Thiruvoymozhi 9-4

திருவாய்மொழி

ஒன்பதாம் பத்து

நான்காம் திருவாய்மொழி

மையார் கருங்கண்ணி, கமல மலர் மேல்

செய்யாள் * திருமார்வினில் சேர், திருமாலே ! *

வெய்யார் சுடராழி, சுரிசங்க மேந்தும் கையா ! *

உன்னைக் காணக் கருதும், என் கண்ணே.      9.4.1

கண்ணே !, உன்னைக் காணக் கருதி * என்னெஞ்சம்

எண்ணே கொண்ட, சிந்தையதாய் நின்று இயம்பும் *

விண்ணோர் முனிவர்க்கு, என்றும் காண்பரியாயை *

நண்ணா தொழியேன் என்று, நான் அழைப்பனே.       9.4.2

அழைக்கின்ற அடிநாயேன், நாய் கூழை வாலால் *

குழைக்கின்றது போல, என்னுள்ளம் குழையும் *

மழைக்கு அன்று குன்றமெடுத்து ஆநிரை காத்தாய் *

பிழைக்கின்ற தருளென்று, பேதுறுவனே.           9.4.3

உறுவது இதுவென்று, உனக்கு ஆட்பட்டு * நின் கண்

பெறுவது எது கொலென்று பேதையேன் நெஞ்சம் *

மறுகல் செய்யும், வானவர் தானவர்க்கு என்றும் *

அரிவதரிய, அரியாய அம்மானே !  9.4.4

அரியாய அம்மானை, அமரர் பிரானைப் *

பெரியானைப், பிரமனை முன் படைத்தானை *

வரிவா ளரவினனைப், பள்ளி கொள்கின்ற *

கரியான் கழல் காணக், கருதும் கருத்தே.       9.4.5

கருத்தே !, உன்னைக் காணக் கருதி * என்னெஞ்சத்து

இருத்தாக இருத்தினேன், தேவர்கட்கெல்லாம்

விருத்தா ! * விளங்குஞ் சுடர்ச் சோதி, உயரத்

தொருத்தா ! * உன்னை யுள்ளும், என்னுள்ளம் உகந்தே.   9.4.6

உகந்தே உன்னை, உள்ளும் என்னுள்ளத்து * அகம் பால்

அகந்தான், அமர்ந்தே இடங் கொண்ட அமலா ! *

மிகுந்தானவன், மார்வகலம் இருகூறா

நகந்தாய் * நரசிங்கமதாய வுருவே.        9.4.7

உருவாகிய, ஆறு சமயங்கட் கெல்லாம் *

பொருவாகி நின்றான், அவன் எல்லாப் பொருட்கும் *

அருவாகிய ஆதியைத், தேவர்கட் கெல்லாம் *

கருவாகிய கண்ணனைக், கண்டு கொண்டேனே.         9.4.8

கண்டு கொண்டு, என் கண்ணிணை யாரக் களித்துப் *

பண்டை வினையாயின, பற்றோடறுத்துத் *

தொண்டர்க் கமுதுண்ணச், சொல் மாலைகள் சொன்னேன் *

அண்டத்தமரர் பெருமான், அடியேனே.    9.4.9

அடியானிவனென்று, எனக்காரருள் செய்யும்

நெடியானை * நிறை புகழ், அஞ்சிறைப் புள்ளின்

கொடியானைக் * குன்றாமல் உலகமளந்த

அடியானை * அடைந்து, அடியேன் உய்ந்தவாறே.      9.4.10

ஆறா மதயானை, அடர்த்தவன் தன்னைச் *

சேறார் வயல், தென் குருகூர்ச் சடகோபன் *

நூறே சொன்ன, ஓராயிரத்துள் இப்பத்தும் *

ஏறே தரும், வானவர் தம் இன்னுயிர்க்கே.      9.4.11

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.