[highlight_content]

Kanninum Ciruttambu

மதுரகவியாழ்வார் அருளிச்செய்த

கண்ணிநுண்சிறுத்தாம்பு

தனியன்கள்

(நாதமுனிகள் அருளிச்செய்தவை(

அவிதிதவிஷயாந்தரச்சடாரே

உபநிஷதாம்உபகாநமாத்ரபோக|

அபிசகுணவசாத்ததேகசேஷீ

மதுரகவிர்ஹ்ருதயேமமாவிரஸ்து.||

வேறொன்றும்நானறியேன் வேதம்தமிழ்செய்த*

மாறன்சடகோபன் வண்குருகூர் – ஏறு எங்கள்

வாழ்வாமென்றேத்தும் மதுரகவியார் * எம்மை

ஆள்வார்அவரேயரண்.

கண்ணி நுண் சிறுத் தாம்பினால், கட்டுண்ணப்

பண்ணிய பெருமாயன் * என்னப்பனில்,

நண்ணித் தென்குருகூர் நம்பி யென்றக்கால் *

அண்ணிக்கும் அமுதூறும், என் நாவுக்கே. 1   1

நாவினால் நவிற்றி, இன்ப மெய்தினேன் *

மேவினேன், அவன் பொன்னடி மெய்ம்மையே *

தேவு மற்றறியேன், குருகூர் நம்பி *

பாவினின்னிசை, பாடித் திரிவனே. 2       2

திரிதந்தாகிலும், தேவ பிரானுடைக் *

கரிய கோலத் திருவுருக் காண்பன் நான் *

பெரிய வண்குருகூர் நகர் நம்பிக்கு, ஆள்

உரியனாய் * அடியேன் பெற்ற, நன்மையே. 3            3

நன்மையால் மிக்க, நான்மறையாளர்கள் *

புன்மையாகக், கருதுவராதலின் *

அன்னையாய் அத்தனாய், என்னை யாண்டிடும்

தன்மையான் * சடகோபன், என் நம்பியே. 4   4

நம்பினேன், பிறர் நன் பொருள் தன்னையும் *

நம்பினேன், மடவாரையும் முன்னெலாம் *

செம்பொன் மாடத், திருக்குருகூர் நம்பிக்கு

அன்பனாய் * அடியேன் சதிர்த்தேன் இன்றே. 5         5

இன்று தொட்டும், எழுமையும் எம்பிரான் *

நின்று தன் புகழ், ஏத்த வருளினான் *

குன்ற மாடத், திருக்குருகூர் நம்பி *

என்றும் என்னை, இகழ்விலன் காண்மினே. 6            6

கண்டு கொண்டு என்னைக், காரிமாறப் பிரான் *

பண்டை வல்வினை, பாற்றி யருளினான் *

எண் திசையும், அறிய இயம்புகேன் *

ஒண் தமிழ்ச், சடகோப னருளையே. 7   7

அருள் கொண்டாடும், அடியவர் இன்புற *

அருளினான், அவ்வரு மறையின் பொருள் *

அருள் கொண்டு, ஆயிரம் இன்தமிழ் பாடினான் *

அருள் கண்டீர், இவ்வுலகினில் மிக்கதே. 8      8

மிக்க வேதியர், வேதத்தினுட் பொருள் *

நிற்கப் பாடி, என் நெஞ்சுள் நிறுத்தினான் *

தக்க சீர்ச், சடகோபன் என் நம்பிக்கு * ஆள்

புக்க காதல், அடிமைப் பயனன்றே. 9      9

பயனன்றாகிலும், பாங்கல்லராகிலும் *

செயல் நன்றாகத் திருத்திப், பணி கொள்வான் *

குயில் நின்றார் பொழில் சூழ் குருகூர் நம்பி *

முயல்கின்றேன், உன்தன் மொய்கழற் கன்பையே. 10       10

அன்பன், தன்னை அடைந்தவர்கட் கெல்லாம்

அன்பன் * தென்குருகூர் நகர் நம்பிக்கு *

அன்பனாய், மதுரகவி சொன்ன சொல்,

நம்புவார் பதி * வைகுந்தம் காண்மினே. 11    11

கண்ணிநுண்சிறுத்தாம்பு முற்றும்.

மதுரகவியாழ்வார் திருவடிகளே சரணம்.

முதலாயிரம் முற்றும்.

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.