[highlight_content]

Thirumozhi 1-8

பெரிய திருமொழி

முதல் பத்து

எட்டாம் திருமொழி

கொங்கலர்ந்த மலர்க்குருந்தம் ஒசித்த கோவலன் எம்பிரான் *

சங்கு தங்கு தடங்கடல், துயில் கொண்ட தாமரைக் கண்ணினன் *

பொங்கு புள்ளினை வாய் பிளந்த புராணர் தம்மிடம் * பொங்குநீர்ச்

செங்கயல் திளைக்கும் சுனைத், திருவேங்கடம் அடை நெஞ்சமே !           1.8.1                திருவேங்கடம் திருப்பதி

பள்ளியாவது, பாற்கடல் அரங்கம் * இரங்க வன்பேய் முலை

பிள்ளையா யுயிருண்ட எந்தை பிரானவன் பெருகுமிடம் *

வெள்ளியான் கரியான், மணிநிறவண்ணன் என்றெண்ணி *நாள்தொறும்

தெள்ளியார் வணங்கும் மலைத் திருவேங்கடம் அடை நெஞ்சமே !        1.8.2                திருவரங்கம்,

திருவேங்கடம் திருப்பதி,

திருப்பாற்கடல்

நின்ற மாமருது இற்று வீழ, நடந்த நின்மலன் நேமியான் *

என்றும் வானவர் கைதொழும் இணைத் தாமரையடி யெம்பிரான் *

கன்றி மாரி பொழிந்திடக் கடிது ஆநிரைக்கு இடர் நீக்குவான் *

சென்று குன்றமெடுத்தவன் திருவேங்கடம் அடை நெஞ்சமே !      1.8.3      திருவேங்கடம் திருப்பதி

பார்த்தற்காய் அன்று பாரதம் கைசெய்திட்டு, வென்றபரஞ்சுடர்*

கோத்து அங்கு ஆயர்தம்பாடியில் குரவை பிணைந்த எம்கோவலன் *

ஏத்துவார் தம் மனத்துள்ளான் இடவெந்தை மேவிய எம்பிரான் *

தீர்த்த நீர்த்தடம் சோலைசூழ் திருவேங்கடம் அடை நெஞ்சமே !                1.8.4                திருவிடைவெந்தை,

திருவேங்கடம் திருப்பதி,

திருவாய்ப்பாடி (கோகுலம்)

வண்கையான்அவுணர்க்குநாயகன் வேள்வியில்சென்றுமாணியாய்*

மண் கையால் இரந்தான், மராமரமேழும் எய்த வலத்தினான் *

எண்கையான் இமயத்துள்ளான் இருஞ்சோலை மேவிய எம்பிரான் *

திண்கைம்மா துயர் தீர்த்தவன் திருவேங்கடம் அடை நெஞ்சமே !            1.8.5                திருமாலிருஞ்சோலை,

திருவேங்கடம் திருப்பதி,

திருப்பிரிதி

எண்திசைகளும் ஏழுலகமும் வாங்கிப் பொன்வயிற்றில் பெய்து *

பண்டுஓர்ஆலிலைப் பள்ளிகொண்டவன் பால்மதிக்கு இடர்தீர்த்தவன் *

ஒண்திற லவுணன் உரத்துகிர் வைத்தவன் ஒள்ளெயிற்றொடு *

திண்திற லரியாயவன் திருவேங்கடம் அடை நெஞ்சமே ! 1.8.6       திருவேங்கடம் திருப்பதி

பாரும் நீர் எரி காற்றினொடு ஆகாசமும் இவையாயினான் *

பேரும் ஆயிரம் பேச நின்ற பிறப்பிலி பெருகுமிடம் *

காரும் வார்பனி நீள் விசும்பிடைச் சோருமாமுகில் தோய்தரச் *

சேரும் வார்பொழில் சூழ் எழில் திருவேங்கடம் அடை நெஞ்சமே !         1.8.7                திருவேங்கடம் திருப்பதி

அம்பரம் அனல் கால் நிலம் சலமாகி நின்ற, அமரர் கோன் *

வம்புலா மலர்மேல், மலிமட மங்கை தன் கொழுநனவன் *

கொம்பினன்ன இடை மடக்குற மாதர் நீள் இதணந்தொறும் *

செம்புனம் மவை காவல் கொள் திருவேங்கடம் அடை நெஞ்சமே !        1.8.8                திருவேங்கடம் திருப்பதி

பேசுமின் திருநாமம் எட்டெழுத்தும் சொல்லி நின்று பின்னரும் *

பேசுவார் தம்மை உய்ய வாங்கிப் பிறப்பறுக்கும் பிரானிடம் *

வாசமா மலர் நாறுவார் பொழில் சூழ்தரும் உலகுக்கெல்லாம் *

தேசமாய்த் திகழும் மலைத் திருவேங்கடம் அடை நெஞ்சமே ! 1.8.9        திருவேங்கடம் திருப்பதி

செங்கயல் திளைக்கும்சுனைத் திருவேங்கடத்துஉறைசெல்வனை*

மங்கையர் தலைவன் கலிகன்றி வண்தமிழ்ச் செஞ்சொல் மாலைகள் *

சங்கை யின்றித் தரித்துரைக்க வல்லார்கள், தஞ்சமதாகவே *

வங்கமா கடல் வையம் காவலராகி வானுலகாள்வரே. 1.8.10             திருவேங்கடம் திருப்பதி

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.