Thiruvoymozhi 10-4

திருவாய்மொழி

பத்தாம் பத்து

நான்காம் திருவாய்மொழி

சார்வே தவ நெறிக்குத், தாமோதரன் தாள்கள் *

கார்மேக வண்ணன், கமல நயனத்தன் *

நீர்வானம் மண் எரி காலாய் நின்ற, நேமியான் *

பேர் வானவர்கள் பிதற்றும், பெருமையனே.    10.4.1

பெருமையனே, வானத் திமையோர்க்கும் காண்டற்

கருமையனே * ஆகத்தணையாதார்க்கு * என்றும்

திருமெய்யுறைகின்ற, செங்கண்மால் * நாளும்

இருமை வினை கடிந்து, இங்கு என்னை யாள்கின்றானே.  10.4.2

ஆள்கின்றான் ஆழியான், ஆரால் குறைவுடையம் ? *

மீள்கின்றதில்லைப், பிறவித்துயர் கடிந்தோம் *

வாள்கெண்டை யொண்கண், மடப்பின்னை தன்கேள்வன் *

தாள் கண்டு கொண்டு, என் தலை மேல் புனைந்தேனே.     10.4.3

தலைமேல் புனைந்தேன், சரணங்கள் * ஆலின்

இலைமேல் துயின்றான், இமையோர் வணங்க *

மலை மேல் தான் நின்று, என் மனத்துள் இருந்தானை *

நிலை பேர்க்கலாகாமை, நிச்சித்திருந்தேனே.     10.4.4

நிச்சித்திருந்தேன், என்நெஞ்சம் கழியாமை *

கைச்சக்கரத் தண்ணல், கள்வம் பெரிதுடையன் *

மெச்சப் படான் பிறர்க்கு, மெய் போலும் பொய் வல்லன் *

நச்சப் படும் நமக்கு, நாகத்தணையானே.           10.4.5

நாகத்தணையானை, நாள்தோறும் ஞானத்தால் *

ஆகத்தணைப்பார்க்கு, அருள் செய்யும் அம்மானை *

மாகத்திள மதியம் சேரும், சடையானைப் *

பாகத்து வைத்தான் தன், பாதம் பணிந்தேனே.          10.4.6

பணி நெஞ்சே ! நாளும் பரம பரம்பரனைப் *

பிணி ஒன்றும் சாரா, பிறவி கெடுத்தாளும் *

மணி நின்ற சோதி, மதுசூதன் என்னம்மான் *

அணி நின்ற செம்பொன், அடலாழியானே.            10.4.7

ஆழியான் ஆழி யமரர்க்கும் அப்பாலான் *

ஊழியான் ஊழி படைத்தான், நிரை மேய்த்தான் *

பாழியந் தோளால், வரை யெடுத்தான் பாதங்கள் *

வாழி என்நெஞ்சே ! மறவாது வாழ் கண்டாய்.              10.4.8

கண்டேன் கமல மலர்ப் பாதம், காண்டலுமே *

விண்டே யொழிந்த, வினையாயின வெல்லாம் *

தொண்டே செய்து என்றும், தொழுது வழியொழுகப் *

பண்டே, பரமன் பணித்த பணிவகையே.  10.4.9

வகையால் மனமொன்றி, மாதவனை * நாளும்

புகையால் விளக்கால், புதுமலரால் நீரால் *

திசைதோறு அமரர்கள் சென்று, இறைஞ்ச நின்ற*

தகையான் சரணம், தமர்கட்கு ஓர் பற்றே.        10.4.10

பற்றென்று பற்றிப், பரமபரம்பரனை *

மல்திண்தோள் மாலை, வழுதி வளநாடன் *

சொல்தொடை யந்தாதி ஓராயிரத்துள், இப்பத்தும் *

கற்றார்க்கு ஓர் பற்றாகும், கண்ணன் கழலிணையே.          10.4.11

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.