Thirumozhi 2-6

பெரிய திருமொழி

இரண்டாம் பத்து

ஆறாம் திருமொழி

நண்ணாத வாளவுணர் இடைப்புக்கு * வானவரைப்

பெண்ணாகி, அமுதூட்டும் பெருமானார் * மருவினிய

தண்ணார்ந்த கடல்மல்லைத் தலசயனத்து உறைவாரை *

எண்ணாதே இருப்பாரை, இறைப்பொழுதும் எண்ணோமே.   2.6.1      திருக்கடல்மல்லை

பார்வண்ண மடமங்கை, பனிநன் மாமலர்க் கிழத்தி *

நீர்வண்ணன் மார்வத்தில், இருக்கையை முன் நினைந்தவனூர் *

கார்வண்ண முதுமுந்நீர்க், கடல்மல்லைத் தலசயனம் *

ஆர் எண்ணும் நெஞ்சுடையார், அவரெம்மை ஆள்வாரே.     2.6.2      திருக்கடல்மல்லை

ஏனத்தினுருவாகி, நிலமங்கை யெழில் கொண்டான் *

வானத்திலவர் முறையால், மகிழ்ந்தேத்தி வலங்கொள்ளக் *

கானத்தின் கடல்மல்லைத், தலசயனத் துறைகின்ற *

ஞானத்தினொளி யுருவை நினைவார், என் நாயகரே.          2.6.3      திருக்கடல்மல்லை

விண்டாரை வென்று, ஆவி விலங்குண்ண * மெல்லியலார்

கொண்டாடு மல்லகலம் அழலேற, வெஞ்சமத்துக்

கண்டாரைக் * கடல்மல்லைத் தலசயனத்து, உறைவாரைக் *

கொண்டாடும் நெஞ்சுடையார், அவர் எங்கள் குலதெய்வமே.         2.6.4                திருக்கடல்மல்லை

பிச்சச் சிறுபீலிச், சமண் குண்டர் முதலாயோர் *

விச்சைக்கிறை யென்னும், அவ்விறையைப் பணியாதே *

கச்சிக் கிடந்தவனூர், கடல்மல்லைத் தலசயனம் *

நச்சித் தொழுவாரை, நச்சு என்தன் நல் நெஞ்சே !     2.6.5      திருவெ:கா,

திருக்கடல்மல்லை

புலங்கொள் நிதிக்குவையோடு, புழைக்கைம்மா களிற்றினமும் *

நலங்கொள் நவமணிக் குவையும் சுமந்து எங்கும் நான்றொசிந்து *

கலங்கள் இயங்கும் மல்லைக், கடல்மல்லைத் தலசயனம் *

வலங்கொள் மனத்தாரவரை, வலங்கொள் என் மடநெஞ்சே.        2.6.6                திருக்கடல்மல்லை

பஞ்சிச் சிறுகூழை, உருவாகி * மருவாத

வஞ்சப் பெண் நஞ்சுண்ட, அண்ணல் * முன் நண்ணாத

கஞ்சைக் கடந்தவனூர், கடல்மல்லைத் தலசயனம் *

நெஞ்சில் தொழுவாரைத் தொழுவாயென் தூய் நெஞ்சே !        2.6.7                திருக்கடல்மல்லை

செழுநீர் மலர்க் கமலம், திரையுந்து வன்பகட்டால் *

உழுநீர் வயலுழவர் உழப், பின் முன் பிழைத்தெழுந்த *

கழுநீர்க் கடிகமழும், கடல்மல்லைத் தலசயனம் *

தொழுநீர் மனத்தவரைத் தொழுவாயென் தூய்நெஞ்சே !     2.6.8      திருக்கடல்மல்லை

பிணங்களிடு காடதனுள், நடமாடு பிஞ்ஞகனோடு *

இணங்கு திருச்சக்கரத்து எம்பெருமானார்க்கிடம் * விசும்பில்

கணங்களியங்கும் மல்லைக், கடல்மல்லைத் தலசயனம் *

வணங்கும் மனத்தாரவரை, வணங்கென்தன் மடநெஞ்சே !           2.6.9                திருக்கடல்மல்லை

கடிகமழும் நெடுமறுகில், கடல்மல்லைத் தலசயனத்து *

அடிகளடியே நினையும், அடியவர்கள்தம் அடியான் *

வடிகொள் நெடுவேல் வலவன், கலிகன்றி ஒலிவல்லார் *

முடிகொள் நெடுமன்னவர்தம், முதல்வர் முதலாவாரே.    2.6.10    திருக்கடல்மல்லை

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.