Thiruvoymozhi 1-1

திருவாய்மொழி

ஸ்ரீ:

நம்மாழ்வார் அருளிச்செய்த

திருவாய்மொழி தனியன்கள்

 

(நாதமுனிகள் அருளிச்செய்தது)

பக்தாம்ருதம் விஶ்வஜநாநுமோதநம்

ஸர்வார்த்ததம் ஸ்ரீஶடகோபவாங்மயம்

ஸஹஸ்ரஶாகோபநிஷத்ஸமாகமம்

நமாம்யஹம் த்ராவிடவேதஸாகரம்

(ஈஶ்வரமுனிகள் அருளிச்செய்தது)

திருவழுதிநாடென்றும் தென்குருகூரென்றும்*

மருவினியவண்பொருநலென்றும்* – அருமறைகள்

அந்தாதிசெய்தானடியிணையே எப்பொழுதும்*

சிந்தியாய்!நெஞ்சே! தெளிந்து,

(சொட்டைநம்பிகள் அருளிச்செய்தது)

மனத்தாலும்வாயாலும் வண்குருகூர்பேணும்*

இனத்தாரையல்லாதிறைஞ்சேன்* – தனத்தாலும்

ஏதுங்குறைவிலேன் எந்தைசடகோபன்

பாதங்கள்யாமுடைய பற்று.

(அனந்தாழ்வான் அருளிச்செய்தது)

ஏய்ந்தபெருங்கீர்த்திஇராமாநுசமுனிதன்

வாய்ந்தமலர்ப்பாதம்வணங்குகின்றேன் * – ஆய்ந்தபெருஞ்

சீரார்சடகோபன்செந்தமிழ்வேதம்தரிக்கும்*

பேராதவுள்ளம்பெற.

(பட்டர் அருளிச்செய்தது)

வான்திகழும்சோலைதிளரங்கர் வண்புகழ்மேல்*

ஆன்றதமிழ்மறைகளாயிரமும்* – ஈன்ற

முதல்தாய்சடகோபன்* மொய்ம்பால்வளர்த்த

இதத்தாய்இராமானுசன்.

மிக்க இறைநிலையும் மெய்யாமுயிர்நிலையும்*

தக்கநெறியும் தடையாகித் – தொக்கியலும்*

ஊழ்வினையும் வாழ்வினையும்ஓதும்குருகையர்கோன்*

யாழினிசைவேதத்தியல்.

*****

திருவாய்மொழி

முதல் பத்து

முதல் திருவாய்மொழி

உயர்வற உயர்நல முடையவன் யவனவன் *

மயர்வற மதி நலம் அருளினன் யவனவன் *

அயர்வறும் அமரர்கள் அதிபதி யவனவன் *

துயரறு சுடரடி தொழுது எழு, என் மனனே !      1.1.1

மனனக மலமற, மலர்மிசை யெழுதரும் *

மனனுணர்வள விலன், பொறி யுணர்வவை யிலன் *

இனனுணர் முழுநலம், எதிர் நிகழ் கழிவினும் *

இனன் இலன் எனனுயிர், மிகுநரை யிலனே.    1.1.2

இலனது உடையனிது, என நினைவரியவன் *

நிலனிடை விசும்பிடை, உருவினன் அருவினன் *

புலனொடு புலனலன், ஒழிவிலன் * பரந்த அந்

நலனுடை யொருவனை, நணுகினம் நாமே.       1.1.3

நாமவனிவனுவன், அவளிவளுவளெவள் *

தாமவரிவருவர், அதுவிதுவுதுவெது *

வீமவை யிவையுவை, அவை நலம் தீங்கவை *

ஆமவை ஆயவையாய், நின்ற அவரே.    1.1.4

அவரவர் தமதமது அறிவறிவகைவகை *

அவரவர் இறையவரென, அடியடைவர்கள் *

அவரவர் இறையவர், குறைவிலர் * இறையவர்

அவரவர் விதிவழி அடைய, நின்றனரே.    1.1.5

நின்றனர் இருந்தனர், கிடந்தனர் திரிந்தனர் *

நின்றிலர் இருந்திலர், கிடந்திலர் திரிந்திலர் *

என்றுமோரியல்வினர், என நினைவரியவர் *

என்றுமோரியல்வொடு நின்ற, எம் திடரே.            1.1.6

திடவிசும்பெரி வளி நீர் நிலம், இவை மிசை *

படர் பொருள் முழுவதுமாய், அவை யவை தொறும் *

உடல் மிசை உயிரெனக் கரந்து எங்கும் பரந்து உளன் *

சுடர் மிகு சுருதியுள், இவை யுண்ட சுரனே.        1.1.7

சுரரறி வருநிலை, விண் முதல் முழுவதும் *

வரன் முதலாய், அவை முழுதுண்ட பரபரன் *

புரமொரு மூன்றெரித்து, அமரர்க்கும் அறிவியந்து *

அரனயனென, உலகழித்து அமைத்துளனே.          1.1.8

உளனெனில் உளன், அவனுருவம் இவ்வுருவுகள் *

உளனலனெனில், அவனருவம் இவ்வருவுகள் *

உளனென இலனென, இவைகுண முடைமையில் *

உளனிரு தகைமையொடு, ஒழிவிலன் பரந்தே.                1.1.9

பரந்த தண் பரவையுள் நீர் தொறும், பரந்துளன் *

பரந்த அண்டமிதென, நில விசும்பொழிவறக்

கரந்த * சிலிடந்தொறும், இடம் திகழ் பொருள் தொறும் *

கரந்தெங்கும் பரந்துளன், இவையுண்ட கரனே.               1.1.10

கரவிசும்பெரி வளி நீர் நிலம், இவை மிசை *

வரனவில் திறல் வலி, அளி பொறையாய் நின்ற *

பரனடி மேல், குருகூர்ச் சடகோபன் சொல் *

நிரனிறை யாயிரத்து, இவை பத்தும் வீடே.       1.1.11

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.