Thirumozhi 1-9

பெரிய திருமொழி

முதல் பத்து

ஒன்பதாம் திருமொழி

தாயே தந்தை யென்றும், தாரமே கிளை மக்களென்றும் *

நோயே பட்டொழிந்தே னுன்னைக் காண்பதோ ராசையினால் *

வேயேய் பூம்பொழில் சூழ், விரையார் திருவேங்கடவா ! *

நாயேன் வந்தடைந்தேன், நல்கியாளென்னைக் கொண்டருளே.        1.9.1      திருவேங்கடம் திருப்பதி

மானேய் கண்மடவார், மயக்கில் பட்டு * மாநிலத்து

நானே நானாவித நரகம் புகும், பாவம் செய்தேன் *

தேனேய் பூம்பொழில் சூழ், திருவேங்கடமாமலை * என்

ஆனாய் ! வந்தடைந்தேன், அடியேனை ஆட்கொண்டருளே.                1.9.2      திருவேங்கடம் திருப்பதி

கொன்றேன் பல்லுயிரைக் குறிக்கோளொன் றிலாமையினால் *

என்றேனும் இரந்தார்க்கு, இனிதாக உரைத்தறியேன் *

குன்றேய் மேகமதிர், குளிர் மாமலை வேங்கடவா ! *

அன்றே வந்தடைந்தேன், அடியேனை ஆட்கொண்டருளே. 1.9.3          திருவேங்கடம் திருப்பதி

குலந்தா னெத்தனையும் பிறந்தே யிறந்தெய்த் தொழிந்தேன் *

நலந்தா னொன்றுமிலேன், நல்லதோரறம் செய்துமிலேன் *

நிலம் தோய் நீள்முகில் சேர், நெறியார் திருவேங்கடவா ! *

அலந்தேன் வந்தடைந்தேன், அடியேனை ஆட்கொண்டருளே. 1.9.4 திருவேங்கடம் திருப்பதி

எப்பாவம் பலவும், இவையே செய்திளைத் தொழிந்தேன் *

துப்பா ! நின்னடியே, தொடர்ந் தேத்தவும் கிற்கின்றிலேன் *

செப்பார் திண்வரைசூழ், திருவேங்கடமாமலை * என்

அப்பா ! வந்தடைந்தேன், அடியேனை ஆட்கொண்டருளே. 1.9.5          திருவேங்கடம் திருப்பதி

மண்ணாய் நீரெரிகால், மஞ்சுலாவும் ஆகாசமுமாம் *

புண்ணாராக்கை தன்னுள், புலம்பித் தளர்ந்தெய்த் தொழிந்தேன் *

விண்ணார் நீள்சிகர, விரையார் திருவேங்கடவா ! *

அண்ணா ! வந்தடைந்தேன், அடியேனை ஆட்கொண்டருளே. 1.9.6  திருவேங்கடம் திருப்பதி

தெரியேன் பாலகனாய்ப், பல தீமைகள் செய்துமிட்டேன் *

பெரியேனாயின பின், பிறர்க்கே உழைத்து ஏழையானேன் *

கரிசேர் பூம்பொழில் சூழ், கனமாமலை வேங்கடவா *

அரியே ! வந்தடைந்தேன், அடியேனை ஆட்கொண்டருளே. 1.9.7      திருவேங்கடம் திருப்பதி

நோற்றேன் பல்பிறவி, நுன்னைக் காண்பதோ ராசையினால் *

ஏற்றேன் இப்பிறப்பே, இடருற்றனன் எம்பெருமான் ! *

கோல்தேன் பாய்ந்தொழுகும், குளிர்சோலை சூழ் வேங்கடவா ! *

ஆற்றேன் வந்தடைந்தேன், அடியேனை ஆட்கொண்டருளே.               1.9.8      திருவேங்கடம் திருப்பதி

பற்றேல் ஒன்றுமிலேன், பாவமே செய்து பாவியானேன் *

மற்றேலொன் றறியேன், மாயனே ! எங்கள் மாதவனே !

கல்தேன் பாய்ந்தொழுகும், கமலச் சுனை வேங்கடவா ! *

அற்றேன் வந்தடைந்தேன், அடியேனை ஆட்கொண்டருளே.                1.9.9      திருவேங்கடம் திருப்பதி

கண்ணா யேழுலகுக்குயிராய, எங்கார் வண்ணனை *

விண்ணோர் தாம் பரவும், பொழில் வேங்கட வேதியனை *

திண்ணார் மாடங்கள் சூழ், திருமங்கையர் கோன் கலியன் *

பண்ணார் பாடல் பத்தும், பயில்வார்க்கில்லை பாவங்களே. 1.9.10    திருவேங்கடம் திருப்பதி

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.