Thiruvoymozhi 8-6

திருவாய்மொழி

எட்டாம் பத்து

ஆறாம் திருவாய்மொழி

எல்லியும் காலையும், தன்னை நினைந்தெழ *

நல்ல வருள்கள், நமக்கே தந்து அருள் செய்வான் *

அல்லியந் தண்ணந் துழாய் முடி, அப்பனூர் *

செல்வர்கள் வாழும், திருக்கடித்தானமே.              8.6.1      திருக்கடித்தானம்

திருக்கடித்தானமும், என்னுடைச் சிந்தையும் *

ஒடுக்கடுத்து உள்ளே, உறையும் பிரான் கண்டீர் *

செருக்கடுத்து அன்று, திகைத்த அரக்கரை *

உருக்கெட வாளி பொழிந்த ஒருவனே.   8.6.2      திருக்கடித்தானம்

ஒருவர் இருவர், ஓர் மூவரென நின்று *

உருவு கரந்து, உள்ளுந் தோறும் தித்திப்பான் *

திருவமர் மார்வன், திருக்கடித்தானத்தை *

மருவி யுறைகின்ற, மாயப் பிரானே.        8.6.3      திருக்கடித்தானம்

மாயப் பிரான், என வல்வினை மாய்ந்தற *

நேசத்தினால், நெஞ்சம் நாடு குடி கொண்டான் *

தேசத்தமரர், திருக்கடித்தானத்தை*

வாசப் பொழில், மன்னு கோயில் கொண்டானே.            8.6.4      திருக்கடித்தானம்

கோயில் கொண்டான் தன், திருக்கடித்தானத்தைக் *

கோயில் கொண்டான், அதனோடும் என்னெஞ்சகம் *

கோயில் கொள், தெய்வ மெல்லாம் தொழ * வைகுந்தம்

கோயில் கொண்ட, குடக் கூத்த அம்மானே.       8.6.5      திருக்கடித்தானம்

கூத்த அம்மான், கொடியேனிடர் முற்றவும் *

மாய்த்த அம்மான், மதுசூத வம்மானுறை *

பூத்த பொழில், தண் திருக்கடித்தானத்தை *

ஏத்த நில்லா, குறிக்கொண்மின் இடரே.    8.6.6      திருக்கடித்தானம்

கொண்மின் இடர்கெட, உள்ளத்துக் கோவிந்தன் *

மண்விண் முழுதும் அளந்த, ஒண்தாமரை *

மண்ணவர் தாம் தொழ, வானவர் தாம் வந்து *

நண்ணு, திருக்கடித்தான நகரே.         8.6.7      திருக்கடித்தானம்

தான நகர்கள், தலைச் சிறந்து எங்கெங்கும் *

வானிந் நிலம் கடல், முற்றும் எம்மாயற்கே *

ஆன விடத்தும், என் நெஞ்சும் திருக்கடித்

தான நகரும் * தன தாயப் பதியே.         8.6.8      திருக்கடித்தானம்

தாயப் பதிகள், தலைச் சிறந்து எங்கெங்கும் *

மாயத்தினால், மன்னி வீற்றிருந்தானுறை *

தேசத் தமரர், திருக்கடித்தானத்துள் *

ஆயர்க் கதிபதி, அற்புதன் தானே.  8.6.9      திருக்கடித்தானம்

அற்புதன் நாராயணன், அரிவாமனன்

நிற்பது மேவி, இருப்பது என்னெஞ்சகம் *

நற்புகழ் வேதியர், நான்மறை நின்றதிர் *

கற்பகச் சோலைத், திருக்கடித்தானமே.  8.6.10    திருக்கடித்தானம்

சோலைத் திருக்கடித்தானத்து, உறை திரு

மாலை * மதிள்குருகூர்ச், சடகோபன் சொல் *

பாலோடமுதன்ன, ஆயிரத்து இப்பத்தும் *

மேலை வைகுந்தத்து, இருத்தும் வியந்தே.      8.6.11    திருக்கடித்தானம்

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.