Thirumozhi 1-3

பெரிய திருமொழி

முதல் பத்து

மூன்றாம் திருமொழி

முற்ற மூத்துக் கோல் துணையா முன்னடி நோக்கி வளைந்து *

இற்ற கால் போல் தள்ளி மெள்ள இருந்து அங்கு இளையாமுன் *

பெற்ற தாய் போல் வந்த பேய்ச்சி பெருமுலையூடு * உயிரை

வற்ற வாங்கி யுண்ட வாயான் வதரி வணங்குதுமே. 1.3.1    வதரியாச்சிராமம்

முதுகு பற்றிக் கைத்தலத்தால் முன்னொரு கோலூன்றி *

விதிர்விதிர்த்துக் கண்சுழன்று மேற்கிளை கொண்டிருமி *

இது என்னப்பர் மூத்தவாறென்று இளையவர் ஏசாமுன் *

மதுவுண் வண்டு பண்கள் பாடும் வதரி வணங்குதுமே.          1.3.2      வதரியாச்சிராமம்

உறிகள்போல் மெய்ந்நரம்பெழுந்து ஊன்தளர்ந்து உள்ளமெள்கி *

நெறியை நோக்கிக் கண் சுழன்று நின்று நடுங்காமுன் *

அறிதியாகில் நெஞ்சம் ! அன்பாய் * ஆயிர நாமம் சொல்லி

வெறிகொள் வண்டு பண்கள் பாடும் வதரி வணங்குதுமே. 1.3.3      வதரியாச்சிராமம்

பீளை சோரக் கண்ணிடுங்கிப் பித்தெழ மூத்து இருமி *

தாள்கள் நோவத் தம்மில் முட்டித் தள்ளி நடவா முன் *

காளையாகிக் கன்று மேய்த்துக் குன்றெடுத்து அன்று நின்றான் *

வாளை பாயும் தண்தடம்சூழ் வதரி வணங்குதுமே.    1.3.4      வதரியாச்சிராமம்

பண்டு காமரானவாறும் பாவையர் வாயமுதம்

உண்டவாறும் * வாழ்ந்தவாறும் ஒக்கவுரைத்து இருமித் *

தண்டு காலா ஊன்றியூன்றித் தள்ளி நடவாமுன் *

வண்டு பாடும் தண்துழாயான் வதரி வணங்குதுமே. 1.3.5      வதரியாச்சிராமம்

எய்த்த சொல்லோடு ஈளையேங்கி இருமி இளைத்து * உடலம்

பித்தர் போலச் சித்தம் வேறாய்ப் பேசி அயரா முன் *

அத்தன் எந்தை ஆதிமூர்த்தி ஆழ்கடலைக் கடைந்த *

மைத்த சோதி எம்பெருமான் வதரி வணங்குதுமே.     1.3.6      வதரியாச்சிராமம்

பப்ப ! அப்பர் மூத்தவாறு ! பாழ்ப்பது சீத்திரளை

யொப்ப * ஐக்கள் போதவுந்த உன்தமர் காண்மினென்று *

செப்பு நேர் மென் கொங்கை நல்லார், தாம் சிரியாத முன்னம் *

வைப்பும் நங்கள் வாழ்வுமானான் வதரி வணங்குதுமே.         1.3.7      வதரியாச்சிராமம்

ஈசி போமின் ஈங்கு இரேன்மின் இருமி இளைத்தீர் * உள்ளம்

கூசியிட்டீர் என்று பேசும் குவளையங் கண்ணியர் பால் *

நாசமான பாசம் விட்டு நல் நெறி நோக்கலுறில் *

வாசம் மல்கு தண்துழாயான் வதரி வணங்குதுமே.     1.3.8      வதரியாச்சிராமம்

புலன்கள்நைய மெய்யில் மூத்துப் போந்திருந்து உள்ளமெள்கிக் *

கலங்க ஐக்கள் போதவுந்திக் கண்ட பிதற்றா முன் *

அலங்கலாய தண் துழாய் கொண்டு ஆயிர நாமம் சொல்லி *

வலங்கொள் தொண்டர் பாடியாடும் வதரி வணங்குதுமே. 1.3.9         வதரியாச்சிராமம்

வண்டு தண் தேனுண்டு வாழும் வதரி நெடுமாலைக் *

கண்டல் வேலி மங்கை வேந்தன் கலியனொலி மாலை *

கொண்டு தொண்டர் பாடியாடக் கூடிடில் நீள்விசும்பில் *

அண்டமல்லால் மற்று அவர்க்கு ஓராட்சி அறியோமே. 1.3.10              வதரியாச்சிராமம்

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.