[highlight_content]

Thirumozhi 2-5

பெரிய திருமொழி

இரண்டாம் பத்து

ஐந்தாம் திருமொழி

பாராயது உண்டுமிழ்ந்த பவளத் தூணைப்

படுகடலில் அமுதத்தைப் பரிவாய் கீண்ட

சீரானை * எம்மானைத் தொண்டர் தங்கள்

சிந்தையுள்ளே, முளைத்தெழுந்த தீங்கரும்பினைப் *

போரானைக் கொம்பொசித்த போரேற்றினைப்

புணர் மருதமிற நடந்த பொற் குன்றினைக் *

காரானை இடர் கடிந்த கற்பகத்தைக்

கண்டது நான் கடல்மல்லைத் தலசயனத்தே.           2.5.1      திருக்கடல்மல்லை

பூண்டவத்தம் பிறர்க் கடைந்து தொண்டு பட்டுப்

பொய்ந் நூலை மெய்ந் நூலென்றென்று மோதி

மாண்டு * அவத்தம் போகாதே வம்மின்,

எந்தை என் வணங்கப் படுவானைக் * கணங்களேத்தும்

நீண்டவத்தைக் கருமுகிலை எம்மான் தன்னை

நின்றவூர் நித்திலத்தைத் தொத்தார் சோலைக் *

காண்டவத்தைக் கனலெரிவாய்ப் பெய்வித்தானைக்

கண்டது நான் கடல்மல்லைத் தலசயனத்தே.            2.5.2      திருநின்றவூர்,

திருக்கடல்மல்லை

உடம்புருவில் மூன்றொன்றாய் மூர்த்தி வேறாய்

உலகுய்ய நின்றானை * அன்று பேய்ச்சி

விடம் பருகு வித்தகனைக் கன்று மேய்த்து

விளையாட வல்லானை * வரை மீகானில்

தடம்பருகு கருமுகிலைத் தஞ்சைக்கோ இல்

தவநெறிக்கு ஓர் பெரு நெறியை * வையம் காக்கும்

கடம் பரிமேல் கற்கியை நான் கண்டு கொண்டேன்

கடிபொழில் சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே.    2.5.3      தஞ்சை மாமணிக் கோயில்,

திருக்கடல்மல்லை

பேய்த்தாயை முலையுண்ட பிள்ளை தன்னைப்

பிணைமருப்பிற் கருங்களிற்றைப் * பிணைமான் நோக்கின்

ஆய்த்தாயர் தயிர்வெண்ணெ யமர்ந்த கோவை

அந்தணர்தம் அமுதத்தை குரவை முன்னே

கோத்தானைக் * குடமாடு கூத்தன் தன்னைக்

கோகுலங்கள் தளராமல் குன்றமேந்திக்

காத்தானை * எம்மானைக் கண்டு கொண்டேன்

கடிபொழில்சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே.              2.5.4      திருக்கடல்மல்லை

பாய்ந்தானைத் திரிசகடம் பாறி வீழப்

பாலகனாய் ஆலிலையில் பள்ளியின்பம்

ஏய்ந்தானை இலங்கொளி சேர் மணிக்குன்றன்ன

ஈரிரண்டு மால்வரைத் தோள் அம்மான் தன்னைத் *

தோய்ந்தானை நிலமகள் தோள், தூதிற் சென்று அப்

பொய்யறை வாய்ப் புகப் பெய்து மல்லர் மங்கக்

காய்ந்தானை * எம்மானைக் கண்டு கொண்டேன்

கடிபொழில்சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே,               2.5.5      திருக்கடல்மல்லை

கிடந்தானைத் தடங்கடலுள் பணங்கள் மேவிக்

கிளர் பொறிய மறிதிரிய அதனின் பின்னே

படர்ந்தானைப் * படுமதத்த களிற்றின் கொம்பு

பறித்தானைப், பாரிடத்தை எயிறு கீற

இடந்தானை * வளைமருப்பின் ஏனமாகி,

இருநிலனும் பெருவிசும்பும் எய்தா வண்ணம்

கடந்தானை * எம்மானைக் கண்டு கொண்டேன்

கடிபொழில்சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே.            2.5.6      திருக்கடல்மல்லை

பேணாத வலியரக்கர் மெலிய, அன்று

பெருவரைத் தோளிற நெரித்து * அன்று அவுணர் கோனைப்

பூணாகம் பிளவெடுத்த போர் வல்லோனைப்

பொருகடலுள் துயிலமர்ந்த புள்ளூர்தியை *

ஊணாகப் பேய் முலை நஞ்சுண்டான் தன்னை

உள்ளுவா ருள்ளத்தே உறைகின்றானை *

காணாது திரிதருவேன் கண்டு கொண்டேன்

கடிபொழில் சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே.        2.5.7      திருக்கடல்மல்லை

பெண்ணாகி இன்னமுதம் வஞ்சித்தானைப்

பிறையெயிற்று அன்றடலரியாய்ப் பெருகினானைத் *

தண்ணார்ந்த வார்புனல் சூழ் மெய்யமென்னும்

தடவரைமேல் கிடந்தானைப், பணங்கள் மேவி

எண்ணானை * எண்ணிறந்த புகழினானை,

இலங்கொளி சேர் அரவிந்தம் போன்று நீண்ட

கண்ணானைக் * கண்ணாரக் கண்டு கொண்டேன்

கடிபொழில்சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே.             2.5.8      திருமெய்யம்,

திருக்கடல்மல்லை

தொண்டாயார் தாம் பரவும் அடியினானைப்,

படி கடந்த தாளாளற்கு ஆளாய் உய்தல்

விண்டானைத் * தென்னிலங்கை அரக்கர் வேந்தை

விலங்குண்ண, வலங்கை வாய்ச் சரங்களாண்டு *

பண்டாய வேதங்கள் நான்கும், ஐந்து

வேள்விகளும் கேள்வியோடு அங்கமாறும்

கண்டானைத் * தொண்டனேன் கண்டு கொண்டேன்

கடிபொழில்சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே.              2.5.9      திருக்கடல்மல்லை

படநாகத்தணைக் கிடந்து அன்று அவுணர் கோனைப்

படவெகுண்டு மருதிடை போய்ப் பழன வேலித் *

தடமார்ந்த கடல்மல்லைத் தலசயனத்துத்

தாமரைக் கண் துயிலமர்ந்த தலைவன் தன்னைக் *

கடமாருங் கருங்களிறு வல்லான், வெல் போர்க்

கலிகன்றி ஒலிசெய்த இன்பப் பாடல் *

திடமாக இவை யைந்துமைந்தும் வல்லார்

தீவினையை முதலரிய வல்லார் தாமே.          2.5.10    திருக்கடல்மல்லை

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.