Thirumozhi 2-8

பெரிய திருமொழி

இரண்டாம் பத்து

எட்டாம் திருமொழி

திரிபுரம் மூன்றெரித்தானும்

மற்றை மலர்மிசை மேல் அயனும் வியப்ப *

முரிதிரைமா கடல் போல் முழங்கி

மூவுலகும் முறையால் வணங்க *

எரியென கேசர வாளெயிற்றோடு

இரணியனாகம் இரண்டு கூறா *

அரியுருவாம் இவரார் கொல் ? என்ன

அட்டபுயகரத்தேன் என்றாரே.            2.8.1      அட்டபுயகரம்

வெந்திறல் வீரரில் வீரரொப்பார்

வேதமுரைத்து இமையோர் வணங்கும் *

செந்தமிழ் பாடுவார் தாம் வணங்கும்

தேவர், இவர்கொல் ? தெரிக்க மாட்டேன் *

வந்து குறளுருவாய் நிமிர்ந்து

மாவலி வேள்வியில் மண்ணளந்த *

அந்தணர் போன்றிவரார் கொல் ? என்ன

அட்டபுயகரத்தேன் என்றாரே.         2.8.2      அட்டபுயகரம்

செம்பொனிலங்கு வலங்கை வாளி

திண்சிலை தண்டொடு சங்கம் ஒள்வாள் *

உம்பரிரு சுடராழியோடு

கேடகம் ஒண்மலர் பற்றி * எற்றே

வெம்பு சினத்து அடல்வேழம் வீழ

வெண்மருப்பொன்று பறித்து இருண்ட *

அம்புதம் போன்றிவரார் கொல் ? என்ன

அட்டபுயகரத்தேன் என்றாரே.             2.8.3      அட்டபுயகரம்

மஞ்சுயர் மாமணிக் குன்றமேந்தி

மாமழை காத்து * ஒரு மாயவானை

அஞ்ச, அதன் மருப்பன்று வாங்கும்

ஆயர்கொல் ? மாயம் அறியமாட்டேன் *

வெஞ்சுடராழியும் சங்குமேந்தி

வேதம் முன் ஓதுவர் நீதிவானத்து *

அஞ்சுடர் போன்றிவரார் கொல் ? என்ன

அட்டபுயகரத்தேன் என்றாரே.            2.8.4      அட்டபுயகரம்

கலைகளும் வேதமும் நீதிநூலும்

கற்பமும் சொற்பொருள் தானும் * மற்றை

நிலைகளும் வானவர்க்கும் பிறர்க்கும்

நீர்மையினால் அருள்செய்து * நீண்ட

மலைகளும் மாமணியும் மலர் மேல்

மங்கையும் சங்கமும் தங்குகின்ற *

அலைகடல் போன்றிவரார் கொல்? என்ன

அட்டபுயகரத்தேன் என்றாரே.        2.8.5      அட்டபுயகரம்

எங்ஙனும் நாம் இவர் வண்ணம் எண்ணில்

ஏதும் அறிகிலம் * ஏந்திழையார்

சங்கும் மனமும் நிறைவும் எல்லாம்

தம்மனவாகப் புகுந்து * தாமும்

பொங்கு கருங்கடல் பூவை காயா

போதவிழ் நீலம் புனைந்த மேகம் *

அங்ஙனம் போன்றிவரார் கொல் ? என்ன

அட்டபுயகரத்தேன் என்றாரே.             2.8.6      அட்டபுயகரம்

முழுசி வண்டாடிய தண்துழாயின்

மொய்ம்மலர்க் கண்ணியும் மேனியும் * சாந்தம்

இழுசிய கோலம் இருந்தவாறும்

எங்ஙனம் சொல்லுகேன் ? * ஓவிநல்லார்

எழுதிய தாமரையன்ன கண்ணும்

ஏந்தெழிலாகமும் தோளும் வாயும் *

அழகியதாம் இவரார் கொல் ? என்ன

அட்டபுயகரத்தேன் என்றாரே.           2.8.7      அட்டபுயகரம்

மேவி எப்பாலும் விண்ணோர் வணங்க

வேதமுரைப்பர், முந்நீர் மடந்தை

தேவி * அப்பால் அதிர் சங்கம் இப்பால் சக்கரம்,

மற்றிவர் வண்ணம் எண்ணில் *

காவியொப்பார் கடலேயுமொப்பார்

கண்ணும் வடிவும் நெடியராய், என்

ஆவியொப்பார் * இவரார் கொல் ? என்ன

அட்டபுயகரத்தேன் என்றாரே.       2.8.8      அட்டபுயகரம்

தஞ்சம், இவர்க்கு என் வளையும் நில்லா

நெஞ்சமும் தம்மதே சிந்தித்தேற்கு *

வஞ்சி மருங்குல் நெருங்க நோக்கி

வாய் திறந்து ஒன்று பணித்ததுண்டு *

நஞ்சமுடைத்து இவர் நோக்கும் நோக்கம்

நான் இவர் தம்மை அறியமாட்டேன்

அஞ்சுவன் * மற்றிவரார் கொல் ? என்ன

அட்டபுயகரத்தேன் என்றாரே.        2.8.9      அட்டபுயகரம்

மன்னவன் தொண்டையர் கோன் வணங்கும்

நீண்முடி மாலை வயிர மேகன் *

தன்வலி தன்புகழ் சூழ்ந்த கச்சி

அட்டபுயகரத்து ஆதி தன்னை *

கன்னி நன்மாமதிள் மங்கை வேந்தன்

காமுறு சீர்க் கலிகன்றி * குன்றா

இன்னிசையால் சொன்ன செஞ்சொல் மாலை

ஏத்த வல்லார்க்கு இடம் வைகுந்தமே.  2.8.10    அட்டபுயகரம்

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.