்றென்று ஏங்கி யழுதக்கால் *

எதுவேயாகக் கருதுங் கொல்? இம்மாஞாலம் பொறை தீர்ப்பான் *

மதுவார் சோலை உத்தர மதுரைப் பிறந்த மாயனே.     8.5.9      வடமதுரை

பிறந்த மாயா ! பாரதம் பொருத மாயா ! நீ இன்னே *

சிறந்த கால் தீ நீர் வான், மண் பிறவுமாய பெருமானே ! *

கறந்த பாலுள் நெய்யே போல், இவற்றுளெங்கும் கண்டு கொள் *

இறந்து நின்ற பெருமாயா! உன்னை எங்கே காண்கேனே?                8.5.10

எங்கே காண்கேன் ! ஈன்துழாயம்மான்

தன்னை, யான் ? என்றென்று *

அங்கே தாழ்ந்த சொற்களால் அந்தண் குருகூர்ச் சடகோபன் *

செங்கேழ் சொன்ன ஆயிரத்துள் இவையும் பத்தும் வல்லார்கள் *

இங்கே காண இப்பிறப்பே மகிழ்வர் எல்லியுங் காலையே.           8.5.11

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.