[highlight_content]

Thiruvoymozhi 10-3

திருவாய்மொழி

பத்தாம் பத்து

மூன்றாம் திருவாய்மொழி

வேய்மரு தோளிணை மெலியுமாலோ !

மெலிவும் என் தனிமையும் யாதும் நோக்கா *

காமரு குயில்களும் கூவுமாலோ !

கணமயிலவை கலந்தாலுமாலோ ! *

ஆமருவின நிரை மேய்க்க நீ போக்கு

ஒரு பகல் ஆயிரமூழியாலோ *

தாமரைக் கண்கள் கொண்டு ஈர்தியாலோ !

தகவிலை தகவிலையே நீ கண்ணா !   10.3.1

தகவிலை தகவிலையே நீ கண்ணா !

தடமுலை புணர்தொறும் புணர்ச்சிக்காராச் *

சுகவெள்ளம் விசும்பிறந்து அறிவை மூழ்க்கச் சூழ்ந்து,

அது கனவென நீங்கியாங்கே *

அகவுயிரகமகந்தோறும் உள்புக்கு

ஆவியின் பரமல்ல வேட்கை அந்தோ ! *

மிகமிக இனியுன்னைப் பிரிவையாமால்

வீவ நின் பசுநிரை மேய்க்கப் போக்கே.   10.3.2

வீவ நின் பசுநிரை மேய்க்கப் போக்கு

வெவ்வுயிர் கொண்டு எனதாவி வேமால் *

யாவரும் துணை யில்லை யான் இருந்து

உன்னஞ்சன மேனியை யாட்டம் காணேன் *

போவதன்று ஒரு பகல் நீயகன்றால்

பொருகயற் கண்ணிணை நீரும் நில்லா ? *

சாவது இவ்வாய்க் குலத்தாய்ச்சி யோமாய்ப் பிறந்த

இத்தொழுத்தையோம் தனிமை தானே.  10.3.3

தொழுத்தையோம் தனிமையும் துணை பிரிந்தார்

துயரமும், நினைகிலை கோவிந்தா ! * நின்

தொழுத்தனிற் பசுக்களையே விரும்பித்

துறந்து எம்மை யிட்டு அவை மேய்க்கப் போதி *

பழுத்த நல்லமுதின் இன்சாற்று வெள்ளம்

பாவியேன் மனமகந்தோறு முள்புக்கு

அழுத்த * நின் செங்கனிவாயின் கள்வப் பணிமொழி

நினைதொறும் ஆவி வேமால்.      10.3.4

பணிமொழி நினைதொறும் ஆவி வேமால்

பகல் நிரை மேய்க்கிய போய கண்ணா !

பிணியவிழ் மல்லிகை வாடை தூவப்

பெருமத மாலையும் வந்தின்றாலோ ! *

மணிமிகு மார்வினின் முல்லைப் போது

என் வனமுலை கமழ்வித்து உன் வாயமுதம் தந்து *

அணிமிகு தாமரைக் கையை அந்தோ !

அடிச்சியோம் தலைமிசை நீ அணியாய்.              10.3.5

அடிச்சியோம் தலைமிசை நீ அணியாய்

ஆழியங் கண்ணா ! உன் கோலப் பாதம் *

பிடித்தது நடு உனக்கு அரிவையரும் பலர்

அது நிற்க எம் பெண்மை யாற்றோம் *

வடித்தடங் கண்ணிணை நீரும் நில்லா

மனமும் நில்லா, எமக்கு அது தன்னாலே *

வெடிப்பு நின் பசு நிரை மேய்க்கப் போக்கு

வேம் எமதுயிர் அழல் மெழுகிலுக்கே.    10.3.6

வேம் எமதுயிர் அழல் மெழுகிலுக்கு

வெள் வளை மேகலை கழன்று வீழ *

தூமலர்க் கண்ணிணை முத்தம் சோரத்

துணைமுலை பயந்து என தோள்கள் வாட *

மாமணி வண்ணா ! உன் செங்கமல வண்ண

மென் மலரடி நோவ நீ போய் *

ஆமகிழ்ந்துகந்து அவை மேய்க்கின்று உன்னோடு

அசுரர்கள் தலைப் பெய்யில் எவன்கொல் ஆங்கே ?    10.3.7

அசுரர்கள் தலைப் பெய்யில் எவன் கொல் ஆங்கு ? என்று

ஆழும் என்னாருயிர், ஆன் பின் போகேல் *

கசிகையும் வேட்கையும் உள் கலந்து

கலவியும் நலியும் என் கை கழியேல் *

வசிசெயுன் தாமரைக் கண்ணும் வாயும்

கைகளும் பீதக வுடையும் காட்டி *

ஒசிசெய் நுண்ணிடை இளவாய்ச்சியர்

நீயுகக்கும் நல்லவரொடும் உழிதராயே.    10.3.8

உகக்கு நல்லவரொடும் உழிதந்து

உன்தன் திருவுள்ளம் இடர் கெடுந் தோறும் * நாங்கள்

வியக்க இன்புறுதும் எம் பெண்மை யாற்றோம்

எம்பெருமான் ! பசு மேய்க்கப் போகேல் *

மிகப் பல அசுரர்கள் வேண்டுருவங் கொண்டு

நின்று உழிதருவர் கஞ்சனேவ *

அகப்படில் அவரொடும் நின்னொடு ஆங்கே

அவத்தங்கள் விளையும் என் சொற் கொள் அந்தோ !       10.3.9

அவத்தங்கள் விளையும் என் சொற் கொளந்தோ!

அசுரர்கள் வன்கையர் கஞ்சனேவத் *

தவத்தவர் மறுக நின்று உழிதருவர்

தனிமையும் பெரிது உனக்கு, இராமனையும் *

உவத்தலை உடன் திரிகிலையும் என்றென்று

ஊடுற என்னுடை ஆவி வேமால் *

திவத்திலும் பசுநிரை மேய்ப்பு உவத்தி

செங்கனி வாயெங்க ளாயர் தேவே !    10.3.10

செங்கனி வாயெங்க ளாயர் தேவு

அத்திருவடி திருவடி மேல் * பொருநல்

சங்கணி துறைவன் வண்தென் குருகூர்

வண் சடகோபன் சொல்லாயிரத்துள் *

மங்கைய ராய்ச்சியர் ஆய்ந்த மாலை

அவனொடும் பிரிவதற்கு இரங்கித் * தையல்

அங்கவன் பசு நிரை மேய்ப்பொழிப்பான்

உரைத்தன * இவையும் பத்து அவற்றின் சார்வே.   10.3.11

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.