Thiruvoymozhi 9-10

திருவாய்மொழி

ஒன்பதாம் பத்து

பத்தாம் திருவாய்மொழி

மாலை நண்ணித், தொழுதெழுமினோ வினை கெடக் *

காலை மாலை, கமல மலரிட்டு நீர் *

வேலை மோதும் மதிள் சூழ், திருக்கண்ணபுரத்து *

ஆலின் மேலால் அமர்ந்தான், அடியிணைகளே.       9.10.1    திருக்கண்ணபுரம்

கள்ளவிழும் மலரிட்டு, நீர் இறைஞ்சுமின் *

நள்ளி சேரும் வயல் சூழ், கிடங்கின் புடை *

வெள்ளி யேய்ந்த மதிள் சூழ், திருக்கண்ணபுரம்

உள்ளி * நாளும் தொழுதெழுமினோ, தொண்டரே !     9.10.2    திருக்கண்ணபுரம்

தொண்டர் ! நுந்தம் துயர் போக, நீர் ஏகமாய் *

விண்டு வாடா மலரிட்டு, நீர் இறைஞ்சுமின் *

வண்டு பாடும் பொழில் சூழ், திருக்கண்ணபுரத்து *

அண்ட வாணன் அமரர் பெருமானையே.         9.10.3    திருக்கண்ணபுரம்

மானை நோக்கி, மடப் பின்னை தன் கேள்வனைத் *

தேனை, வாடா மலரிட்டு நீர் இறைஞ்சுமின் *

வானை யுந்தும் மதிள் சூழ், திருக்கண்ணபுரம் *

தான் நயந்த பெருமான், சரணாகுமே.       9.10.4    திருக்கண்ணபுரம்

சரணமாகும், தனதாளடைந்தார்க் கெல்லாம் *

மரணமானால், வைகுந்தம் கொடுக்கும் பிரான் *

அரணமைந்த மதிள் சூழ், திருக்கண்ணபுரத்

தரணியாளன் * தனதன்பர்க்கு, அன்பாகுமே.        9.10.5    திருக்கண்ணபுரம்

அன்பனாகும், தனதாளடைந்தார்க்கெல்லாம் *

செம்பொனாகத்து, அவுணனுடல் கீண்டவன் *

நன்பொனேய்ந்த மதிள் சூழ், திருக்கண்ணபுரத்து

அன்பன் * நாளும், தன மெய்யர்க்கு மெய்யனே.            9.10.6    திருக்கண்ணபுரம்

மெய்யனாகும், விரும்பித் தொழுவார்க்கெல்லாம் *

பொய்யனாகும், புறமே தொழுவார்க்கெல்லாம் *

செய்யில் வாளையுகளும், திருக்கண்ணபுரத்து

ஐயன் * ஆகத்தணைப்பார்கட்கு, அணியனே.       9.10.7    திருக்கண்ணபுரம்

அணியனாகும், தனதாளடைந்தார்க்கெல்லாம் *

பிணியும் சாரா, பிறவி கெடுத்தாளும் *

மணிபொனேய்ந்த மதிள் சூழ், திருக்கண்ணபுரம்

பணிமின் * நாளும், பரமேட்டி தன் பாதமே.      9.10.8    திருக்கண்ணபுரம்

பாதம் நாளும் பணியத் தணியும் பிணி *

ஏதம் சாரா, எனக்கேல் இனியென் குறை ? *

வேத நாவர் விரும்பும், திருக்கண்ணபுரத்து

ஆதியானை * அடைந்தார்க்கு, அல்லலில்லையே.       9.10.9    திருக்கண்ணபுரம்

இல்லை யல்லல், எனக்கேல் இனி என் குறை ? *

அல்லி மாதரமரும், திருமார்பினன் *

கல்லிலேய்ந்த மதிள் சூழ், திருக்கண்ணபுரம்

சொல்ல * நாளும், துயர் பாடு சாராவே.           9.10.10  திருக்கண்ணபுரம்

பாடு சாரா வினை, பற்றற வேண்டுவீர் ! *

மாட நீடு, குருகூர்ச் சடகோபன் * சொல்

பாடலான தமிழ் ஆயிரத்துள், இப்பத்தும்

பாடியாடிப் * பணிமின், அவன் தாள்களே.        9.10.11  திருக்கண்ணபுரம்

**********

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.