Thiruvoymozhi 9-2

திருவாய்மொழி

ஒன்பதாம் பத்து

இரண்டாம் திருவாய்மொழி

பண்டை நாளாலே நின் திருவருளும்

பங்கயத்தாள் திருவருளும்

கொண்டு * நின் கோயில் சீய்த்துப் பல்படிகால்

குடி குடி வழிவந்து ஆட்செய்யும் *

தொண்டரோர்க் கருளிச் சோதி வாய் திறந்து

உன் தாமரைக் கண்களால் நோக்காய் *

தெண் திரைப் பொருநல் தண்பணை சூழ்ந்த

திருப்புளிங்குடிக் கிடந்தானே !         9.2.1      திருப்புளிங்குடி

குடிக்கிடந் தாக்கம் செய்து, நின் தீர்த்த

அடிமைக் குற்றேவல் செய்து * உன் பொன்

அடிக் கடவாதே வழி வருகின்ற

அடியரோர்க் கருளி * நீ ஒரு நாள்

படிக்களவாக நிமிர்த்த, நின் பாத

பங்கயமே தலைக்கணியாய் *

கொடிக் கொள் பொன் மதிள் சூழ் குளிர் வயல் சோலைத்

திருப்புளிங்குடிக் கிடந்தானே.          9.2.2      திருப்புளிங்குடி

கிடந்த நாள் கிடந்தாய்! எத்தனை காலம்

கிடத்தி ?, உன் திருவுடம்பு அசையத் *

தொடர்ந்து குற்றேவல் செய்து, தொல்லடிமை

வழிவரும் தொண்டரோர்க் கருளித் *

தடங்கொள் தாமரைக் கண் விழித்து

நீ எழுந்து, உன் தாமரை மங்கையும் நீயும் *

இடங்கொள் மூவுலகும் தொழ இருந்தருளாய்

திருப்புளிங்குடிக் கிடந்தானே.      9.2.3      திருப்புளிங்குடி

புளிங்குடிக் கிடந்து வரகுணமங்கை யிருந்து

வைகுந்தத்துள் நின்று *

தெளிந்த என் சிந்தை யகங் கழியாதே

என்னை யாள்வாய் ! எனக்கருளி *

நளிர்ந்த சீருலகம் மூன்றுடன் வியப்ப

நாங்கள் கூத்தாடி நின்றார்ப்பப் *

பளிங்கு நீர் முகிலின் பவளம் போல்

கனிவாய் சிவப்ப நீ காண வாராயே.          9.2.4      திருப்புளிங்குடி,

வைகுந்தம்,

வரகுணமங்கை

பவளம் போல் கனி வாய் சிவப்ப

நீ காண வந்து நின் பல்நிலா முத்தம் *

தவழ் கதிர் முறுவல் செய்து, நின் திருக்கண்

தாமரை தயங்க நின்றருளாய் *

பவள நன் படர்க் கீழ்ச் சங்குறை பொருநல்

தண் திருப்புளிங்குடிக் கிடந்தாய் ! *

கவள மாகளிற்றி னிடர் கெடத், தடத்துக்

காய்சினப் பறவை யூர்ந்தானே !     9.2.5      திருப்புளிங்குடி

காய்சினப் பறவை யூர்ந்து, பொன் மலையின்

மீமிசைக் கார் முகில் போல *

மாசின மாலி மாலிமான், என்று

அங்கு அவர்படக் கனன்று முன் நின்ற *

காய்சின வேந்தே ! கதிர் முடியானே !

கலிவயல் திருப்புளிங்குடியாய் ! *

காய்சின வாழி சங்கு வாள் வில்

தண்டேந்தி, எம்மிடர் கடிவானே !   9.2.6      திருப்புளிங்குடி

எம்மிடர் கடிந்து இங்கு என்னை யாள்வானே !

இமையவர் தமக்கு மாங்கனையாய் ! *

செம்மடல் மலரும் தாமரைப் பழனத்

தண் திருப்புளிங்குடிக் கிடந்தாய் ! *

நம்முடை யடியர் கவ்வை கண்டுகந்து

நாம் களித்துள நலங்கூர *

இம்மடவுலகர் காண நீ ஒருநாள்

இருந்திடாய் எங்கள் கண் முகப்பே.            9.2.7      திருப்புளிங்குடி

எங்கள் கண் முகப்பே உலகர்களெல்லாம்

இணையடி தொழுதெழு திறைஞ்சித் *

தங்களன்பாரத் தமது சொல் வலத்தால்

தலைத் தலைச் சிறந்து பூசிப்ப *

திங்கள் சேர் மாடத் திருப்புளிங்குடியாய் !

திருவைகுந்தத்துள்ளாய் ! தேவா! *

இங்கண் மாஞாலத் திதனுளும் ஒரு நாள்

இருந்திடாய், வீற்றிடங் கொண்டே.        9.2.8      திருப்புளிங்குடி,

வைகுந்தம்

வீற்றிடங் கொண்டு வியன் கொள்மா ஞாலத்து

இதனுளும் இருந்திடாய் * அடியோம்

போற்றி யோவாதே கண்ணிணை குளிரப்

புதுமல ராகத்தைப் பருகச் *

சேற்றிள வாளை செந்நெலூடு உகளும்

செழும்பணைத் திருப்புளிங்குடியாய் ! *

கூற்றமாய் அசுரர் குலமுதலரிந்த

கொடுவினைப் படைகள் வல்லானே !     9.2.9      திருப்புளிங்குடி

கொடுவினைப் படைகள் வல்லையாய்

அமரர்க்கு இடர் கெட அசுரர்கட்கு இடர் செய் *

கடுவினை நஞ்சே ! என்னுடை யமுதே !

கலிவயல் திருப்புளிங்குடியாய் ! *

வடிவிணை யில்லா மலர்மகள், மற்றை

நிலமகள் பிடிக்கும் மெல்லடியைக்*

கொடுவினை யேனும் பிடிக்க, நீ ஒரு நாள்

கூவுதல் வருதல் செய்யாயே.     9.2.10    திருப்புளிங்குடி

கூவுதல் வருதல் செய்திடாயென்று

குரை கடல் கடைந்தவன் தன்னை *

மேவி நன்கமர்ந்த வியன்புனல் பொருநல்

வழுதிநாடன் சடகோபன் *

நாவியல் பாடலாயிரத்துள்ளும்

இவையுமோர் பத்தும் வல்லார்கள் *

ஓவுதலின்றி உலகம் மூன்றளந்தான்

அடியிணை, உள்ளத்தோர்வாரே.     9.2.11    திருப்புளிங்குடி

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.