Thirumozhi 2-7

பெரிய திருமொழி

இரண்டாம் பத்து

ஏழாம் திருமொழி

திவளும் வெண்மதிபோல் திருமுகத்தரிவை

செழுங்கடலமுதினிற் பிறந்த

அவளும் * நின்னாகத்திருப்பதும் அறிந்தும்

ஆகிலும் ஆசை விடாளால் *

குவளையங்கண்ணி கொல்லியம்பாவை

சொல்லு, நின்தாள் நயந்திருந்த

இவளை * உன்மனத்தால் என் நினைந்திருந்தாய் ?

இடவெந்தை எந்தை பிரானே !        2.7.1      திருவிடைவெந்தை

துளம்படு முறுவல் தோழியர்க்கு அருளாள்

துணைமுலை சாந்துகொண்டு அணியாள் *

குளம்படு குவளைக் கண்ணிணை எழுதாள்

கோலநன்மலர் குழற்கு அணியாள் *

வளம்படு முந்நீர் வையம் முன்னளந்த

மாலென்னும், மாலின மொழியாள் *

இளம்படி யிவளுக்கு என் நினைந்திருந்தாய்?

இடவெந்தை எந்தை பிரானே !         2.7.2      திருவிடைவெந்தை

சாந்தமும் பூணும் சந்தனக் குழம்பும்

தடமுலைக்கு அணியிலும் தழலாம் *

போந்த வெண் திங்கள் கதிர் சுட மெலியும்

பொருகடல் புலம்பிலும் புலம்பும் *

மாந்தளிர் மேனி வண்ணமும் பொன்னும்

வளைகளும் இறை நில்லா * என்தன்

ஏந்திழை யிவளுக்கு என் நினைந்திருந்தாய் ?

இடவெந்தை எந்தை பிரானே !         2.7.3      திருவிடைவெந்தை

ஊழியில் பெரிதால் நாழிகை யென்னும்

ஒண்சுடர் துயின்றதாலென்னும் *

ஆழியும் புலம்பும் அன்றிலும் உறங்கா

தென்றலும் தீயினிற் கொடிதாம் *

தோழி ஓ ! என்னும் துணைமுலை அரக்கும்

சொல்லுமின் என்செய்கேன் ? என்னும் *

ஏழையென் பொன்னுக்கு என் நினைந்திருந்தாய்?

இடவெந்தை எந்தை பிரானே !         2.7.4      திருவிடைவெந்தை

ஓதிலும் உன் பேரன்றி மற்றோதாள்

உருகும் நின் திருவுரு நினைந்து *

காதன்மை பெரிது கையறவுடையள்

கயல் நெடுங்கண் துயில் மறந்தாள் *

பேதையேன் பேதை பிள்ளைமை பெரிது

தெள்ளியள் வள்ளி நுண்மருங்குல் *

ஏதலர் முன்னா என் நினைந்திருந்தாய் ?

இடவெந்தை எந்தை பிரானே !         2.7.5      திருவிடைவெந்தை

தன்குடிக்கு ஏதும் தக்கவா நினையாள்

தடங்கடல் நுடங்கெயில் இலங்கை *

வன்குடி மடங்க வாளமர் தொலைத்த

வார்த்தை கேட்டு இன்புறும் மயங்கும் *

மின்கொடி மருங்குல் சுருங்க மேல் நெருங்கி

மென்முலை பொன் பயந்திருந்த *

என் கொடி இவளுக்கு என் நினைந்திருந்தாய்?

இடவெந்தை எந்தை பிரானே !         2.7.6      திருவிடைவெந்தை

உளங்கனிந்திருக்கும் உன்னையே பிதற்றும்

உனக்கன்றி எனக்கு அன்பொன்றிலளாள் *

வளங்கனி பொழில் சூழ் மாலிருஞ்சோலை

மாயனே ! என்று வாய் வெருவும் *

களங்கனி முறுவல் காரிகை, பெரிது

கவலையோடு அவலம் சேர்ந்திருந்த *

இளங்கனி இவளுக்கு என் நினைந்திருந்தாய்?

இடவெந்தை எந்தை பிரானே !       2.7.7      திருமாலிருஞ்சோலை,

திருவிடைவெந்தை

அலங்கெழு தடக்கை ஆயன் வாயாம்பற்கு

அழியுமால் என் உள்ளம் என்னும் *

புலங்கெழு பொருநீர்ப் புட்குழி பாடும்

போதுமோ நீர்மலைக்கு? என்னும் *

குலங்கெழு கொல்லி கோமளவல்லிக்

கொடியிடை நெடுமழைக் கண்ணி *

இலங்கெழில் தோளிக்கு என் நினைந்திருந்தாய் ?

இடவெந்தை எந்தை பிரானே !         2.7.8      திருப்புட்குழி,

திருநீர்மலை,

திருவிடைவெந்தை

பொன்குலாம் பயலை பூத்தன மென்தோள்

பொருகயல் கண்துயில் மறந்தாள் *

அன்பினால் உன்மேல் ஆதரம் பெரிது

என்னணங்கினுக்கு உற்ற நோய் அறியேன் *

மின்குலா மருங்குல் சுருங்க மேல் நெருங்கி

வீங்கிய வனமுலையாளுக்கு *

என்கொலாம்? குறிப்பில் என் நினைந்திருந்தாய்?

இடவெந்தை எந்தை பிரானே!     2.7.9      திருவிடைவெந்தை

அன்னமும் மீனும் ஆமையும் அரியும்

ஆய, எம்மாயனே ! அருளாய்

என்னும் * இன்தொண்டர்க்கு இன்னருள் புரியும்

இடவெந்தை எந்தை பிரானை *

மன்னு மாமாட மங்கையர் தலைவன்

மானவேல் கலியன் வாயொலிகள் *

பன்னிய பனுவல் பாடுவார் நாளும்

பழவினை பற்றறுப்பாரே.    2.7.10    திருவிடைவெந்தை

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.