Thirumozhi 1-10

பெரிய திருமொழி

முதல் பத்து

பத்தாம் திருமொழி

கண்ணார் கடல்சூழ், இலங்கைக்கு இறைவன் தன் *

திண்ணாகம் பிளக்கச், சரம் செல உய்த்தாய் ! *

விண்ணோர் தொழும், வேங்கட மாமலை மேய *

அண்ணா ! அடியேனிடரைக் களையாயே. 1.10.1 திருவேங்கடம் திருப்பதி

இலங்கைப் பதிக்கு, அன்று இறையாய *, அரக்கர்

குலம் கெட்டு அவர் மாளக், கொடிப்புள் திரித்தாய் ! *

விலங்கல் குடுமித் திருவேங்கடம் மேய *

அலங்கல் துளப முடியாய் ! அருளாயே.                 1.10.2    திருவேங்கடம் திருப்பதி

நீரார் கடலும், நிலனும் முழுதுண்டு *

ஏரால மிளந்தளிர் மேல், துயில் எந்தாய் *

சீரார் திருவேங்கட மாமலை மேய *

ஆராவமுதே ! அடியேற் கருளாயே.  1.10.3               திருவேங்கடம் திருப்பதி

உண்டாய் உறிமேல், நறுநெய் அமுதாக *

கொண்டாய் குறளாய், நிலம் ஈரடியாலே *

விண்டோய் சிகரத் திருவேங்கடம் மேய

அண்டா ! * அடியேனுக்கு அருள்புரியாயே. 1.10.4              திருவேங்கடம் திருப்பதி

தூணாயதனூடு அரியாய், வந்து தோன்றிப்

பேணா அவுணனுடலம், பிளந்திட்டாய் *

சேணார், திருவேங்கடமாமலை மேய *

கோணாகணையாய் ! குறிக்கொள் எனை நீயே.               1.10.5    திருவேங்கடம் திருப்பதி

மன்னா இம்மனிசப் பிறவியை நீக்கித் *

தன்னாக்கித், தன் இன்னருள் செய்யும் தலைவன் *

மின்னார் முகில்சேர், திருவேங்கடம் மேய *

என்னானை என்னப்பன், என் நெஞ்சினுளானே. 1.10.6    திருவேங்கடம் திருப்பதி

மானேய் மடநோக்கி திறத்து, எதிர்வந்த *

ஆனேழ் விடைசெற்ற, அணிவரைத் தோளா ! *

தேனே ! திருவேங்கட மாமலை மேய *

கோனே ! என் மனம் குடி கொண்டிருந்தாயே.   1.10.7    திருவேங்கடம் திருப்பதி

சேயன் அணியன், என சிந்தையுள் நின்ற

மாயன் * மணிவாளொளி, வெண் தரளங்கள் *

வேய் விண்டு உதிர், வேங்கடமாமலை மேய *

ஆயனடி யல்லது, மற்றறியேனே.     1.10.8    திருவேங்கடம் திருப்பதி

வந்தாய் என் மனம் புகுந்தாய், மன்னி நின்றாய் ! *

நந்தாத கொழுஞ் சுடரே ! எங்கள் நம்பி ! *

சிந்தாமணியே ! திருவேங்கடம் மேய எந்தாய் ! *

இனி யானுன்னை, என்றும் விடேனே.        1.10.9    திருவேங்கடம் திருப்பதி

வில்லார்மலி, வேங்கட மாமலை மேய *

மல்லார் திரள்தோள், மணிவண்ண னம்மானை *

கல்லார் திரள்தோள், கலியன் சொன்ன மாலை *

வல்லாரவர், வானவராகுவர் தாமே. 1.10.10                திருவேங்கடம் திருப்பதி

********

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.