Thiruvoymozhi 10-5

திருவாய்மொழி

பத்தாம் பத்து

ஐந்தாம் திருவாய்மொழி

கண்ணன் கழலிணை * நண்ணும் மனமுடையீர் ! *

எண்ணும் திருநாமம் * திண்ணம் நாரணமே.     10.5.1

நாரணன் எம்மான் * பாரணங்காளன் *

வாரணம் தொலைத்த * காரணன் தானே.         10.5.2

தானே உலகெல்லாம் * தானே படைத்திடந்து *

தானே உண்டுமிழ்ந்து * தானே யாள்வானே.    10.5.3

ஆள்வான் ஆழிநீர் * கோள்வா யரவணையான் *

தாள் வாய் மலரிட்டு * நாள் வாய் நாடீரே.     10.5.4

நாடீர் நாள் தோறும் * வாடா மலர் கொண்டு *

பாடீர் அவன் நாமம் * வீடே பெறலாமே.         10.5.5

மேயான் வேங்கடம் * காயா மலர் வண்ணன் *

பேயார் முலையுண்ட * வாயான் மாதவனே.   10.5.6    திருவேங்கடம் திருப்பதி

மாதவனென்றென்று * ஓத வல்லீரேல் *

தீதொன்றும் அடையா * ஏதம் சாராவே.          10.5.7

சாரா ஏதங்கள் * நீரார் முகில் வண்ணன் *

பேர் ஆர் ஓதுவார் * ஆரார் அமரரே.        10.5.8

அமரர்க்கு அரியானைத் * தமர்கட்கு எளியானை *

அமரத் தொழுவார்கட்கு * அமரா வினைகளே.            10.5.9

வினை வல்லிருளென்னும் * முனைகள் வெருவிப் போம் *

சுனை நன் மலரிட்டு நினைமின் * நெடியானே       10.5.10

நெடியானருள் சூடும் * படியான் சடகோபன் *

நொடி யாயிரத்து இப்பத்து * அடியார்க்கு அருள் பேறே.    10.5.11

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.