Thirumozhi 1-1

பெரிய திருமொழி

இரண்டாமாயிரம்

திருமங்கையாழ்வார் அருளிச்செய்த

பெரிய திருமொழித் தனியன்கள்

(திருக்கோட்டியூர்நம்பி அருளிச்செய்தது )

கலயாமி கலித்வம்ஸம் கவிம் லோகதிவாகரம்

யஸ்யகோபி: ப்ரகாஶாபி: ஆவித்யம்நிஹதம்தம:

(எம்பெருமானார் அருளிச்செய்தது)

வாழிபரகாலன் வாழிகலிகன்றி*

வாழிகுறையலூர் வாழ்வேந்தன் வாழியரோ*

மாயோனைவாள்வலியால்மந்திரங்கொள்* மங்கையர்கோன்

தூயோன்சுடர்மானவேல்,

(ஆழ்வான் அருளிச்செய்தது)

நெஞ்சுக்கிருள்கடி தீபம் அடங்காநெடும்பிறவி

நஞ்சுக்குநல்லவமுதம் தமிழ்நன்னூல் துறைகள்

அஞ்சுக்கிலக்கியம் ஆரணசாரம்* பரசமயப்

பஞ்சுக்கனலின் பொறி* பரகாலன்பனுவல்களே.

(எம்பார் அருளிச்செய்தது)

எங்கள் கதியே இராமாநுசமுனியே

சங்கைகெடுத்தாண்டதவராசா – பொங்குபுகழ்

மங்கையர்கோனீந்தமறையாயிரமனைத்தும்

தங்குமனம்நீ எனக்குத்தா.

(மாலைத்தனியேவழிபறிக்கவேணுமென்று *  கோலிப்பதிவிருந்தகொற்றவனே!* – வேலை அணைத்தருளுங்கையாலடியேன்வினையை * துணித்தருளவேனும் துணிந்து)

முதல் பத்து

முதல் திருமொழி

வாடினேன் வாடி வருந்தினேன் மனத்தால்

பெருந்துயர் இடும்பையில் பிறந்து

கூடினேன் * கூடி இளையவர் தம்மோடு

அவர் தரும் கலவியே கருதி

ஓடினேன் * ஓடி உய்வதோர் பொருளால்

உணர்வெனும் பெரும் பதம் திறந்து *#

நாடினேன் நாடி நான் கண்டு கொண்டேன்

நாராயணா என்னும் நாமம்.    1.1.1

ஆவியே! அமுதே ! என நினைந்துருகி

அவரவர் பணமுலை துணையாப் *

பாவியேன் உணராது எத்தனை பகலும்

பழுது போயொழிந்தன நாள்கள் *

தூவிசேர் அன்னம் துணையொடும் புணரும்

சூழ் புனல் குடந்தையே தொழுது, என் * (தேன் முதற்பதிப்பு)

நாவினால் உய்ய நான் கண்டு கொண்டேன்

நாராயணா என்னும் நாமம்.    1.1.2      திருக்குடந்தை (கும்பகோணம்)

சேமமே வேண்டித் தீவினை பெருக்கித்

தெரிவைமார் உருவமே மருவி *

ஊமனார் கண்ட கனவிலும் பழுதாய்

ஒழிந்தன, கழிந்த அந்நாள்கள் *

காமனார் தாதை நம்முடை யடிகள்

தம்மடைந்தார் மனத்திருப்பார்

நாமம் * நானுய்ய நான் கண்டு கொண்டேன்

நாராயணா என்னும் நாமம்.    1.1.3

வென்றியே வேண்டி வீழ்பொருட்கிரங்கி

வேற்கணார் கலவியே கருதி *

நின்றவாநில்லா நெஞ்சினையுடையேன்

என் செய்கேன் ? நெடுவிசும்பணவும்

பன்றியாய் அன்று பாரகங் கீண்ட

பாழியான் ஆழியானருளே *

நன்று நானுய்ய நான் கண்டு கொண்டேன்

நாராயணா என்னும் நாமம்.    1.1.4

கள்வனேனானேன் படிறு செய்திருப்பேன்

கண்டவா திரிதந்தேனேலும் *

தெள்ளியேனானேன் செல்கதிக் கமைந்தேன்

சிக்கெனத் திருவருள் பெற்றேன் *

உள்ளெலாமுருகிக் குரல் தழுத்தொழிந்தேன்

உடம்பெலாம் கண்ணநீர் சோர *

நள்ளிருளளவும் பகலும் நானழைப்பன்

நாராயணா என்னும் நாமம்.    1.1.5

எம்பிரான் எந்தை என்னுடைச் சுற்றம்

எனக்கரசு என்னுடை வாழ்நாள் *

அம்பினால் அரக்கர் வெருக்கொள நெருக்கி

அவருயிர் செகுத்த எம் அண்ணல் *

வம்புலாம் சோலை மாமதிள், தஞ்சை

மாமணிக் கோயிலே வணங்கி *

நம்பிகாள் ! உய்ய நான் கண்டு கொண்டேன்

நாராயணா என்னும் நாமம்.    1.1.6      தஞ்சை மாமணிக் கோயில்

இற்பிறப்பறியீர் இவரவரென்னீர்

இன்னதோர் தன்மையென்று உணரீர் *

கற்பகம் புலவர் களைகண் என்று உலகில்

கண்டவா தொண்டரைப் பாடும்

சொற்பொருளாளீர் * சொல்லுகேன் வம்மின்

சூழ்புனற் குடந்தையே தொழுமின் *

நற்பொருள் காண்மின் பாடி நீருய்ம்மின்

நாராயணா என்னும் நாமம்.    1.1.7      திருக்குடந்தை (கும்பகோணம்)

கற்றிலேன் கலைகள் ஐம்புலன் கருதும்

கருத்துளே திருத்தினேன் மனத்தைப் *

பெற்றிலேன் அதனால் பேதையேன் நன்மை

பெருநிலத்தா ருயிர்க்கெல்லாம் *

செற்றமே வேண்டித் திரிதர்வேன் தவிர்ந்தேன்

செல்கதிக்கு உய்யுமாறெண்ணி *

நற்றுணையாகப் பற்றினேன் அடியேன்

நாராயணா என்னும் நாமம்.    1.1.8

குலம் தரும் செல்வம் தந்திடும்

அடியார் படு துயராயின வெல்லாம்

நிலந்தரஞ் செய்யும் நீள்விசும்பருளும்

அருளொடு பெருநில மளிக்கும் *

வலம் தரும் மற்றுந் தந்திடும்

பெற்ற தாயினும் ஆயின செய்யும் *

நலந்தருஞ் சொல்லை நான் கண்டு கொண்டேன்

நாராயணா என்னும் நாமம்.    1.1.9

மஞ்சுலாஞ் சோலை வண்டறை மாநீர்

மங்கையார் வாள் கலிகன்றி *

செஞ்சொலாலெடுத்த தெய்வ நன்மாலை

இவை கொண்டு சிக்கெனத் தொண்டீர் ! *

துஞ்சும் போது அழைமின் துயர்வரில் நினைமின்

துயரிலீர் சொல்லிலும் நன்றாம் *

நஞ்சு தான் கண்டீர் நம்முடை வினைக்கு

நாராயணா என்னும் நாமம். 1.1.10

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.