Thiruvoymozhi 9-1

திருவாய்மொழி

ஒன்பதாம் பத்து

முதல் திருவாய்மொழி

கொண்ட பெண்டிர் மக்களுற்றார், சுற்றத்தவர் பிறரும் *

கண்டதோடு பட்டதல்லால், காதல் மற்று யாதுமில்லை *

எண் திசையும் கீழும் மேலும், முற்றவும் உண்ட பிரான் *

தொண்டரோமாய் உய்யலல்லால், இல்லை கண்டீர் துணையே.    9.1.1

துணையும் சார்வு மாகுவார் போல், சுற்றத்தவர் பிறரும் *

அணைய வந்த ஆக்கமுண்டேல், அட்டைகள் போல் சுவைப்பர் *

கணை யொன்றாலே ஏழ் மரமும் எய்த, எம் கார் முகிலைப் *

புணை யென்றுய்யப் போகலல்லால், இல்லை கண்டீர் பொருளே.           9.1.2

பொருள் கையுண்டாய்ச் செல்லக்காணில் போற்றி என்று ஏற்றெழுவர்*

இருள் கொள் துன்பத்தின்மை காணில் என்னே ! என்பாருமில்லை *

மருள் கொள் செய்கை அசுரர் மங்க வடமதுரைப் பிறந்தாற்கு *

அருள் கொளாளாய் உய்யலல்லால் இல்லை கண்டீர் அரணே.   9.1.3      வடமதுரை

அரணமாவர் அற்ற காலைக்கு, என்றென் றமைக்கப் பட்டார் * இரணங் கொண்ட தெப்பராவர், இன்றி யிட்டாலு மஃதே *

வருணித் தென்னே? வடமதுரைப் பிறந்தவன் வண் புகழே *

சரணென் றுய்யப் போகலல்லால், இல்லை கண்டீர் சதிரே.          9.1.4      வடமதுரை

சதுரமென்று தம்மைத் தாமே, சம்மதித்து இன்மொழியார் *

மதுர போகம் துற்றவரே, வைகி மற்றொன்றுறுவர் *

அதிர் கொள் செய்கை அசுரர் மங்க, வடமதுரைப் பிறந்தாற்கு *

எதிர் கொளாளாய் உய்யலல்லால், இல்லை கண்டீர் இன்பமே.    9.1.5      வடமதுரை

இல்லை கண்டீர் இன்பம் அந்தோ ! உள்ளது நினையாதே *

தொல்லையார்க ளெத்தனைவர் தோன்றிக் கழிந்தொழிந்தார் ? *

மல்லை மூதூர் வடமதுரைப் பிறந்தவன், வண்புகழே *

சொல்லி யுய்யப் போகலல்லால், மற்றொன் றில்லை சுருக்கே.  9.1.6      வடமதுரை

மற்றொன்றில்லை சுருங்கச்சொன்னோம், மாநிலத்தெவ்வுயிர்க்கும்*

சிற்ற வேண்டா சிந்திப்பே யமையும், கண்டீர்கள் அந்தோ ! *

குற்றமன்று எங்கள் பெற்றத் தாயன் வடமதுரைப் பிறந்தான் *

குற்றமில் சீர் கற்று வைகல் வாழ்தல், கண்டீர் குணமே.    9.1.7      வடமதுரை

வாழ்தல் கண்டீர் குணமிதந்தோ ? மாயவனடி பரவி *

போழ்து போக உள்ளகிற்கும், புன்மை யிலாதவர்க்கு *

வாழ் துணையா, வடமதுரைப் பிறந்தவன் வண்புகழே *

வீழ் துணையாப் போமிதனில், யாதுமில்லை மிக்கதே.         9.1.8      வடமதுரை

யாதுமில்லை மிக்கதனில், என்றென்றது கருதிக் *

காது செய்வான் கூதை செய்து, கடை முறை வாழ்க்கையும் போம் *

மாதுகிலின் கொடிக் கொள் மாட, வடமதுரைப் பிறந்த *

தாது சேர் தோள் கண்ணலல்லால், இல்லை கண்டீர் சரணே.        9.1.9      வடமதுரை

கண்ணலல்லால் இல்லை கண்டீர் சரண், அது நிற்க வந்து *

மண்ணின் பாரம் நீக்குதற்கே, வடமதுரைப் பிறந்தான் *

திண்ணமா நும்முடைமை உண்டேல், அவனடி சேர்த்து உய்ம்மினோ *

எண்ண வேண்டா நும்மதாதும், அவனன்றி மற்றில்லையே.         9.1.10    வடமதுரை

ஆதுமில்லை மற்றவனில் என்று, அதுவே துணிந்து *

தாதுசேர் தோள் கண்ணனைக் குருகூர்ச் சடகோபன் சொன்ன *

தீதிலாத வொண்தமிழ்கள், இவையாயிரத்துள் இப்பத்தும் *

ஓதவல்ல பிராக்கள், நம்மையாளுடையார்கள் பண்டே.     9.1.11    வடமதுரை

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.