[highlight_content]

Thirumozhi 1-7

பெரிய திருமொழி

முதல் பத்து

ஏழாம் திருமொழி

அங்கண் ஞாலம் அஞ்ச அங்கோர் ஆளரியாய் * அவுணன்

பொங்க ஆகம் வள்ளுகிரால் போழ்ந்த புனிதனிடம் *

பைங்கணானைக் கொம்பு கொண்டு பத்திமையால் * அடிக்கீழ்ச்

செங்கணாளி இட்டிறைஞ்சும் சிங்கவேழ் குன்றமே.    1.7.1      சிங்கவேழ்குன்றம் (அகோபிலம்)

அலைத்த பேழ்வாய் வாளெயிற்றோர் கோளரியாய் * அவுணன்

கொலைக் கையாளன் நெஞ்சிடந்த, கூருகிராளனிடம் ,

மலைத்த செல் சாத்தெறிந்த பூசல், வன்துடிவாய் கடுப்பச் *

சிலைக்கை வேடர் தெழிப்பறாத, சிங்கவேழ் குன்றமே. 1.7.2 சிங்கவேழ்குன்றம் (அகோபிலம்)

ஏய்ந்த பேழ்வாய், வாளெயிற்றோர் கோளரியாய் * அவுணன்

வாய்ந்த ஆகம் வள்ளுகிரால், வகிர்ந்த அம்மானதிடம் *

ஓய்ந்த மாவும் உடைந்த குன்றும், அன்றியும் நின்று அழலால்

தேய்ந்த வேயு மல்லதில்லாச், சிங்கவேழ் குன்றமே. 1.7.3      சிங்கவேழ்குன்றம் (அகோபிலம்)

எவ்வம் வெவ்வேல் பொன் பெயரோன், ஏதலனின்னுயிரை

வவ்வி * ஆகம் வள்ளுகிரால், வகிர்ந்த அம்மானதிடம் *

கவ்வு நாயும் கழுகும், உச்சிப் போதொடு கால் சுழன்று

தெய்வமல்லால் செல்ல வொண்ணாச் * சிங்கவேழ் குன்றமே.      1.7.4                சிங்கவேழ்குன்றம் (அகோபிலம்)

மென்ற பேழ்வாய், வாளெயிற்றோர் கோளரியாய் * அவுணன்

பொன்ற ஆகம் வள்ளுகிரால், போழ்ந்த புனிதனிடம் *

நின்ற செந்தீ மொண்டு சூறை, நீள்விசும்பூடிரியச் *

சென்று காண்டற்கரிய கோயில், சிங்கவேழ் குன்றமே. 1.7.5  சிங்கவேழ்குன்றம் (அகோபிலம்)

எரிந்த பைங்கணிலங்கு பேழ்வாய் எயிற்றொடுஇதுஎவ்வுருஎன்று*

இரிந்து வானோர் கலங்கியோட இருந்த அம்மானதிடம் *

நெரிந்த வேயின் முழையுள் நின்று நீள் நெறிவாய் உழுவை *

திரிந்த ஆனைச் சுவடு பார்க்கும் சிங்கவேழ் குன்றமே. 1.7.6               சிங்கவேழ்குன்றம் (அகோபிலம்)

முனைத்த சீற்றம் விண்சுடப் போய், மூவுலகும் பிறவும் *

அனைத்து மஞ்ச ஆளரியாய், இருந்த அம்மானதிடம் *

கனைத்த தீயும் கல்லுமல்லா, வில்லுடை வேடருமாய்த் *

தினைத் தனையும் செல்லவொண்ணாச், சிங்கவேழ் குன்றமே.   1.7.7                சிங்கவேழ்குன்றம் (அகோபிலம்)

நாத்தழும்ப நான்முகனும் ஈசனுமாய், முறையால்

ஏத்த * அங்கு ஓராளரியாய், இருந்த அம்மானதிடம் *

காய்த்த வாகை நெற்றொலிப்பக், கல்லதர் வேய்ங்கழை போய் *

தேய்த்த தீயால் விண் சிவக்கும், சிங்கவேழ் குன்றமே. 1.7.8                சிங்கவேழ்குன்றம் (அகோபிலம்)

நல்லை நெஞ்சே ! நாம் தொழுதும், நம்முடை நம்பெருமான் *

அல்லி மாதர் புல்க நின்ற, ஆயிரம் தோளனிடம் *

நெல்லி மல்கிக் கல்லுடைப்பப் புல்லிலை யார்த்து * அதர்வாய்ச்

சில்லி சில்லென்று ஒல்லறாத, சிங்கவேழ் குன்றமே. 1.7.9    சிங்கவேழ்குன்றம் (அகோபிலம்)

செங்கணாளி இட்டிறைஞ்சும், சிங்கவேழ் குன்றுடைய *

எங்களீச னெம்பிரானை, இருந்தமிழ் நூற்புலவன் *

மங்கையாளன் மன்னு தொல்சீர், வண்டறை தார்க்கலியன்

சங்கையாளன் செஞ்சொல் மாலை, வல்லவர் தீதிலரே. 1.7.10            சிங்கவேழ்குன்றம் (அகோபிலம்)

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.