Thirumozhi 2-3

பெரிய திருமொழி

இரண்டாம் பத்து

மூன்றாம் திருமொழி

 

விற்பெரு விழவும் கஞ்சனும் மல்லும்

வேழமும் பாகனும் வீழச்

செற்றவன் தன்னைப் * புரமெரி செய்த

சிவன், உறு துயர் களை தேவை *

பற்றலர் வீயக் கோல் கையில் கொண்டு

பார்த்தன் தன் தேர் முன் நின்றானைச் *

சிற்றவை பணியால் முடி துறந்தானைத்

திருவல்லிக்கேணிக் கண்டேனே.  2.3.1      திருவல்லிக்கேணி

 

வேதத்தை வேதத்தின் சுவைப் பயனை

விழுமிய முனிவர் விழுங்கும்

கோதிலின் கனியை * நந்தனார் களிற்றைக்

குவலயத்தோர் தொழுதேத்தும்

ஆதியை * அமுதை என்னை யாளுடை

அப்பனை, ஒப்பவரில்லா

மாதர்கள் வாழும் மாட மாமயிலைத் *

திருவல்லிக்கேணிக் கண்டேனே.   2.3.2      திருவல்லிக்கேணி

 

வஞ்சனை செய்யத் தாயுருவாகி

வந்த பேய், அலறி மண் சேர

நஞ்சமர் முலையூடு உயிர் செகவுண்ட

நாதனைத், தானவர் கூற்றை *

விஞ்சை வானவர் சாரணர் சித்தர்

வியந்துதி செய்யப் பெண்ணுருவாகி *

அஞ்சுவை யமுதம் அன்றளித்தானைத்

திருவல்லிக்கேணிக் கண்டேனே.   2.3.3      திருவல்லிக்கேணி

 

இந்திரனுக்கு என்று ஆயர்கள் எடுத்த

எழில் விழவில் பழ நடை செய் *

மந்திர விதியில் பூசனை பெறாது

மழை பொழிந்திடத் தளர்ந்து * ஆயர்

எந்தம்மோடு இன ஆநிரை தளராமல்

எம்பெருமான்! அருளென்ன *

அந்தமில் வரையால் மழை தடுத்தானைத்

திருவல்லிக்கேணிக் கண்டேனே.   2.3.4      திருவல்லிக்கேணி

 

இன்துணைப் பதுமத்து அலர்மகள் தனக்கும்

இன்பன், நற்புவி தனக்கு இறைவன் *

தன் துணை ஆயர் பாவை நப்பின்னை

தனக்கு இறை, மற்றையோர்க் கெல்லாம்

வன் துணை * பஞ்ச பாண்டவர்க்காகி

வாயுரை தூது சென்றியங்கும்

என் துணை * எந்தை தந்தை தம்மானைத்

 

திருவல்லிக்கேணிக் கண்டேனே.   2.3.5      திருவல்லிக்கேணி

அந்தகன் சிறுவன் அரசர் தமரசற் கிளையவன்

அணியிழையைச் சென்று *

எந்தமக்குரிமை செய்யெனத் தரியாது

எம்பெருமான் ! அருளென்ன *

சந்தமல் குழலாள் அலக்கண் நூற்றுவர்தம்

பெண்டிரும் எய்தி நூலிழப்ப *

இந்திரன் சிறுவன் தேர் முன் நின்றானைத்

திருவல்லிக்கேணிக் கண்டேனே.   2.3.6      திருவல்லிக்கேணி

 

பரதனும் தம்பி சத்துருக்கனனும்

இலக்குமனோடு மைதிலியும் *

இரவும் நன்பகலும் துதி செய்ய நின்ற

இராவணாந்தகனை எம்மானைக் *

குரவமே கமழும் குளிர் பொழிலூடு

குயிலொடு மயில்கள் நின்றால *

இரவியின் கதிர்கள் நுழைதல் செய்தறியாத்

திருவல்லிக்கேணிக் கண்டேனே.   2.3.7      திருவல்லிக்கேணி

 

பள்ளியிலோதி வந்த தன் சிறுவன்

வாயில், ஓராயிர நாமம்

ஒள்ளியவாகிப் போத * ஆங்கதனுக்கு

ஒன்றுமோர் பொறுப்பிலனாகிப் *

பிள்ளையைச் சீறி வெகுண்டு தூண் புடைப்பப்

பிறை யெயிற் றனல் விழிப் பேழ்வாய்த் *

தெள்ளிய சிங்கமாகிய தேவைத்

திருவல்லிக்கேணிக் கண்டேனே.   2.3.8      திருவல்லிக்கேணி

 

மீனமர் பொய்கை நாள்மலர் கொய்வான்

வேட்கையினொடு, சென்றிழிந்த

கானமர் வேழம் கையெடுத்தலறக்

கரா அதன் காலினைக் கதுவ *

ஆனையின் துயரம் தீரப் புள்ளூர்ந்து

சென்று நின்று ஆழி தொட்டானைத் *

தேனமர் சோலை மாட மாமயிலைத்

திருவல்லிக்கேணிக் கண்டேனே.   2.3.9      திருவல்லிக்கேணி

 

மன்னுதண் பொழிலும் வாவியும் மதிளும்

மாட மாளிகையும் மண்டபமும் *

தென்னன் தொண்டையர் கோன் செய்த நல்மயிலைத்

திருவல்லிக்கேணி நின்றானைக்

கன்னி நல்மாட மங்கையர் தலைவன்

காமரு சீர்க் கலிகன்றி *

சொன்ன சொல் மாலை பத்துடன் வல்லார்

சுகமினிதாள்வர் வானுலகே.        2.3.10    திருவல்லிக்கேணி

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.