Thiruvoymozhi 10-10

திருவாய்மொழி

பத்தாம் பத்து

பத்தாம் திருவாய்மொழி

முனியே ! நான்முகனே ! முக்கண்ணப்பா ! * என் பொல்லாக்

கனிவாய்த் தாமரைக்கண் கருமாணிக்கமே ! என் கள்வா ! *

தனியேனாருயிரே ! என் தலைமிசையாய் வந்திட்டு *

இனிநான் போகலொட்டேன் ஒன்றும் மாயம் செய்யேல் என்னையே.    10.10.1

மாயம் செய்யேல் என்னை உன் திருமார்வத்து மாலை நங்கை *

வாசம் செய் பூங்குழலாள் திருவாணை நின்னாணை கண்டாய் *

நேசம் செய்து உன்னோ டென்னை உயிர் வேறின்றி ஒன்றாகவே *

கூசம்செய்யாதுகொண்டாய் என்னைக் கூவிக்கொள்ளாய் வந்தந்தோ.   10.10.2

கூவிக்கொள்ளாய் வந்தந்தோ! என்பொல்லாக் கருமாணிக்கமே !*

ஆவிக்கோர் பற்றுக் கொம்பு நின்னலால் அறிகின்றிலேன் யான் *

மேவித் தொழும் பிரமன் சிவன் இந்திரனாதிக்கெல்லாம் *

நாவிக் கமல முதற்கிழங்கே ! உம்பரந்ததுவே.           10.10.3

உம்பரம் தண் பாழேயோ! அதனுள்மிசை நீயேயோ ! *

அம்பர நற்சோதி ! அதனுள் பிரமன் அரன் நீ *

உம்பரும் யாதவரும் படைத்த முனிவன் அவன் நீ *

எம்பரம் சாதிக்கலுற்று என்னைப் போர விட்டிட்டாயே.       10.10.4

போர விட்டிட்டென்னை நீ புறம் போக்கலுற்றால் * பின்னை யான்

ஆரைக்கொண்டு எத்தையந்தோ ! எனதென்பதென்? யானென்பதென்?*

தீர இரும்புண்ட நீரது போல, என்னாருயிரை

ஆரப் பருக* எனக்கு ஆராவமுதானாயே.           10.10.5

எனக்கு ஆராவமுதாய் எனதாவியை இன்னுயிரை *

மனக்காராமை மன்னி உண்டிட்டாய் இனியுண்டொழியாய் *

புனக்காயா நிறத்த புண்டரீகக்கண் செங்கனிவாய் *

உனக்கேற்கும் கோலமலர்ப் பாவைக்கு அன்பா!,என்னன்பேயோ !          10.10.6

கோல மலர்ப் பாவைக்கு அன்பாகிய என் அன்பேயோ ! *

நீல வரை இரண்டு பிறை கவ்வி நிமிர்ந்ததொப்பக் *

கோல வராக மொன்றாய் நிலம் கோட்டிடைக் கொண்ட எந்தாய் !

நீலக்கடல் கடைந்தாய் ! உன்னைப் பெற்று இனிப் போக்குவனோ ?       10.10.7

பெற்றுஇனிப் போக்குவனோ ? உன்னை என் தனிப்பேருயிரை *

உற்ற இருவினையாய் உயிராய்ப் பயனாய் அவையாய் *

முற்ற இம்மூவுலகும் பெருந்தூறாய்த் தூற்றில் புக்கு *

முற்றக் கரந்தொளித்தாய் ! என் முதல் தனி வித்தேயோ !      10.10.8

முதல் தனி வித்தேயோ ! முழு மூவுலகாதிக்கெல்லாம் *

முதல்தனி உன்னை யுன்னை எனை நாள் வந்து கூடுவன் நான் ? *

முதல் தனி அங்குமிங்கும் முழுமுற்றுறு வாழ் பாழாய் *

முதல் தனி சூழ்ந்தகன்று ஆழ்ந்துயர்ந்த முடிவிலீயோ !    10.10.9

சூழ்ந்தகன் றாழ்ந்துயர்ந்த, முடிவில் பெரும் பாழேயோ ! *

சூழ்ந்ததனில் பெரிய, பரநன் மலர்ச் சோதீயோ *

சூழ்ந்ததனில் பெரிய, சுடர் ஞான வின்பமேயோ ! *

சூழ்ந்ததனில் பெரிய, என் அவாவறச் சூழ்ந்தாயே.    10.10.10

அவாவறச் சூழ், அரியை அயனை அரனை அலற்றி *

அவாவற்று வீடு பெற்ற, குருகூர்ச் சடகோபன் சொன்ன *

அவாவி லந்தாதிகளால், இவை ஆயிரமும் * முடிந்த

அவாவி லந்தாதி இப்பத்தறிந்தார், பிறந்தார் உயர்ந்தே.      10.10.11

*************

திருவாய்மொழி முற்றும்

நம்மாழ்வார் திருவடிகளே சரணம்.

 

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.