Thiruvoymozhi 9-6

திருவாய்மொழி

ஒன்பதாம் பத்து

ஆறாம் திருவாய்மொழி

உருகுமால் நெஞ்சம், உயிரின் பரமன்றிப் *

பெருகுமால் வேட்கையும், என் செய்கேன் தொண்டனேன் *

தெரு வெல்லாம் காவி கமழ், திருக்காட்கரை *

மருவிய மாயன்தன், மாயம் நினைதொறே.      9.6.1      திருக்காட்கரை

நினைதொறும் சொல்லும் தொறும், நெஞ்சு இடிந்துகும் *

வினைகொள் சீர் பாடிலும், வேம் எனதாருயிர் *

சுனைகொள் பூஞ்சோலைத், தென்காட்கரை யென்னப்பா ! *

நினைகிலேன் நான், உனக்கு ஆட்செய்யும் நீர்மையே.            9.6.2      திருக்காட்கரை

நீர்மையால், நெஞ்சம் வஞ்சித்துப் புகுந்து *

என்னை ஈர்மை செய்து, என்னுயிராய் என்னுயி ருண்டான் *

சீர்மல்கு சோலைத், தென்காட்கரை யென்னப்பன் *

கார்முகில் வண்ணன்தன், கள்வம் அறிகிலேன்.         9.6.3      திருக்காட்கரை

அறிகிலேன், தன்னுள் அனைத்துலகும் நிற்க *

நெறிமையால் தானும், அவற்றுள் நிற்கும் பிரான் *

வெறி கமழ் சோலைத், தென் காட்கரை யென்னப்பன் *

சிறிய என்னா ருயிருண்ட, திருவருளே.  9.6.4      திருக்காட்கரை

திருவருள் செய்பவன் போல, என்னுள் புகுந்து *

உருவமும் ஆருயிரும், உடனே யுண்டான் *

திருவளர் சோலைத், தென்காட்கரை யென்னப்பன் *

கருவளர் மேனி, என் கண்ணன் கள்வங்களே.    9.6.5      திருக்காட்கரை

என் கண்ணன் கள்வம், எனக்குச் செம்மாய் நிற்கும் *

அங்கண்ணனுண்ட, என்னுருயிர்க் கோது இது *

புன்கண்மை யெய்திப், புலம்பி இராப்பகல் *

என் கண்ணனென்று, அவன் காட்கரை யேத்துமே.       9.6.6      திருக்காட்கரை

காட்கரை யேத்தும், அதனுள் கண்ணா ! என்னும் *

வேட்கை நோய் கூர, நினைந்து கரைந்துகும் *

ஆட்கொள்வா னொத்து, என்னுயிருண்ட மாயனால்*

கோட்குறை பட்டது, என்னாருயிர் கோளுண்டே.           9.6.7      திருக்காட்கரை

கோளுண்டானன்றி வந்து, என்னுயிர் தானுண்டான் *

நாளு நாள் வந்து, என்னை முற்றவும் தானுண்டான் *

காளநீர் மேகத், தென்காட்கரை யென்னப்பற்கு *

ஆளன்றே பட்டது, என்னாருயிர் பட்டதே.          9.6.8      திருக்காட்கரை

ஆருயிர் பட்டது, எனதுயிர் பட்டது? *

பேரிதழ்த் தாமரைக் கண், கனிவாயது * ஓர்

காரெழில் மேகத், தென் காட்கரை கோயில் கொள் *

சீரெழில் நால் தடந்தோள், தெய்வ வாரிக்கே.   9.6.9      திருக்காட்கரை

வாரிக் கொண்டு உன்னை, விழுங்குவன் காணிலென்று *

ஆர்வுற்ற என்னை யொழிய, என்னின் முன்னம்

பாரித்துத் * தான் என்னை, முற்றப் பருகினான் *

காரொக்கும் காட்கரை யப்பன், கடியனே.        9.6.10    திருக்காட்கரை

கடியனாய்க், கஞ்சனைக் கொன்ற பிரான் தன்னைக் *

கொடிமதிள், தென்குருகூர்ச் சடகோபன் சொல் *

வடிவமை யாயிரத்து, இப்பத்தினால் * சன்மம்

முடிவெய்தி நாசங் கண்டீர்கள், எங்கானலே.   9.6.11    திருக்காட்கரை

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.