Thiruvoymozhi 9-5

திருவாய்மொழி

ஒன்பதாம் பத்து

ஐந்தாம் திருவாய்மொழி

இன்னுயிர்ச் சேவலும், நீரும் கூவிக்கொண்டு இங்குஎத்தனை *

என்னுயிர் நோவ மிழற்றேன்மின், குயிற்பேடைகாள் ! *

என்னுயிர்க் கண்ணபிரானை, நீர் வரக் கூவுகிலீர் *

என்னுயிர் கூவிக் கொடுப்பார்க்கும், இத்தனை வேண்டுமோ ?       9.5.1

இத்தனை வேண்டுவதன்று அந்தோ ! அன்றிற் பேடைகாள் ! *

எத்தனை நீரும் நுஞ்சேவலும், கரைந்தேங்குதிர் *

வித்தகன் கோவிந்தன், மெய்யனல்லன் ஒருவர்க்கும் *

அத்தனையாம், இனி என்னுயிர் அவன் கையதே.   9.5.2

அவன் கையதே எனதாருயிர், அன்றிற் பேடைகாள் ! *

எவன் சொல்லி நீர் குடைந்தாடுதிர், புடை சூழவே *

தவம் செய்தில்லா வினையாட்டியேன், உயிர் இங்குண்டோ? *

எவன் சொல்லி நிற்றும் ? நும் ஏங்கு கூக்குரல் கேட்டுமே.           9.5.3

கூக்குரல் கேட்டும், நம் கண்ணன் மாயன் வெளிப்படான் *

மேற்கிளை கொள்ளேன்மின், நீரும் சேவலும் கோழிகாள் ! *

வாக்கும் மனமும் கருமமும், நமக்காங்கதே *

ஆக்கையும் ஆவியும், அந்தரம் நின்றுழலுமே.  9.5.4

அந்தரம் நின்றுழல்கின்ற, யானுடைப் பூவைகாள் ! *

நுந்திறத்தேதும் இடை யில்லை, குழறேன்மினோ *

இந்திர ஞாலங்கள் காட்டி, இவ்வேழுலகும் கொண்ட

நம் திருமார்பன் * நம்மாவியுண்ண, நன்கெண்ணினான்.         9.5.5

நன்கெண்ணி நான் வளர்த்த, சிறுகிளிப் பைதலே ! *

இன்குரல் நீ மிழற்றேல், என்னாருயிர்க் காகுத்தன் *

நின் செய்ய வாயொக்கும் வாயன், கண்ணன் கை காலினன் *

நின் பசுஞ்சாம நிறத்தன், கூட்டுண்டு நீங்கினான்.        9.5.6

கூட்டுண்டு நீங்கிய, கோலத் தாமரைக் கண் செவ்வாய் *

வாட்டமிலென் கருமாணிக்கம், கண்ணன் மாயன்போல் *

கோட்டிய வில்லொடு மின்னு, மேகக் குழாங்கள்காள் ! *

காட்டேன்மின் நும்முரு, என்னுயிர்க்கு அது காலனே.         9.5.7

உயிர்க்கது காலனென்று, உம்மை யானிரந்தேற்கு * நீர்

குயிற் பைதல்காள் ! கண்ணன் நாமமே குழறிக் கொன்றீர் *

தயிர்ப் பழஞ் சோற்றொடு, பாலடிசிலும் தந்து * சொல்

பயிற்றிய நல்வள மூட்டினீர், பண்புடையீரே !  9.5.8

பண்புடை வண்டொடு தும்பிகாள்!, பண் மிழற்றேன்மின் *

புண்புரை வேல்கொடு குத்தாலொக்கும், நும் இன்குரல் *

தண்பெருநீர்த் தடந்தாமரை, மலர்ந்தா லொக்கும்

கண்பெருங் கண்ணன் * நம்மாவி யுண்டெழ நண்ணினான்.             9.5.9

எழ நண்ணி நாமும் நம் வான நாடனோ டொன்றினோம் *

பழன நன்னாரைக் குழாங்கள்காள்!, பயின் றென்னினி? *

இழை நல்ல வாக்கையும், பையவே புயக்கற்றது *

தழை நல்ல வின்பந் தலைப் பெய்து, எங்கும் தழைக்கவே.        9.5.10

இன்பந் தலைப் பெய்து, எங்குந் தழைத்த பல்லூழிக்குத் *

தன் புகழேத்தத், தனக்கருள் செய்த மாயனைத் *

தென் குருகூர்ச் சடகோபன், சொல்லாயிரத்துள் இவை *

ஒன்பதோ டொன்றுக்கும், மூவுலகும் உருகுமே.         9.5.11

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.